ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தலைவர் ரசிகர்களின் மேலான கவனத்துக்கு


தலைவர் இரசிகர்களின் மேலான கவனத்துக்கு

பொது அறிவிப்பு

எங்கள் வாடிக்கையாளர் சார்பாக,

 ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், எண்.18, ராகவ வீர அவென்யூ, போயஸ் கார்டன், சென்னை - 600086 இல் வசிக்கிறார், இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான/ அதிகம் பாராட்டப்பட்ட  வெற்றிகரமான நடிகர்களில் முதன்மையான ஒருவர்.

எங்கள் வாடிக்கையாளர் பல தசாப்தங்களாக பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.  ஒரு நடிகராகவும் தனித்துவமான மனிதனாகவும் அவரது தனித்துவமான நளினமான கவர்ச்சியும், தனி  இயல்பும் அவருக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படும் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்துள்ளது என்றால் மிகையில்லை. 

 திரையுலகம் முழுவதும் அவர் பெற்ற ரசிகர் பட்டாளமும் மரியாதையும் ஒப்பிடமுடியாதது மற்றும் மறுக்க முடியாதது.  அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு நிகழும்  களங்கம், சேதம் அல்லது மீறல் இவை பல துறைகளில் எதிரொலிக்கும், மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளருக்கு பெரும் இழப்பையும் அது ஏற்படுத்தும்.

எங்கள் வாடிக்கையாளர் பிரபல அந்தஸ்தைக் கொண்ட நபர் ஆவார், எனவே அவரது ஆளுமையின் அனைத்து விதமான அம்சங்களிலும் "ஆளுமை/பப்ளிசிட்டி/பிரபல உரிமைகள்" இவை உள்ளடங்கி உள்ளது.  பல்வேறு இணைய தளங்கள் மற்றும் மின் ஊடகங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்பு, சிறு குறு பத்திரிக்கையாளர்கள் எங்கள் வாடிக்கையாளரின் பெயர், குரல், படம், புகைப்படம் மற்றும் கேலிச்சித்திரம், கலைப் படம், கணினி AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கிய படம் மற்றும் பிற குணாதிசயங்களை தங்களை பிரபலப்படுத்துவதற்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்கள் வாடிக்கையாளரின் மேலான கவனத்திற்கு வந்துள்ளது. 

பொதுமக்கள் மத்தியில்  அவர்களின் கவனத்தை பெறுவதற்கும், அவர்களின் உள்ளத்தை கவர்வதற்கும் ஊடக கவனத்தை எப்போதும் தன்வசம்  இழுப்பதற்கும் வாடிக்கையாளர் படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பொதுமக்களை எப்போதும் கவர்ந்திழுப்பதை செய்கின்றனர்.  எங்கள் வாடிக்கையாளர் சூப்பர் ஸ்டார் என்று நாடெங்கிலும் பிரபலமாக அறியப்படுகிறார்.

மின் ஊடகங்கள்  மற்றும் அச்சு ஊடகங்கள் எதுவாயினும்  எங்கள் வாடிக்கையாளரின் புகைப்படம், வாடிக்கையாளரின் பெயர், வாடிக்கையாளரின் தனித்துவமான புகைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளரின் தோற்றம் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளருக்கு மட்டுமே சொந்தம் அவை  தனித்தன்மை வாய்ந்தவை என்றும், யாரேனும் வாடிக்கையாளரின்  அங்கீகாரமின்றி பயன்படுத்துவது பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று எங்கள் வாடிக்கையாளர் நினைக்கிறார். 

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரே தனது ஆளுமை, பெயர், குரல், உருவம், தோற்றம் மற்றும் இன்ன பிற குணாதிசயங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நபர் என்று எங்கள் வாடிக்கையாளர் உறுதிபடக் கூறுகிறார்.மேற்சொன்னவற்றை   அங்கீகாரமின்றி பயன்படுத்துதல் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் / அல்லது எங்கள் வாடிக்கையாளர்  என்ற உச்ச ஆளுமையின் எந்த அம்சங்களையும் பின்பற்றுதல் (அவரது பெயர், குரல், படம் மற்றும் எங்கள் வாடிக்கையாளருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புடைய பிற தனித்துவமான கூறுகள் உட்பட எதையும்) அல்லது வணிக ரீதியாக அதைப் பயன்படுத்துதல்  எங்கள் வாடிக்கையாளரின் ஒப்புதல் மற்றும் / அல்லது வெளிப்படையான அங்கீகாரம் இல்லாமல் எதுவாக இருந்தாலும்.

 மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளில், எங்கள் வாடிக்கையாளரின் ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் (அவரது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்ல) எங்கள் வாடிக்கையாளரின் ஆளுமை/விளம்பரம்/பிரபல உரிமைகளை யாராவது மீறினால் நடவடிக்கைக்குரிய குற்றம் , என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.  எங்கள் வாடிக்கையாளருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புடையது).  எங்கள் வாடிக்கையாளரின் உரிமைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின்படி எங்கள் வாடிக்கையாளர் சிவில் மற்றும் கிரிமினல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்பது இந்த அறிவிப்பின் நோக்கம் ஆகும்.

 நாள்:28/01/2023

 இடம்: சென்னை

 சுப்பையா இளம்பரிதி

 வழக்கறிஞர்

 எண்.364, பழைய எண்.210, லாயிட்ஸ் சாலை, குருபம் கோர்ட்ஸ், பிளாட் எண்.5, தரை தளம், கோபாலபுரம், சென்னை - 600 086.

தொலைபேசி:044 28352995/28352996

PS: இணைப்பு படத்தில் உள்ளது தலைவரைப் போலவே வேடமிட்டு நடிக்கும் நூற்றுக்கணக்கான பேரில் ஒரு உதாரணம்.

கபாலி

எங்கள் மூன்று பேருக்காக கபாலி ,மகிழ்வதா? வேதனைப்படுவதா? ,நான் hand rest ஐ தூக்கிவிட்டு படுத்துக் கொண்டு பார்த்தேன்.பக்கத்து திரையிலும் கபாலி தான் அது அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பித்தது , ஆனால் அக்காட்சிக்கு அரங்கு நிறைந்ததா தெரியவில்லை,இன்று  பகல்காட்சிக்கு சீட் ஹவுஸ் ஃபுல் அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை.

காலை 5 மணிக்கு படம் முடிந்தது, இது அதிகாலை 2-00 மணிக்கு துவங்கியக் காட்சி, ஆன்லைனில் புக் செய்கையில் இந்த இரண்டும் கெட்டான் காட்சிக்கு 400 சீட்களில் 100 ஆவது புக் ஆகியிருந்த்து,

ஆனால் ஏன் புக் செய்தவர்கள் வரவில்லை எனத் தெரியவில்லை ?, இணைய விமர்சனங்களால் நொந்து போய் ஏன் ரெண்டும் கெட்டான் காட்சிக்கு போக வேண்டும் என நினைத்தனரா? தெரியவில்லை.

இது போல அரங்கு நிறையாத காட்சிகள் மிகவும் ஆபத்தானவை, முழுப்படத்தையும் ஒரு விஷமி தன்  மொபைல் போனில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி விட வழி வகுப்பவை, இனிவரும் நாட்களில் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் திரையுலகம்.
=====

கபாலி நல்ல படம், இந்த பில்லா1 , 2 ,மங்காத்தா போன்ற படங்களையே ஹைப் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இந்த நல்ல படத்தை முதல்நாளே கழுத்தைத் திருகிக் கொல்லத் துடிப்பது ஏன் ? எனத் தெரியவில்லை,

படத்தை வாய்ப்பு கிடைத்தவர்கள் தியேட்டரில் மட்டும் பாருங்கள், அது தான் இந்த கம்ப்ளீட் ஆக்‌ஷன் த்ரில்லரை  முழுதாய் ரசிக்கும் வழி, படம் முழுக்க ரஜினி,படம் முழுக்க ஸ்டைல், படம் முழுக்க ஆக்‌ஷன், படம் முழுக்க டீடெய்ல் என கபாலிக்குழுவே நன்கு உழைத்துள்ளது, அதை மதித்தால் தான் தமிழ் சினிமாவின் தரம் உயரும், இனி ரஜினி படம் என்றால் தளபதி அல்ல, கபாலி தான் பெஞ்ச் மார்க்.

தவிர இது வேற்று நாடான மலேசியாவில் தமிழர் இரண்டாம், மூன்றாம் குடிமக்களாக நடத்தப்படுவதை, அதற்கான துணிச்சலான எதிர்ப்பை திறம்பட இப்படி ஒரு முழுமையான தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ளது,ரஜினி போன்ற ஒரு நடிகர் தமிழர் பிரச்சனையைப் பேசுவது, இப்பிரச்சனை என்ன? என்று தெரியாதவர்களுக்கும் இதைக் கொண்டு சேர்த்துள்ளது.

நம் தமிழ் நாட்டுக்கு டாஸ்மாக் போல மலேசியாவில் போதை மாத்திரை, பவுடர் ஆகியவை பொது மக்களுக்கு கடும் அச்சுருத்தல் என்பதை புரிந்து படம் பாருங்கள், அதன் காரணமாக அங்கே பல நூறு மறுவாழ்வு மையங்கள் உண்டு, பல்லாயிரம் சோகக் கதைகள் உண்டு, அங்கே உள்ள கேங்ஸ்டர்கள் எண்களால் தான் அழைக்கப் படுகின்றனர் என்பதையும் அறிக,இதில் வரும் 43 கேங் என்பதும் அப்படி ஒன்று தான்.

கூடவே திருமணத்துக்கு முந்தைய பாலுறவு,டீன் ஏஜ் குழந்தைப்பேறு, பெண் கேங்க்ஸ்டர்கள், எட்டாக்கனி உயர் கல்வி,தமிழருக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்பு,  சமத்துவமற்ற வாழ்க்கை முறை, போன்ற தலையாய அச்சுருத்தல்கள்.

அவற்றை ஆனவரை ஒரே திரைப்படத்தில் நம்பகத் தன்மையுடன்  கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்  ரஞ்சித்.கூடவே மிதமான தலித்தியமும் உண்டு.ரஜினியின் உயிர் நண்பர் அமீர் (ஜான் விஜய்) கதாபாத்திரத்தின் நடை உடை பாவனை அனைத்தும் திருமாவளவன் பாதிப்பிலேயே உருவாகியுள்ளது.

மலேயத் தமிழர் கலாச்சாரம் நம் நாட்டைப் போன்றதே, கடல் கடந்தும் அந்த விளக்கு அணைந்து விடாமல் நூற்றாண்டுகளாக காத்து வருகின்றனர்,அங்கும் மாரியம்மன் கோவில்கள், தீமிதி, கிடாவெட்டு, படையல், குறி சொல்லுதல்,முதல் மரியாதை, மசானக் கொள்ளை, ஜோதிடம்,  சூனியம் வைத்தல் ,தீட்டுக் கழித்தல் என எல்லாம் உண்டு. அதைக் கூட சிறப்பாக அந்தந்த இடங்களில் காட்சிப் படுத்தியுள்ளார் ரஞ்சித்.

இதெல்லாம் ரஜினியின் படங்களில் முன்பு அவர் செய்யாதது, அவரை வைத்து படம் இயக்கிய எந்த மூத்த இயக்குனருமே இதன் முன் யோசிக்காதது,

மிகுந்த துணிச்சலான,  மலேய ,சீன பிரதிநிதிகளை எதிர்க்கும்  வசனங்கள் , காட்சிகள்,அதில்  சற்றும் சமரசம் கிடையாது, படம் பிடிக்க உதவினார்களே என்று அவர்களுக்கு முதுகு சொறியவில்லை, மிகுந்த ப்ரொஃபஷனலிஸம் ததும்பும் காட்சிகள், செய்நேர்த்தி,

கோட்டூர்புரம் அடையார் ஹவுஸின் உள்ளே முதன் முறையாக ஒரு காட்சி படமாக்கியுள்ளனர், பாண்டிச்சேரி ஆலோவில்லின் மண் சாலையில் முதல் முறையாக படமாக்கியிருக்கின்றனர், இது போல நிறைய தீஸிஸ் உண்டு, சிறு குறைகள் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை.

இதையே மெதுவான படம் என்பவர்கள் ரீனோ சீசன் படத்தின் ஆமை வேகத்தில் படம் எடுத்திருந்தால்   என்ன சொல்லுவார்கள்?

நாம் அந்நிய உலகப் படங்களான 22 புல்லட்ஸ், ரீனோ ஸீஸன்,ட்ஜாங்கோ அன்செயின்ட், கில்பில்,  ப்யூட்டிஃபுல் , 21 க்ராம்ஸ் ,அமோர்ரஸ் பெர்ரோஸ், , Rosario Tijeras  போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்து வியப்போம், ஆனால் நம் தமிழில் அதே தரத்தில் ஒரு நல்ல படம் வந்தால் அதைக் கொண்டாடாமல் சேறு வாரிப் பூசுவோம்.என்ன மாதிரி நண்டுகள் நாம்?!!!

இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள்




இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா மொத்தம் 6 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டில் இருந்து தான் அவர் இணைந்து பணியாற்றினாலும் கே.பாலச்சந்தரின் தயாரிப்பில் 1981ஆம் ஆண்டே இணைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டார், கவிதாலயா பட நிறுவனம் துவங்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் படமான நெற்றிக்கண்[1981]திரைப்படம் தான் இசைஞானியும் , கே.பாலச்சந்தரும் இணைந்த முதல் படம்.

இப்படி, கவிதாலயா தயாரித்த 8 படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆக மொத்தம் கவிதாலயாவின் 14 படங்களுக்கு  இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

அவை பின்வருமாறு
கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில்
இசைஞானி இளையராஜா இசையமைத்தது
நெற்றிக்கண் [1981]
புதுக்கவிதை [1982]
நான் மகான் அல்ல [1984]
பூவிலங்கு[1984]
எனக்குள் ஒருவன் [1984]
ஸ்ரீ ராகவேந்திரா [1985]
வேலைக்காரன்[1987]
சிவா[1989]
உன்னைச் சொல்லி குற்றமில்லை[1990]

கே.பாலச்சந்தர் இயக்கத்தில்
இசைஞானி இளையராஜா இசையமைத்தது

சிந்துபைரவி [1985]
புன்னகை மன்னன் [1986]
மனதில் உறுதி வேண்டும் [1987]
ருத்ரவீணா[தெலுங்கு][1988][உன்னால் முடியும் தம்பி]
உன்னால் முடியும் தம்பி [1988]
புதுப்புது அர்த்தங்கள் [1989]

கே.பாலச்சந்தர் மற்றும் இசைஞானியின் பிரிவு குறித்த இசைஞானியின் முக்கியமான பதில் 10.10.2012 குமுதம் இதழில் இருந்து.

 கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? (ஷாலினி ராஜன், மும்பை.)

இசைஞானி இளையராஜா :
‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் ‘சிவா’ என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் பிரமிட் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க. ‘சார், ‘புதுப்புது அர்த்தங்கள்’ ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க பிண்ணனி இசைக்கு   ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,’ என்றார்கள்.

‘அப்போ உங்களுக்கு டைட்டிலில் ‘இளையராஜா’ என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு இதுல இருந்து தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,’ன்னு சொல்லி விட்டுவிட்டேன். 


அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது ‘இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல, அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்னு நினைச்சேன்.

 அப்புறம் ரஜினியை வெச்சு அண்ணாமலை படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் ‘ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு’ ரஜினியும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல. அவர் என் அண்ணாமலை படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார்.

 பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேன்னு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனால ரஜினி கேட்டும் நான் அண்ணாமலை படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (228) ஆஸ்கர் (149) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (35) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)