மதுராந்தகம் ஏரியை அடுத்த ஞானகிரி ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில்

இன்று எனக்கு ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ அரங்க நாத சுவாமி திருக்கோவில், ஞானகிரி மலை, மலைப்பாளையம், கருங்குழி, மதுராந்தகம் கோவில் செல்ல ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

எத்தனையோ முறை சென்னைக்கு விரைவு வழிச்சாலையில் திரும்பும்  வழியில் கடல் போன்ற மதுராந்தகம் ஏரியை கடக்கையில்  தொலைவில் இந்த ஞானகிரிமலையை பார்த்துள்ளேன், இன்று தான் இந்த மலையில் வீற்றிருக்கும் மூன்று ரங்கநாதர்களையும் ஒருங்கே சேவிக்கும் நல்வாய்ப்பு அமைந்தது.

இந்த ஞானகிரிமலைக்குச் செல்ல 250 கரடு முரடான கருங்கல் பாறை படிகள் உள்ளன,இப்போது மலைப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அடிவாரம் முதல் மலைக்குச் செல்ல சிமெண்ட் சாலை அமைத்து வருகின்றனர்,உடன் இந்த கரடுமுரடான படிகளையும் திருத்தி சீரமைக்க திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர் இந்த தனியார் கோவிலின் அறங்காவலர்கள், இப்போது உள்ள கப்பி ரோடு கோவிலின் வெளிமண்டபத்தின் படி மேடை வரை நீள்கிறது.இருசக்கர வாகனம் கார்கள் செல்ல முடியும், சற்று மேடான சாலை , அதை நன்கு சீரமைத்து சிமெண்ட் சாலையாக மாற்றப் போகின்றனர், அது நடந்தால் பக்தர்கள் எளிதாக மூன்று ரங்கநாதர்களையும் சேவிக்க முடியும்.

இந்தக் கோவிலில் மட்டுமே உலகில் முதல்முறையாக மூன்று ரங்கநாதர் சந்நிதிகள் உள்ளது, 

1) 450 வருட பழமையான ஆதி ரங்கநாதர் சந்நிதி
2) 22 வருட பழமையான அனுகிரக ரங்கநாதர் சந்நிதி
3)20 வருட பழமையான அழகிய ரங்கநாதர் சந்நிதி

இக்கோவிலுக்கு கொடிமரம் இன்னும் அமைக்கப்படவில்லை,ரங்கநாதர் சித்தத்தில் விரைவில் அமையும் ,பலிபீடங்கள் முறையாக அமைந்து உள்ளது.

பிரதான கோவிலுக்குள் அழகிய ரங்கநாதர்  11' நீள மூலவர் கிழக்கு (கருங்குழி ) பார்த்தும், அனுக்ரஹ ரங்கநாதர் 11' நீள மூலவர் தெற்கு (மதுராந்தகம் ) பார்த்தும் பள்ளி கொண்டிருக்கிறார்கள்,அழகிய ரங்கநாதருக்கு நான்கு அழகிய திருக்கரங்கள் உண்டு.

ஏரிக்காத்த ராமர் உற்சவர் கருணாகரபெருமாள் இங்கு வருடா வருடம் எழுந்தருளல் செய்ய உற்சவ மண்டபம் அமைந்துள்ளது, 

மலை அடிவாரத்தில் கற்படிகளின் துவக்கத்தில் விநாயகர் , ஜெயவீர ஆஞ்சனேயர் தனி  சந்நிதி உண்டு.
மலைக்கோவிலில் தன்வந்திரி சந்நிதி,லட்சுமி நரசிம்மர் சந்நிதி,  சக்கரத்தாழ்வார் தனி சந்நிதி, 
முடி காணிக்கை தர வசதி உண்டு, சுத்தமாக பராமரிக்கப்படும் ஆண் பெண் கழிவறைகள் உண்டு,கேன் வாட்டர்  குடிநீர் வசதி உண்டு.

மலை மீதிருந்து பார்க்கையில் மதுராந்தகம் ஏரி முழுக்க மிக அற்புதமான 360° பருந்துப்பார்வை பார்க்க முடிகிறது.

Trekking சென்று வழிபாடு செய்யும் IT பக்தர்கள் இந்த அழகிய மலைக் கோவிலைச் சென்று பார்க்கத் தவறாதீர்கள்.

எத்து நூல் எண்ணாயிரம் பொன் என்பார்கள்,அதாவது இறைவன் திருப்பணிக்கு வாங்கும் marking நூல் மட்டுமே எண்ணாயிரம் பொன்னுக்கு வாங்க வேண்டி வருமாம், இந்த கோவிலின் அறங்காவலர் நாராயணன் பாகவதர் ஆடு மேய்த்து வந்த காலத்தில் இருந்து ஆதி ரங்கநாதருக்கு தினமும் தன்னால் முடிந்த அபிஷேகம் ஆராதனை செய்து வந்தவர், மெல்ல இத்தனை பெரிய கோவிலை கட்டி எழுப்பி உள்ளார்,

முறையான  ஏட்டுக்கல்வி இல்லாத  நிலையில் தன்னால் முடிந்த எல்லை வரை சென்று அதற்கான அதிகாரிகள் ,ஆணையர்களைப் பார்த்து இந்தக் கோவிலுக்கு முறையான திட்ட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை  வாங்கியதை என்னிடம் பகிர்ந்தார்,

இந்த கோவில் உருவாக சகாயம் ஐஏஎஸ், மற்றும் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் உதவியதை மனமாறப் பகிர்ந்தார், அவருடைய தொடர்பு எண்கள் இங்கே தந்துள்ளேன், அடியாருக்கு அடியாராக பக்தர்களிடம் உதவிகள்  வாங்கி நேர்மையாக செலவிட்டு  இந்த கோவிலை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார்.இந்த திருப்பணிக்கு வேண்டி தன் சொத்துக்கள் அனைத்தையும் இதில் செலவழித்திருக்கிறார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம பாடசாலையில் பயின்ற இரு பட்டாச்சார்யார்கள் உற்சவருக்கு தினமும் காலை 9-30 மணிக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்கின்றனர், அத்தனை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

ஆதி ரங்கநாதரை கோனார் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அடியார் ஒருவர் அத்தனை அழகாக திருவாராதனை செய்கிறார், அவர் தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற உள்ளங்கை அளவுள்ள கல் விக்ரஹத்தில் கிருஷ்ணர் தலை , பசு என திருப்பி திருப்பி காண்பித்தார், அவர் மிகுந்த ஐக்கியத்துடன் இறைவனுக்கு சமைத்து அற்பணித்த அக்கார அடிசலை பிரசாதமாகத் தந்தார், அத்தனை சுவை, நமது பக்தியை கேள்வி கேட்கிறது அந்த உளமார்ந்த இறைசேவை.

மதுராந்தகம் ஏரியை இந்த மலை மேல் இருந்து பார்ப்பதற்கு ஸ்ரீரங்கத்தின் கொள்ளிடம் ஆற்றைப்  பார்ப்பது போலவே அத்தனை அழகாக உள்ளது.

கூகுள் மேப் லிங்க்
Shri Ranganathar Temple Malaipalayam

https://maps.app.goo.gl/AG1i7ExQdk9b9oFW9

கோவில் தரிசன நேரம். 

வாரநாள் காலை 10.30 முதல் 12.00
சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்.

2022 ஆம் ஆண்டின் உற்சவ நாட்கள் விபரங்கள் அறிய அறங்காவலர் நாராயணன் பாகவதர் அவர்களின் 
எண் 9443251323, 

whatsapp எண்

கோவிலுக்கு பொருளதவி செய்ய நினைப்பவர்கள் இந்த Gpay உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டு எத்தனை சிறிய தொகை என்றாலும் அனுப்பலாம்.
திரு.N. முகுந்தன்   (இவர் நாராயண பாகவதர் அவர்களின் மகன்.)
8220155585

#கருங்குழி, #மதுராந்தகம், #ஆதிரங்கநாதர்_கோவில்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)