மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகள் ஆய்வு

முதல் படத்தில் உள்ளவர் பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் தலைமை நீதிபதி Sir Thomas Andrew Lumisden Strange ஆவார்.
இவர் 1801ஆம் ஆண்டு  முதல் 1816 ஆம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்றைய சட்ட மன்றத்தின்  வெளிப்புற வாட்டர்கலர் ஓவியம் பாருங்கள்,  "HOLY MEN OUTSIDE THE HOUSE OF SIR THOMAS STRANGE." என்பது ஓவியத்தின் தலைப்பு, இது தான் அன்றைய முதல் சட்ட மன்றம்,இங்கே 1817 ஆம் ஆண்டு வரை சட்டமன்றம் இயங்கியது, 1862 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் துவங்கும் முன் இடிக்கப்பட்ட Bentinck's கட்டிடத்தில் (இன்றைய சிங்காரவேலர் மாளிகை) மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி சர் தாமஸ் ஸ்ரேஞ்ச்  இந்து திருமண சட்டத்தை முறையாக ஆராய்ந்து படித்து சட்டபுத்தகத்தில் திருத்தம் செய்தவர்.

இவருக்குப் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தைச் சேர்ந்த  18 தலைமை நீதிபதிகள் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில்  பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் பெற்ற 14 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு  நடுநிசிக்கு முன்பாக  இறையாண்மை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு பிரிட்டீஷ் இந்தியா முழுவதும் பணியாற்றிய அத்தனை தலைமை நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பு நகல்களின் முன் வரைவை, இந்திய தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தனர், 

தவிர எந்த விருப்பு வெறுப்புமின்றி, மதமாசார்யமின்றி தங்கள் Union Jack கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்படுவதையும் , இந்திய மூவர்ணக்கொடி கம்பத்தில் ஏறுவதையும் பார்த்து இந்திய நீதிபதிகளை மனமார வாழ்த்திப் பிரியா விடை பெற்று பிரிந்துள்ளனர்.
சில பொறுப்புகள் கைமாற வேண்டி அதிகபட்சமாக ஒரு வருடம் வரை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்கும் வரை அந்த பதவியில் இருந்தது வரலாறு.

சுமார் 222 ஆண்டுகள் my lord என்று இந்தியர்கள் அழைப்பதைக் கேட்டுவிட்டு சடுதியில் அனைத்து பிரபுத்துவ மரியாதைகளும் முடிவுக்கு வந்து , வேண்டா விருந்தாளிகள் போல வெளியேறி இங்கிலாந்திற்கு திரும்பச் சென்றது பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
Sir Alfred Henry Lionel Leach 1937–1947 , மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 18 ஆவது தலைமை நீதிபதி ஆவார் , இவர் தான்  இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிக்கையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் நடிகர்கள் தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் N.S.கிருஷ்ணன் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதியவர்.
1947 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆங்கிலேயர் 
Sir Fredrick William Gentle ஆவார்,இவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் 19ஆம் தலைமை நீதிபதி .

இவர் தனது தலைமை நீதிபதி பொறுப்பை இந்திய தலைமை நீதிபதி P.V.ராஜமன்னார் அவர்களிடம் 22 April 1948 ஆண்டில் பூரணமாக ஒப்படைத்தார், இவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் 20ஆம் தலைமை நீதிபதி.
இணைப்பில் அனைவரின் படங்களையும்  பாருங்கள்.

இந்த ஆங்கிலேய நீதிபதிகளின் தனித்தன்மை என்றால் அவர்களின் பட்டாடை மேலங்கியும், பொய்ச்சிகையும் எனலாம்,இது இங்கிலாந்து பாரிஸ்டர் சம்மேளனம் நீதிபதிகளுக்கு அவர்களின் மாட்சிமையை காக்க விதித்த சீருடை விதி (dress code) எனலாம் .

ஒரு நீதிபதி தனது நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்.  

ஒரு நீதிபதியின் பொய்ச்சிகை (wig) அவருக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்குகிறது மற்றும் சார்பு இல்லாத ஒரு அடையாளத்தை உருவாக்கும் பொருட்டு அவரை மூன்றாவது நபராகவே நீதிமன்றத்தில் முன்வைக்கிறது. 
இதுவே நீதிமன்றத்தில் பொய்ச்சிகை அறிமுகப்படுத்தப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று,

விக் அணிவதற்கான மற்றொரு காரணம் நடைமுறையில் அநாமதேயத்தை பராமரிப்பதாகும்.  நீதிபதிகளின் தோற்றம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  எதிரிகளால் பாதிக்கப்படக்கூடாது,அச்சுருத்தல் நேரக் கூடாது. 

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் தங்கள் பெயர் தெரியாமல் செயல்பட வேண்டும் என்பதால் my lord என்கின்றனர்,  வக்கீல்கள் மற்றும் வழக்குகளின் உண்மைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.  எனவே, விக் அணிவது வாடிக்கையாளர்களுடன் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் அநாமதேய நடத்தையை முன்னெடுக்கிறது, 
பொய்ச்சிகை உதவியால்  நீதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கை வழக்கின் தீர்ப்பை பாதிக்காது.  எனவே, பொய்சிகைகள் ஒரு நடுநிலையான, நியாயமான நபராக செயல்பட வைக்கும், பகுத்தறிவு முடிவை எடுக்க வைக்கும் , மூன்றாவது நபராக ஒரு நீதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)