முந்தானை முடிச்சு | மாஸ்டர்ஜி ஒப்பீடுகள்

முந்தானை முடிச்சு (1983)படம் டப்பிங் உரிமை வரலாற்றில் முதல் முறையாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு உரிமை வாங்கி k.ராகவேந்தர் ராவ் இயக்கத்தில் காதர்கான் வசனத்தில் இந்தியில் மாஸ்டர்ஜி ( 1985 )என்று வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது,

ஹிம்மத்வாலா படத்தை அடுத்து ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் ஏறுமுகம் தான்,பாக்யராஜ் செய்த வாத்தியார் வேடத்தில் காகா ராஜேஷ் கண்ணா, ஆனால் முக்கியமான காஸ்ட்யூம் ஆன கண்ணாடி இவருக்கு கிடையாது, மீசையும் கிடையாது,

 மற்றபடி அதே வாத்தியாருக்கான காஸ்ட்யூம்கள்,அவரின் அந்திமகாலத்தில் நடித்த நல்ல படம்,இதில் சிலம்ப சண்டை எல்லாம் போடுகிறார்,ஆனால் ரசிக்கவில்லை,

 இயக்குனர் k.ராகவேந்திரராவ் ஸ்ரீதேவிக்கு இன்னொரு குரு, இவர் tasteful ஒளிப்பதிவாளரும், நடன இயக்குனரும்  கூட, தன் பட நாயகிகளுக்கு கடுமையான நடன அசைவுகளைத் தந்து வருத்தி எடுத்து விடுவார்.

அவர்களை கனவுக்கன்னியாக்கிவிட்டு தான் ஓய்வார், இதில் இன்னொரு கூத்து என்ன என்றால் இப்படம் ஒளிப்பதிவு செய்தது அவர் தந்தை k.s.பிரகாஷ்ராவ், இப்படம் ஒளிப்பதிவு செய்கையில் அவரது வயது 71 , வயதுக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை,மனம் இளமையாக இருந்தால் 80 வயதிலும் கூட ஒருவர் தன் best ஐத் தர முடியும்.

இந்திவரின் இசையில் மட்டும் இப்பாடல் அசல் பாடலான " கண்ணத் தொறக்கணும் சாமி," பாடலின் ஜீவனைத் தொடவே இல்லை,

இந்த கண்ணத் தொறக்கணும் சாமி பாடலின் மேனகை விசுவாமித்ரர் தீம் அடுத்தடுத்து வந்த கைதி படத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி,மாதவி,இந்தியில் ஜித்தேந்திரா மாதவி என மீள்உருவாக்கம் செய்யப்பட்டது இது மாஸ்டர்ஜி வடிவம் 
https://youtu.be/NpLHp0fsP_w

இது தெலுங்கு கைதி வடிவம்
https://youtu.be/kTSnMsyzQEI
இது இந்தி கய்தி வடிவம்
https://youtu.be/EEEDSV4JoN0

ஊர்வசி பிரமாதமான நடிகை அவரின் முதல் படத்திலேயே அந்த பரிமளா என்ற இளம்பெண் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார்,ஸ்ரீதேவி அந்த ராதா கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார், ஆனாலும் அவரிடம் அந்த  குறும்புத்தனம் இல்லை,மாறாக நல்ல பூரிப்பும் புஷ்டியும் அந்த ராதா வேடத்தை மனதில் ஒட்டாமல் செய்து விடுகிறது.

பாக்யராஜின் அந்த  மனைவியை இழந்தவன் துக்கம்,பெண்விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கியவனின் குற்ற உணர்வு, கைக்குழந்தையை தனியே வளர்க்க பிரயத்தனப்படுபவனின் அல்லாட்டம் என எதுவுமே ராஜேஷ் கண்ணாவிடம் இல்லை, க்ளோசப் காட்சிகள் இல்லவே இல்லை, ராஜேஷ் கண்ணா ஏதோ ஒப்புக்கு நடித்தது போலவே இருந்தது, 

முந்தானை முடிச்சு படத்தில் தீபா செய்த அந்த டீச்சர் கதாபாத்திரம் இந்தியில் தாய்வீடு புகழ் அனிதாராஜ் செய்தார்,சற்றும் பொருந்தாத மிடி ,லோநெக் டாப்ஸ்,மேற்கத்திய உடைகளை இவர் பள்ளிக்கு அணிந்து வருவது நம்பும் படி இல்லை.

காமெடிட்ராக் என்று ஒரு ஆபாச மூட்டையையே இந்தியில் அவிழ்த்துவிட்டனர், அஸ்ராணி இதில் கோவில் பூசாரி,அவர் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் பெண் அருணா இரானியின் வளைவுகளை டீக்கடையில் அமர்ந்தபடி அப்படி வெறிக்கிறார், அப்பெண்ணின் அசைவுகளில் அவரின் கட்டுக் குடுமியே விரைத்து உயர்வது போல ஒரு காட்சி sick tasteன் உச்சம் , இதிலும் முருங்கைக்காய் சமையல் காட்சி வருகிறது.

தவக்களை இதிலும் நாயகிக்கு நட்புப் பட்டாளத்தில் ஒருவராக வந்தார், இசைஞானியின் பின்னணி இசையை அப்படியே ஆங்காங்கே அரைகுறை புரிதலுடன் எடுத்தாண்டிருந்தார் இசையமைப்பாளர் இந்திவர்,குறிப்பாக அந்த பிள்ளையைத் தாண்டும் காட்சியில் வரும் தப்பிசையை ஜீவனின்றி எடுத்தாண்டிருந்தனர், 

மாஸ்டர்ஜி படம் யூட்யூபில் இருக்கிறது பாருங்கள், முந்தானை முடிச்சு படத்தை தெலுங்கிலும் கன்னடத்திலும் தழுவி உப்புக்கண்டம் போட்டு வைத்துள்ளனர், அவற்றைத் தவிருங்கள்

#முந்தானைமுடிச்சு,#மாஸ்டர்ஜி,#ksபிரகாஷ்ராவ்,#kராகவேந்திரராவ்,#kபாக்யராஜ்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)