சென்னை போன்ற வெப்பம் மிகுந்த நகரங்களுக்கு மூலை ஜன்னல்கள் (corner windows) மிகச்சிறந்த தீர்வாகும், இது குறுக்கு காற்றோட்டத்தை அதிகரித்து அறைக்குள் நிலவும் வெப்பத்தை பாதியாக குறைக்கிறது,வெளியே 40° செல்சியஸ் வெப்பம் இருந்தாலும் மூலை ஜன்னல்கள் வைத்த வீடுகளுக்குள் வெப்பம் 25° செல்சியஸ் வெப்பத்தையே உணருவோம்.
அறைக்கு ஓரத்தில் இரண்டு மூலை ஜன்னல்கள் வைத்தால் போதும் ஏசி எப்போதும் தேவைப்படாது,
நல்ல வெளிச்சம் வருவதால் பகலில் ட்யூப்லைட் வெளிச்சம் தேவையில்லை,
வீடு இது போல load bearing (பாரம் தாங்கும் சுவர் )அல்லது framed structure (பாரம் தாங்கும் R.C.C தூண்கள் ) என எதுவாகிலும் சற்றே மெனக்கெட்டால் அங்கு நமக்கு மூலை ஜன்னல்கள் அமைக்க முடியும்.
மூலை ஜன்னல்கள் வைப்பதற்கு பொறியாளர் சுணங்கதான் செய்வார், structural engineer சுணங்கதான் செய்வார், மேஸ்திரி சுணங்கதான் செய்வார், கார்பெண்டர் சுணங்கதான் செய்வார், எல்லோரையும் சமாதானப்படுத்தி நமக்குத் தேவையான மூலை ஜன்னல்களை நாம் கேட்டுப் பெறுவதில் தான் வடிவமைப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது.
90° panaromic view நமக்கு வேறு எப்படி கிடைக்கும்? இணைப்பு படத்தில் உள்ளது 2'6"x 2'6" corner window, இதற்கு sill beam கூட அமைக்கவில்லை, L வடிவ உத்திரம் 3'6x7.5 " x 9 " அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது,L வடிவ R.C.C lintel (உத்திரம்) உறுதியாக 4x 16 mm Ø கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது,
அதற்கு stirrups 8mm Ø கம்பி கொண்டு 6" spacing ல் பிணைக்கப்பட்டுள்ளது.
எத்தனை அழகாக L வடிவ உத்திரம் cantilever ஆக பிடித்து நிற்பதைப் பாருங்கள், இதற்கு நன்கு season ஆன வெள்ளை படாக் மரம் தான் உபயோகப்படுத்தப்பட்டது, 1 கோட் primer , 2 கோட் எனாமல் பெயிண்ட் அடித்ததால் பருவநிலைக்கு மர சட்டங்கள் உப்பாமல் வளையாமல் உள்ளது.பத்து வருடங்களைத் தாண்டி இந்த corner windows கடும் வெயில் மழை என அனைத்தையும் தாண்டி நீடித்து நிற்கிறது,இனியும் நிற்கும்.
இந்த படத்தில் உள்ள மூலை ஜன்னலில் அழகியலுக்காகவும் எளிமைக்காகவும்
12 mm Ø horizontal bars மட்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உறுதியான எந்த கிரில் வேலையும் செய்து கொள்ளலாம்.
எனவே corner windows அமைப்பதற்கு தயங்காதீர்கள், corner ல் RCC column வந்தால் அதை இரண்டடி தள்ளி வடிவமைக்க கேட்கலாம், ஏசி இல்லை என்றால் மின் கட்டணம் பல ஆயிரங்களில் வராது.
குறுக்கு காற்றோட்டம் என்பது இன்றைய முக்கியமான தேவை,
இது அறையின் உட்புறத்தில் காற்று சுழன்று வீசுவதைக் உறுதி செய்கிறது.
ஆண்டாண்டுகளாக குறுக்கு காற்றோட்டம் இரண்டு எதிரெதிர் சுவர்களில் ஒரத்தில் அல்லது சுவர் நடுவில் நிறுவப்பட்ட இரண்டு ஜன்னல்களால் பெறப்பட்டது,
இப்போது நிலவும் இடப்பற்றாக்குறையால் வீட்டின் வெளியே அதிக setback விட முடிவதில்லை, அவ்வளவு ஏன் பல இடங்களில் setback விடுவதே இல்லை, எனவே ஜன்னல்களை சுவர் மூலைகளுக்கு நாம் மாற்றுவது இன்றைய அத்தியாவசிய தேவையாகும் .
மூலை ஜன்னல்கள் சுத்தமான காற்றுச் சுழலை அறைக்குள் உருவாக்குகின்றன,
இந்த corner windows தருகிற காற்று இயக்கம், அறைக்கு உள்ளே 7' உயரத்தின் மேலே சுழலும் பழைய காற்றை புழுக்கத்தை தொடர்ந்து வெளியேற்றுவது குறிப்பிடத்தக்கது.
மூலை ஜன்னல்கள் லாரி பேக்கர் அவர்களின் முத்திரை வடிவமைப்பு கட்டுமானத்தில் ஒன்று, அதில் ஈர்க்கப்பட்டு புத்தா ஹட்டில் இந்த இரண்டு மூலை ஜன்னல்களை வைத்துள்ளார் நண்பர் ராஜகோபால்,
இங்கு கூரைக்கு சிமெண்ட் ஷீட் வேய்ந்துள்ளார், அதன் மீது வெகு அடர்த்தியாக creepers கொடிகளை படர விட்டுள்ளார்.
இங்கு ceiling fan இல்லை என்பது மற்றொரு அதிசயம், இரண்டு எதிரெதிர் சுவர்களில் wall mounted fan இரண்டு மட்டும் வைத்துள்ளார்,
கத்திரி கால இரவில் கூட இதன் உள்ளே இருபது பேர் அமர்ந்து சாப்பிட்டாலும், புழுங்குவதில்லை , வியர்ப்பதில்லை என்பது கண்கூடு.
இதன்மூலம் பத்து வருடங்களில் அளவில்லாத நன்மைகள் அடைந்திருக்கிறார், நீங்களும் corner windows நிறுவி நிறைய நன்மைகள் அடைய வேண்டும் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.
#corner_window,#மூலை_ஜன்னல்