ரிசெஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரிசெஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்சைட் ஜாப் Inside Job 2010

2008-ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய நிதி நெருக்கடியின் பின்னணியில் இருந்தது வெறும் பொருளாதாரத் தவறுகள் மட்டும்தானா, அல்லது அது திட்டமிடப்பட்ட ஒரு முறைகேடா என்ற அதிர்ச்சியூட்டும் கேள்வியுடன் தொடங்குகிறது சார்லஸ் பெர்குசன் இயக்கத்தில் 2010-ல் வெளியான 'இன்சைட் ஜாப்' (Inside Job) ஆவணப்படம்.

 அமெரிக்க நிதிச் சேவைத் துறையின் அமைப்பு ரீதியான ஊழலையும், அதன் விளைவுகளையும் மிகத் துணிச்சலாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த இந்த ஆவணப்படம், ஐந்து பாகங்களாகப் பிரித்து வங்கியியல் உலகின் அடாவடிகளை அம்பலப்படுத்துகிறது.

 இரண்டு மில்லியன் டாலர் வரவுசெலவில் உருவாகி, மே 16, 2010 அன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அக்டோபர் 8 அன்று அமெரிக்காவில் வெளியாகி, உலகளவில் 7.9 மில்லியன் டாலர்களை வசூலித்த இத்திரைப்படம், 83-வது அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த வம்சாவளிச் சீரழிவின் தொடக்கமாக ஐஸ்லாந்து நாட்டின் வங்கியியல் துறை 2000-ஆம் ஆண்டில் தனியார்மயமாக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சம்பவத்தை இயக்குநர் பதிவு செய்கிறார். 

1941 முதல் 1981 வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த அமெரிக்க நிதித்துறை, அதற்குப் பிந்தைய தசாப்தங்களில் தாராளமயமாக்கலை நோக்கி நகர்ந்தது. 

1980-களின் இறுதியில் சேமிப்பு மற்றும் கடன் நெருக்கடியால் மக்களுக்கு 124 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்ட போதிலும், 1990-களில் நிதித்துறை ஒருசில ராட்சத நிறுவனங்களின் கைகளில் குவிந்தது. 

2000-ல் இணையப் பங்குச் சந்தை குமிழி வெடித்தபோது முதலீட்டாளர்களுக்கு 5 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. 

அதே காலகட்டத்தில், வழித்தோன்றல் சந்தையை (Derivatives) ஒழுங்குபடுத்த முயன்ற முயற்சிகள் 'கமாடிட்டி பியூச்சர்ஸ் மாடர்னைசேஷன் ஆக்ட் 2000' சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து, கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பெயர் ஸ்டியர்ன்ஸ் ஆகிய ஐந்து முதலீட்டு வங்கிகள், சிடிகுரூப் மற்றும் ஜேபிமார்கன் சேஸ் ஆகிய இரண்டு நிதி கூட்டமைப்புகள், ஏஐஜி, எம்பிஐஏ, ஏஎம்பிகே ஆகிய மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மூடிஸ், ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ், ஃபிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் சந்தையைக் கட்டுப்படுத்தத் தொடங்கின. 

இவர்கள் கடன்களையும் அடமானங்களையும் ஒன்றுதிரட்டி 'சிடிஓ' (CDO) எனப்படும் பிணையக் கடன் பொறுப்புகளாக மாற்றி முதலீட்டாளர்களுக்கு விற்றனர்.

 மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்த ஆபத்தான கடன்களுக்கு 'AAA' சான்றிதழ் வழங்கி உதவின.

2001 முதல் 2007 வரையிலான காலக்கட்டத்தில் வீடமைப்புத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டபோது, வங்கிகள் தம்மிடம் உள்ள சொத்துகளை விட மிக அதிக அளவில் கடன் வாங்கத் தொடங்கின. 

தாங்கள் விற்கும் சிடிஓ-க்கள் வீழ்ச்சியடையும் எனத் தெரிந்தே, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2006-ல் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான சிடிஓ-க்களை விற்றுவிட்டு, அவை தோற்கும் என்று எதிர்பார்க்கும் 'கிரெடிட் டிஃபால்ட் ஸ்வாப்ஸ்' (CDS) பந்தயங்களிலும் ஈடுபட்டது.

 சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்த ரகுராம் ராஜன், 2005-ல் நடைபெற்ற ஜாக்சன் ஹோல் மாநாட்டில் இந்த ஆபத்துகளைப் பற்றி எச்சரித்தபோதும், முன்னாள் நிதிச் செயலர் லாரன்ஸ் சம்மர்ஸ் போன்றவர்களால் அது புறக்கணிக்கப்பட்டது.

இதன் உச்சகட்டமாக நவம்பர் 2007-ல் மாபெரும் பொருளாதார மந்தநிலை தொடங்கியது. 

மார்ச் 2008-ல் பெயர் ஸ்டியர்ன்ஸ் (Bear Stearns )நிறுவனம் ரொக்கமின்றி முடங்கியது. 

செப்டம்பரில் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மே நிறுவனங்களை அரசு கைப்பற்றியதுடன், இரண்டு நாட்களுக்குப் பிறகு லேமேன் பிரதர்ஸ் வீழ்ச்சியடைந்தது. 

மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பாங்க் ஆஃப் அமெரிக்கா வாங்கியது. 

ஹென்றி பால்சன் மற்றும் திமோதி கீத்னர் ஆகியோர் லேமேன் நிறுவனத்தை வங்கியொத்து (Bank Reconciliation Statement - BRS) செய்ய முடிவெடுத்ததால், வணிகக் கடன் சந்தை முடங்கியது. 

செப்டம்பர் 17 அன்று ஏஐஜி நிறுவனத்தை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் எடுத்ததுடன், வங்கிகளைக் காப்பாற்ற 700 பில்லியன் டாலர் நிதியை பால்சனும் பென் பெர்னான்கேவும் காங்கிரஸிடம் கோரினர். 

அக்டோபர் 3, 2008 அன்று அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 'டார்ப்' (TARP) திட்டத்தில் கையெழுத்திட்ட போதிலும், பங்குச் சந்தைகள் சரிந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையின்மை 10 சதவீதமாக உயர்ந்தது.

 ஜிஎம் மற்றும் க்ரைஸ்லர் நிறுவனங்களும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

ஆனால், இந்த அவல நிலைக்குக் காரணமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட சொத்துகளைப் பாதுகாத்துக் கொண்டு எவ்வித வழக்குகளும் இன்றித் தப்பினர்.

 அரசாங்க மீட்பு நிதிக்குப் பிறகும் இவர்கள் தங்களது நிர்வாகக் குழுக்கள் மூலம் பில்லியன் கணக்கில் போனஸ் பெற்றுக்கொண்டனர்.

 அதேபோல, பல தசாப்தங்களாகக் கட்டுப்பாடற்ற சந்தையை ஆதரித்து வந்த அனாலிசிஸ் குரூப், சார்லஸ் ரிவர் அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், நிதி நிறுவனங்களிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு நடுநிலையற்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்ட முரண்பாடுகளும் அம்பலமாகின. 

இது குறித்து அமெரிக்க பொருளாதார சங்கம் பின்னர் வெளிப்படைத்தன்மை விதிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அதிபர் ஒபாமா ஆட்சியமைத்த பிறகும், கீத்னர் நிதிச் செயலாளராகவும், பெர்னான்கே ஃபெடரல் ரிசர்வ் தலைவராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டதுடன், பலவீனமான சீர்திருத்தங்களே கொண்டுவரப்பட்டன.

108 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படத்தை ஒரு விறுவிறுப்பான குற்றவியல் புலனாய்வுத் திரைப்படத்திற்கு இணையான வேகத்துடன் இயக்கியுள்ளார் சார்லஸ் பெர்குசன். 

மேட் டாமனின் குரல் பதிவு, சிக்கலான நிதிச் சொற்களையும் புள்ளிவிவரங்களையும் சாதாரணப் பார்வையாளனுக்கும் புரியவைக்கும் வகையில் மிகத் தெளிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 ஸ்வெட்லானா சிவெட்கோ மற்றும் கல்யாணி மாம் ஆகியோரின் ஒளிப்பதிவும், சாட் பெக் மற்றும் ஆடம் போல்ட் ஆகியோரின் படத்தொகுப்பும் அเล็กஸ் ஹெஃபெஸின் பின்னணி இசையும் இணைந்து, நிதித் துறையின் ஆடம்பரத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலையையும் நேர்த்தியாகப் படம்பிடித்துக்காட்டுகின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நிதி அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளை இயக்குநர் நேருக்கு நேர் சந்தித்து எழுப்பும் கூர்மையான கேள்விகளும், அதற்கு அவர்கள் தடுமாறும் காட்சிகளுமே இப்படத்தின் தொழில்நுட்பச் சிறப்பம்சமாகும்.

 ரோஜர் எபர்ட், ஏ.ஓ. ஸ்காட், பீட்டர் பிராட்ஷா உள்ளிட்ட உலகின் முன்னணி திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இத்திரைப்படம், 'ராட்டன் டொமேட்டோஸ்' தளத்தில் 98 சதவீத நேர்மறை மதிப்பீட்டையும், 'மெட்டாகிரிடிக்' தளத்தில் 88 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. 

இயக்குநர் கூட்டாட்சி கொள்கைகளின் பங்கை முழுமையாக ஆராயவில்லை என்று ஜீன் எப்ஸ்டீன் போன்ற ஒருசில பொருளியலாளர்கள் விமர்சித்த போதிலும், உலகளாவிய பொருளாதாரத்தைச் சீரழித்த அதிகார வர்க்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்ததில் இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாகவே நிற்கிறது.

 தனியாரின் பேராசையும், அரசின் கண்காணிப்பின்மையும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி விளையாட்டாக மாற்றும் என்பதைப் போட்டுடைத்த வரலாற்று ஆவணமாக இத்திரைப்படம் என்றும் நிலைத்திருக்கும்.

#கீதப்ப்ரியன்ஆவணப்படம்
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு

இரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்!!!

சென்ற இருவாரங்களாக,ஏன்?இப்போதும் கூட முழுக்க மிகுந்த பணிச்சுமை, இரவு வீடு திரும்பவே நடுநிசி 2-00 ஆகிறது,மறுநாள் 9-00 மணிக்கு மீண்டும் வேலை ஆரம்பிக்கும். இப்போதும் அப்படியே, ஒரு குழுவாக இப்படி இயங்குவதால் அயற்சிக்கே இடமில்லை.நான் மட்டும் இப்படி உழைக்கிறேனே என்ற பேச்சுக்கே இடமில்லை, முதலாளி கூட அருகே ஒரு கணிணியில் வேலைசெய்து கொண்டிருப்பார். தனக்கு காஃபி ஃபிக்ஸ் செய்யும் போது நமக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதங்கள்,இங்கே அமீரகத்தில் நிகழ்கின்றன.

து போல எல்லாம் உழைத்து பல வருடங்கள் ஆகின்றன,சென்னையில் தான் இப்படி அதிகம் 24மணிநேரம் தொடர்ந்து  வேலை செய்தது,சுமார் 6 வருடங்கள் முன்பு சென்னை ஓஎம்ஆர்-ஐடி காரிடாரில் ஐடி பார்க்குகள் அதிகம் வரத்துவங்கியபோது, எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சுமார் 20 ஐடி பார்க்குகள்,கால் செண்டர்கள் டிசைன் செய்து கொண்டிருந்தோம், அதில் சான்சா,[xanza] சத்யம், டிசிஎஸ்,சதர்லேண்ட் என அடக்கம். , எங்களுடையது பேஸ்மெண்ட் ஆஃபீஸ் ஆகையால் வெளியே கலவரமே நடந்தாலும் தெரியாது, மரம் செடி,கொடியே இருக்காது. சதா ஏசியில் இருந்து உடம்பே உஷ்ணமாயிருக்கும், நேரத்துக்கு சாப்பிட முடியாததால், பசியெடுக்காது, பசித்தபோது சாப்பிடமுடியாதபடி பணிச்சுமை அழுத்தும்.

ண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் மதியம் சென்று தூங்கும் போது யாராவது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டியை எடுக்கும் போது தான், முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.

2006 டிசம்பரில் இங்கே ஒரு துடிப்பில்,கட்டாயத்தில் அமீரகம் வந்தவுடன், மனம் கிடந்து துள்ளியது, வேலை பிடித்திருந்தது, ஆனால் 10 பேர் செய்யும் வேலையை 100 பேர் செய்தனர். செம சிரிப்பாய் இருந்தது.என்ன தான் உலகின் உயரமான கட்டிடத்தில் வேலை என்றாலும் சம்பளம் குறைவாதலால், மனம் லயிக்கவில்லை,நல்ல பெயர் எடுத்தும்,வெறும் ஒரு வருடத்தில் ,மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, வேலை மாறிவிட்டேன்.

னால் அந்த செப்டம்பர் 15, 2008 இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைக்கவே இல்லை. வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது. இதோ இப்போது உள்ள ஆஃபீஸிலும் 80சதம் ஆட்குறைப்பு நடந்தேறிவிட்டது. ப்ராஜக்டுகளே சுத்தமாக இல்லை. மனம் சென்னையில் செய்தது போன்ற அயராத உழைப்பை  எப்பொதும் நிகழ்த்த துடிக்கிறது.  ஆகவே சலிக்காது காம்பெடிஷன் ப்ராஜக்டுகள் எடுத்து செய்கிறோம்,வென்றால் வேலை உண்டு, இல்லையேல் இல்லை. தொடர்ந்து வேலை இருக்குமா?பார்ப்போம்.

மீரகத்தில், செலவு செய்யும் ஒவ்வொரு திர்காமுமே தகும். சில ஆஃபீஸ்களில் வெள்ளி,சனி இரு வாரநாட்கள் விடுமுறை. வாரத்துக்கு 45 மணி நேரம் மட்டுமே வேலை. குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும்,தரமான சுற்றுப்புறம், தரமான கல்வி, தரமான வாழ்க்கைத்தரம் எல்லோருக்கும் நிச்சயம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக வேலை நிரந்தரமின்மை என்னும் அச்சுறுத்தல் மனதுக்குள் புகுந்து கொண்டு மணிஅடிக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். இதை இன்னும் இரு வருடம் கழித்து நினைத்துப்பார்க்கையில் சிரிக்கவும் நேரிடலாம்.அல்லது நினைவுக்கே வராமலும் போகலாம்.

ன் கண் முன்னாலேயே என் பல நண்பர்கள் வேலை இழந்து தாயகம் சென்றனர். அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்.  எனக்கு கையறு நிலை. யாருக்கும் உதவக்கூட முடியவில்லை.ஊரில் உள்ள நண்பர்களுக்கும் சிவி மூவ் செய்து உதவமுடியாத நிலை. எங்காவது வேலைக்கு ஆள் உள்ளே எடுத்தால் தானே?

ப்போது உள்ள நிலையில் பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே,என்னால்  இந்த சூழலில் வேலைதேடி அலைய முடியாது என்கின்றனர். என்னுடன் வெறும் பாஸ்போர்ட் காப்பி கொடுத்து 250,000 திர்காம்  வரை [ரூ31லட்சம்] வங்கிக்கடன் வாங்கிய ஏனைய பேர் இன்னும், ஒரு தவணை கூட கட்டாமல் மிகுந்த மனோ தைரியத்துடன் இருக்கின்றனர். வங்கிகள் போன்செய்து கேட்டால் ஜென்டில் மேன் ஸ்டைலில் பணம் செல்வாயிடுச்சு , வேலை கிடைத்தால் கொடுக்கிறேன்!!! என்கின்றனர். எப்பா என்னா தைரியம்? என்றே நினைக்க தோன்றுகிறது.ஏகம் பேர் 2 வருடம் முன்பே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர்.

ன் போன்ற எப்படியாவது தவணையை  ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப்  ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர். ஐயா வங்கிகளே!!! உங்களை வட்டியை குறைக்க சொல்லி பிச்சை கேட்கவில்லை, உங்கள் தேய்ந்துபோன தட்டையான வங்கி விதிகளை மாற்றுங்கள். அப்போது தான் சில விடாக்கண்டர்களிடம் எதாவதாவது பெயரும். ஹி ஹி சின்ன குமுறல். சொந்தக்கதை யூ சீ.இன்னும் 12 மாதம் தவணை பாக்கி உள்ளது.அது தான் கீழே கவுண்ட்ட் டவுன் விட்ஜெட் எல்லாம்  வைத்து ஓயாமல் தேய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை கார்பொரேஷன் தண்ணீர் குழாய் போல 2மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் வருகிறது, அதுவும் போன மாதத்தின் போன மாத பாக்கி. எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டும் எனக்கு, ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல்  கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே  மெயில் அனுப்பி வாங்கி வரச்சொல்லுவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.

தனாலேயே என் மகளுக்கோ மனைவிக்கோ கூட எதுவுமே வாங்கி செல்வதில்லை. அங்கேயே எல்லாம் கிடைப்பதால் கூட்டிப்போய் வாங்கி கொடுத்து விடுகிறேன். சில சென்னை நண்பர்கள், ரிசெஷனா? அப்படின்னா? ஈரோடு பக்கமோ?தூத்துக்குடி பக்கமோ என்று எகத்தாளம் செய்கின்றனர்.

ல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு  வலிய வந்து கடன் கொடுக்க தேடிவந்து கேன்வாஸ் செய்த பேங்க் சேட்டனை வெறியோடு தேடினேன்.அவருக்கும் வேலை போய்விட்டதாம். அவர் இப்போது இன்சூரன்ஸ் ஏஜெண்டாம். இன்சுயூரென்ஸ் எடுங்கள், உங்க வீட்டுக்கு நல்லது என்றார். நான் உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அதுவும் உங்கள் வீட்டுக்கு நல்லது தான், என பல்லை கடித்தேன். வெறியோடு போன் செய்தால் இன்சூரன்ஸா போடச் சொல்ற? இருடி மகனே என்று நினைத்துக்கொண்டேன். அவர், பேடிக்கண்டா,பேங்க் ஒண்ணும் ஆக்‌ஷன் எடுக்கப்பற்றாது என்றார். அடங்கொய்யால, நேர்மையா  கட்றவனையும் கெடுக்க நீ ஒருத்தன் போதும்!!!!  என்று போனை கட்செய்தேன்.

வார இறுதிநாட்களில் எங்காவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்யலாம் என்று பார்த்தால் கண்ணில்படுவதெல்லாம்,இரண்டாம், மூன்றாம் தரமான சீன கம்பெனிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள். பிரபல பிராண்டுகளின் புதிய வரவுகளை ஷோகேஸில் அடுக்கி வைக்க கடைக்காரர்களிடமே காசு இல்லை போலும் , எல்லா இடங்களிலும் ஷாப் க்ளோசிங் சேல் என்று போட்டு காலிபண்ற விலைக்கு ஷர்டு முதல் அந்துருண்டை வரை விற்கின்றனர் . ஏனைய பேர் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம். நிறைய மால்கள் சென்ற வருடம் இந்தியர்களை நீக்கிவிட்டு சம்பளம் குறைவென்று பிலிப்பினோக்களை பணிக்கு அமர்த்தியது, இப்போது அதுவும் போய், நேபாளிகளை கவுண்டர் சேல்சுக்கு அமர்த்தியுள்ளது.

தே கதைதான் ஹாஸ்பிடல்களிலும், பள்ளிகளிலும், ரிசெஷனால் பாதிக்கப்படாத துறையினரே இல்லை எனலாம். அத்தை எப்போ செத்துப்போவா? திண்னை எப்போடா காலியாகும்னு சொல்வதுபோல எப்போடா லோனை முடிப்போம் என்றிருக்கு, இதே போல யாராவது லோன் வாங்கி தவணை கட்டிக்கொண்டிருந்தால், அதுவும் அமீரகத்தில் இருந்தால்,தொடர்பு கொள்ளவும், சேர்ந்து கும்மிஅடிக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ரிசெஷன் ஒழிய  இறைவனை வேண்டிக்கொள்வோம், இனி வரும் காலத்தில் ஒருவனுக்கு எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி. யாரேனும் இப்போது கடன் வாங்குவதாக இருந்தால் நூறு முறை யோசித்து வாங்குங்கள். கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.அனுபவஸ்தன் சொல்கிறேன்.

இனி யாராவது மாமனார், மச்சினர். பெரியப்பா, சித்தப்பா, என்னைப்பார்த்து காசை வேஸ்ட் பண்ணாதப்பா, நிலம் வாங்கு, நீச்சு வாங்குன்னு சொன்னா,கவுண்டமணி ஸ்டைலில் எவனாருந்தாலும் வெட்டுவேன்.எவனாருந்தாலும் வெட்டுவேன்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

====0000====

ஒருவயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்


ந்த செப்டம்பர் 15 ஆம் தேதியோடு சண்டாள ரிசெஷன் துவங்கி ஒரு வருடம் முடிந்தது.போன வருடம் இதே செப்டம்பர் 15 அன்று தான் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவாலாகி ரிசெஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டது,அது ஹனுமார் வாலாக நீண்டு சென்றவாரம் கூட அமெரிக்காவில் மூன்று வங்கிகள் திவாலானதாக செய்திகளில் படித்திருப்போம்.

பெரும்பாலான அலுவலகங்கள் நீங்கள் வேலையில் இருப்பதே நாங்கள் காட்டிய பெரிய சலுகைதான் என மார் தட்டிக்கொள்கிறது.எதெற்கெடுத்தாலும் ஒரு மெமோ.எதெற்கெடுத்தாலும் ஒரு மீட்டிங் என கடுப்பை கிளப்புகிறது .
எனக்கு தெரிந்து என் நண்பர்கள் சிலர் ஒன்றுக்கு கூட போகாமல் வேலை பார்க்கிறார்கள்,நிறைய நண்பர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துவிட்டு கடும் துயருடன் தொடருகின்றனர்.நாலு பேர் செய்யும் வேலையை இருவருக்கு கொடுத்து முடித்துவிடு என்கின்றனர்.

ஒரு சில நண்பர்கள் தினமும் இரண்டு ஷிப்டுகள் பார்த்தால் தான் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர்.இப்போதும் classified இல் வேலைக்கு ஆள் தேவை என்று வருகிறது.அப்ளை செய்தால் அழைப்பு வந்தாலே அதிசயம் என்றாகிவிட்டது.இரண்டு மாதம் முன்பு கேட்ட விளம்பரத்திற்கு அப்ளை செய்த என் நண்பன் , ஊருக்கு போனதால் ,என் எண்ணுக்கு அவன் கால் டைவர்ட் செய்ய , என்னை இரண்டு மாதம் கழித்து அழைத்த அந்த நிறுவனம் 2500 திர்காம் சம்பளம் ஒகேவா?என்று மேட்ச் பிக்சிங் செய்தனர். என் நண்பன் கடைசியாக வாங்கிய சம்பளம் 10000 திர்காம்கள் என்றேன் .அவர்களே "no more fancy salary on planet my friend" என்று எகத்தாளம் பேசினர்.

சென்னையில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிய என் ஆர்கிடெக்ட் நண்பர்கள் அதே ஆபீஸில் இருபத்தைந்தாயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர்.இதில் pg (போஸ்ட் க்ராஜுவேட்டுகள் ) பாடு ரொம்ப திண்டாட்டமே.நிறைய கம்பெனிகள் pg no need to apply என்றே விளம்பரம் தருகின்றனர்.எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் m.arch படித்திருந்தும் அதை மறைத்து b.arch என்று காண்பித்து குறைந்த சம்பள வேலையில் சேர்ந்த துயரமும் உண்டு.

பூம் பீரியடில் porche கார் வைத்திருந்த நண்பர்கள் ஒரேநாளில் வேலை போய் அந்த ஆடம்பர யானையை பாதி விலைக்கு விற்று மேற்கொண்டு பணம் போட்டு வங்கிக்கு கடன் அடைத்து சென்ற சம்பவங்களையும் பார்த்தேன்.
35000 திர்காம் ரோலெக்ஸ் வாட்ச் கட்டியிருந்த சிங்கப்பூர் பெண் அசோசியேட் டைரக்டர் ,என்னிடம் உன் ஆபீஸில் ஆர்கிடெக்ட் வேலைக்கு cv மூவ் பண்ண முடியுமா?என்றார்.

அப்பப்பா.... பாத்தாச்சு பாத்தாச்சு.
பூமையும் , ரிசெஷனையும் போதுமான மட்டும் பாத்தாச்சு.

பறிபோன வேலைகள் ,சலுகைகள்,குறைக்கப்பட்ட சம்பளம் ,அலுவலக விஷயமாக வெளிநாட்டு பயிற்சி,என எதுவுமே திரும்ப கிடைக்கும் தடயமே இல்லை .எங்கு நோக்கிலும் ஒரே வெறிச்.

சில அலுவலகங்களில் பிளாஸ்டிக் போர்க்,டிஸ்போசபிள் டம்பளர்கள் கூட வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.வீக்கெண்டு பார்ட்டி வைத்த அலுவலகங்கள் தேங்க்ஸ் கிவிங் கூட வைக்காமல் நல்ல சம்பளம் வாங்கும் ஊழியரை நீக்கி விட்டு குறைந்த சம்பளத்தில் ஆள் பிடிக்கும் அக்கிரமமும் நடக்கின்றது.
ஒரு சில அலுவலகங்கள் தம்பதி ஊழியர்களில் மனைவியரை வீட்டுக்கு அனுப்பும் செயலும் தொடர்கிறது.சில நிறுவனங்களில் எதிர் மார் .

எங்கள் அலுவலகத்தில் விதிவிலக்காக இப்தார் பார்ட்டி வைத்தனர்.நல்ல செலவு செய்தே நடத்தினர் . நியூ இயர் பார்ட்டியும் உள்ளது என்று சொல்லி எங்கள் எல்லோருக்கும் தெம்பூட்டினர்.இருந்தும் கலக்கமாகத் தான் உள்ளது.
போன வருடம் எனக்கும் துபாயில் வேலை போய் இங்கு ஷார்ஜாவில் கடவுள் ஆசியால் கிடைத்தது.இதை பெரிய அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

என்னையும் அறியாமல் லஞ்ச் டயத்தில் மானிடரை அணைக்கிறேன்.
அனாவசிய லைட்டுகளை அணைக்கிறேன்.
சக ஊழியர் அணைக்காமல் சென்ற கம்ப்யூடரை அணைக்கிறேன்.
இந்த பக்குவம் தந்தது இந்த ரிசெஷன் தான்.எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமையும் நாவடக்கமும் வந்தே விட்டது.கடவுள் மேலும் பக்தி அதிகமாகி விட்டது. இருந்த தீய பழக்கங்களும் போயே விட்டது.
இதைத் தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள் போல.

என்ன ஒன்று?என்னுடன் வேலை செய்த சுமார் முப்பது நண்பர்கள் வேலை தேடி கிடைக்காமல் இந்தியா சென்றுவிட்டனர்.அவர்களுக்கு உதவ நினைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.இத் தருணத்தில் கடவுளிடம் அந்த நண்பர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

ஆனாலும் ரிசெஷனை வைத்து அனுதினமும் நகைச்சுவை மெயில்கள் வந்த வண்ணம் தான் உள்ளன. அப்படி வந்த சில மெயில்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.இதில நீங்கள் சிலவற்றை முன்னமே பார்த்திருக்கக்கூடும்.ஆகவே மீண்டும் சிரியுங்கள்.

-------------------------------------------------------------------------------------------------














--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Never Mess with Employees!

This is what happened when a certain company put up the following memo:

OFFICE MEMO:
May all members of staff please note that there will only be one drink per person at this year's Christmas Party.
And please bring your own cup !

Regards,

Management

---------------------------------------------------------------------------------------------------------------------------------




Never mess with employees!



Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)