டார்க்கஸ்ட் ஹவர் Darkest Hour 2017

டார்க்கஸ்ட் ஹவர் (Darkest Hour) 2017 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே உற்றுநோக்கச் செய்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்காலத் திரைப்படம்,

 இரண்டாம் உலகப் போரின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பிரிட்டன் சந்தித்த அரசியல் அதிர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஜோ ரைட் (Joe Wright) இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு தனிமனிதனின் மன உறுதி எப்படி ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்தது என்பதை மேதமையுடன் காட்சிப்படுத்துகிறது.

 அந்தோணி மெக்கார்டன் எழுதிய செறிவான திரைக்கதையில் வின்ஸ்டன் சர்ச்சில் எனும் ஆளுமையின் பயம், கோபம், நகைச்சுவை மற்றும் அசாத்திய துணிச்சல் என அனைத்தும் அணு அணுவாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

 இத்திரைப்படத்தின்  அடிநாதம்  ஒரு தனிமனிதனின் மன உறுதி எப்படி ஒரு தேசத்தின் கூட்டு ஆன்மாவைத் தட்டியெழுப்புகிறது என்பதில் அடங்கியுள்ளது. 
அதிகாரம் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு நடுவே உண்மையான தலைமை  பெரும்பான்மைக்கு வளைந்து கொடுப்பதில் இல்லை மாறாகத் தனது கொள்கையில் உறுதியாக நிற்பதே என்பதை இத்திரைப்படம் உரக்கச் சொல்கிறது. 

தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு சமாதானம் எனும் பெயரில் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கும் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிடிவாதம் ஒரு நாட்டின் தன்மானமாகப் படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

இருண்ட காலங்களில் நம்பிக்கையை விதைக்கும் சொற்களுக்கு எவ்வளவு பெரிய வலிமை இருக்கிறது என்பதை இக்கதை முன்வைக்கிறது. 

ஒரு சிறந்த தலைவன் என்பவன் மக்களிடமிருந்து அந்நியப்பட்டவன் அல்ல என்பதைச் சுரங்கப்பாதை பயணத்தின் மூலம் இயக்குனர் உணர்த்துகிறார்.

 சாதாரண மனிதர்களின் உணர்வுகளே ஒரு நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன எனும் உண்மையை சர்ச்சில் உணரும் தருணம் படத்தின் ஆன்மாவாக மாறுகிறது. 

பயம் என்பது இயல்பானது ஆனால் அந்த அச்சத்தைக் கடந்து நிற்கும் துணிச்சலே வெற்றிக்கான முதல் படி என்பதை இத்திரைப்படம் போதிக்கிறது.

சுதந்திரத்திற்காகக் கொடுக்கப்படும் விலை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதைச் செலுத்தத் தயங்கக் கூடாது எனும் தத்துவமே படத்தின் மையப்பொருள். 

எதிரி பலமானவனாக இருக்கலாம் ஆனால் சரணடைதல்  ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் என்பதைச் சர்ச்சிலின் உரைகள் வழிமொழிந்து நிற்கின்றன.

 இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான போராட்டமாக மட்டுமன்றி ஒரு மனிதன் தனக்குள்ளே நடத்தும் தார்மீகப் போராட்டமாகவும் இத்திரைப்படம் பரிணமிக்கிறது. 

இறுதியில் ஒரு தலைவனின் வெற்றி  அவன் எடுக்கும் முடிவுகளில் மட்டுமல்ல அந்த முடிவின் பின்னால் ஒரு தேசத்தையே அணிதிரட்டும் அவனது நேர்மையில் இருக்கிறது என்பதே இப்படத்தின் ஆழமான செய்தியாகும்.

இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கேரி ஓல்ட்மேனின் அசாத்திய நடிப்பு. சர்ச்சிலின் தோற்றம், அவரது தனித்துவமான பேச்சு நடை மற்றும் உடல் மொழி ஆகியவற்றை மிகச் சரியாகக் கொண்டுவர அவர் இருநூறு மணி நேரத்திற்கும் மேலாக ஒப்பனைக்காகச் செலவிட்டார். 

இப்படத்தின் இசை அமைப்பாளர் தாரியோ மரியனெல்லி ,  இசை ஒவ்வொரு காட்சியின் பதற்றத்தையும் உணர்ச்சியையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

 புருனோ டெல்போனலின் ஒளிப்பதிவு நாடாளுமன்றத்தின் இருளையும் போரின் நிழலையும் மிக அழகாகத் திரையில் கடத்துகிறது.

இப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒப்பனைக்கான விருதுகளை வென்றது. 

 படப்பிடிப்பின் போது கேரி ஓல்ட்மேன் சுமார் நானூறு சுருட்டுகளைப் புகைத்தார். இதற்காக மட்டும் இருபதாயிரம் டாலர்கள் செலவிடப்பட்டது,இதனால் அவருக்கு நிகோடின் விஷ பாதிப்பு  ஏற்பட்டது.

ஜான் ஹர்ட் முதலில் சேம்பர்லின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு ரொனால்ட் பிக்கப் அந்த வாய்ப்பைப் பெற்றார்.

 சர்ச்சிலின் உதவியாளராக நடித்த லில்லி ஜேம்ஸ் கையாண்ட தட்டச்சு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அந்த வரலாற்று காலத்திற்கு ஏற்ப தத்ரூபமாக உருவாக்கப்பட்டவை.

இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் கேரி ஓல்ட்மேன் மேற்கொண்ட அர்ப்பணிப்பு உலகத் தரம் வாய்ந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற ஒரு உருவத்தை எட்ட அவர் தினமும் அதிகாலை மூன்று மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார்.

 சுமார் நான்கு மணி நேரம் நீடிக்கும் நீண்ட ஒப்பனைக்குப் பிறகுதான் அவர் கேமரா முன்னால் தோன்றுவார். 
 வின்ஸ்டன் சர்ச்சிலின் உடல் வாகை அடைவதற்காக ஒரு பிரத்யேகமான ஃபோம் சூட் பயன்படுத்தப்பட்டது. அந்த உடையின் எடையைச் சுமந்து கொண்டே அவர் பல மணி நேரம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் புருனோ டெல்போனல் ஒளியை கையாண்ட விதம் ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போலவே உள்ளது. 

குறிப்பாக நாடாளுமன்றத்தின் இருண்ட அறைகளில் மேலிருந்து விழும் ஒற்றை ஒளிக்கற்றை சர்ச்சிலின் தனிமையையும் அவர் சுமக்கும் பொறுப்பையும் அழகாகச் சித்தரிக்கிறது.

 இத்திரைப்படத்தில் காட்டப்படும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டது. 

1959 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த அந்த ரயிலை எசெக்ஸ் பகுதியில் இருந்து கொண்டு வந்து லீவ்டன் ஸ்டுடியோவில் வைத்துப் படமாக்கினார்கள்.

 வரலாற்றுப் பதிவுகளைச் சிதைக்காமல் இருக்க ஒவ்வொரு சிறிய பொருளையும் தேடித் தேடிச் சேர்த்தனர்.

இப்படத்தில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடித்த பென் மெண்டல்சோன் அந்தப் பாத்திரத்திற்காகத் தனது பேச்சில் ஒருவிதத் தயக்கத்தையும் திக்குவாய் திணறலையும் மிகச் சரியாகக் கொண்டு வந்தார்.

 சர்ச்சிலுக்கும் மன்னருக்கும் இடையிலான அந்த ஆரம்பக்கால இடைவெளியையும் பின்னர் உருவான நெருக்கத்தையும் அவர்களின் மெல்லிய உடல் மொழிகள் மூலமே ஜோ ரைட் வெளிப்படுத்தியிருந்தார்.

 உண்மையான சார்ட்வெல் இல்லத்தின் வெளிப்பகுதியை சர்ச்சிலின் வீடாகப் பயன்படுத்தியது படத்திற்கு ஒரு வரலாற்று நம்பகத்தன்மையை வழங்கியது. 

அதேபோல் அமைச்சரவை அறையின் தத்ரூபமான அரங்கு லண்டனின் நிலத்தடி போர் அறைகளைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சேர்ந்து பார்வையாளர்களை 1940 களுக்கே அழைத்துச் செல்கின்றன.

இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய அந்தோணி மெக்கார்டன் இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒரு நாடக மேடையின் நேர்த்தியுடன் வடிவமைத்தார்.

 வின்ஸ்டன் சர்ச்சிலின் உண்மையான வாழ்விடமான சார்ட்வெல் இல்லத்தின் வெளிப்புறக் காட்சிகள் அந்த இடத்திலேயே படமாக்கப்பட்டன. 

அதேபோல் பக்கிங்காம் அரண்மனையின் உட்புறக் காட்சிகளுக்காக தெற்கு யார்க்ஷயரில் உள்ள வென்ட்வொர்த் வுட்ஹவுஸ் எனும் பிரம்மாண்ட மாளிகை பயன்படுத்தப்பட்டது.

 ஒவ்வொரு இடமும் அந்தந்த காலக்கட்டத்தின் வரலாற்றுத் தன்மையை துல்லியமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் படக்குழுவினர் தீவிரமாக இருந்தனர்.

இப்படத்தின் பின்னணி இசை அமைப்பாளர் தாரியோ மரியனெல்லி சர்ச்சிலின் மன அழுத்தத்தையும் நாட்டின் பதற்றத்தையும் இசையின் மூலமே கடத்தினார்.

 குறிப்பாக பியானோ இசையை அவர் பயன்படுத்திய விதம் கதையின் ஓட்டத்திற்கு ஒருவித வேகத்தை அளித்தது.

படத்தில் வரும் நாடாளுமன்றக் காட்சிகளைப் படமாக்க மான்செஸ்டர் நகர மண்டபம் மற்றும் ஜான் ரைலண்ட்ஸ் நூலகம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

 லண்டன் நாடாளுமன்றத்தின் உட்புற அமைப்பைப் போலவே இவை இருந்ததால் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் தொடர்பான மற்ற படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டு போர்க்களத்தை விட மூடிய அறைகளுக்குள் நடக்கும் அதிகாரப் போராட்டத்தை மையமாகக் கொண்டது.

 போரின் வியூகங்களை விட ஒரு தலைவனின் மனப் போராட்டத்தையே இயக்குனர் ஜோ ரைட் கேமராவின் கோணங்கள் மூலம் விவரித்தார்.

 படத்தில் வரும் பிரான்ஸ் பிரதமர் பால் ரெய்னாட் மற்றும் பிற சர்வதேச தலைவர்களின் பாத்திரங்கள் மிகக் குறுகிய நேரமே வந்தாலும் அந்த காலகட்டத்தின் உலகளாவிய நெருக்கடியைச் சொல்லும் கருவியாக அமைந்தன.

 படத்தின் ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் ஒருவிதமான புகைய படிந்த வரலாற்று புகைப்படத்தைப் போன்ற உணர்வைத் தரும்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன. 

இவை அனைத்தும் சேர்ந்து ஒரு போர்க்கால ஆவணத்தைப் பார்க்கும் அனுபவத்தைத் தந்தன.

இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் வரலாற்றுத் தரவுகளைத் திரையில் கொண்டு வர மிக நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

 இப்படத்தின் இறுதி காட்சியில் சர்ச்சில் ஆவேசமாகப் பேசும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரை உண்மையில் 1940 ஜூன் 4 ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது.

 ஆனால் படத்தில் நாடகத் தன்மைக்காக அது மே 28 ஆம் தேதியே நடப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சில் அந்த உரையை வானொலியில் நேரடியாக நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் அதனை 1949 ஆம் ஆண்டுதான் ஒலிப்பதிவு செய்தார். படத்தில் காட்டப்படும் அந்த நேரடி ஒளிபரப்பு உணர்வு ஒரு சினிமாவுக்கான மெருகூட்டலாகும்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் சர்ச்சிலின் குரலை அப்படியே பிரதிபலிக்க நவீன ஒலித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். 

கேரி ஓல்ட்மேன் தனது குரலை சர்ச்சிலின் கணீர் குரலாக மாற்ற பல மாதங்கள் குரல் பயிற்சி மேற்கொண்டார்.

 அவர் பேசும்போது ஏற்படும் அந்த மெல்லிய மூச்சு இரைச்சல் மற்றும் இடைவெளிகள் கூட வரலாற்றுப் பதிவுகளில் உள்ளதைப் போலவே ஒலிக்கச் செய்யப்பட்டன.

 இப்படத்தில் வரும் காலே கோட்டை மற்றும் அட்மிரல் ராம்சேவின் தலைமையகக் காட்சிகள் கென்ட் பகுதியில் உள்ள ஃபோர்ட் ஆம்ஹெர்ஸ்ட் எனும் இடத்தில் படமாக்கப்பட்டன. 
இந்த இடம் உண்மையான போர்க்கால உணர்வைத் திரையில் கொண்டு வர உதவியது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கேரி ஓல்ட்மேன் இதன் அடுத்த பாகத்தை உருவாக்கும் ஆர்வம் குறித்துப் பேசினார். அதில் 1945 ஆம் ஆண்டு நடந்த யால்டா மாநாட்டை மையமாக வைத்து வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடையிலான உறவை விவரிக்கத் திட்டமிடப்பட்டது. 

இத்திரைப்படம் வெளியான அதே ஆண்டில் வந்த டன்கிர்க் திரைப்படத்திற்கு இது ஒரு சிறந்த இணையான படமாகப் பார்க்கப்படுகிறது. 
ஒன்று போர்க்களத்தின் வலியைச் சொன்னால் மற்றொன்று அந்தப் போரை வழிநடத்திய அறையின் பதற்றத்தைச் சொன்னது.

 படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சர்ச்சில் இருட்டில் அமர்ந்து ஒரு தீக்குச்சியைப் பற்ற வைக்கும்போது வரும் அந்த ஒளியும் நிழலும் அவரது கதாபாத்திரத்தின் மர்மத்தையும் ஆளுமையையும் ஒரே ஒரு சட்டகத்தில் விளக்கிவிடும்.

 படத்தின் எடிட்டர் வலேரியோ பொனெல்லி காட்சிகளின் வேகத்தை சர்ச்சிலின் மன ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தார். 
குறிப்பாக போர் வரைபடங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு இடையே நகரும் காட்சிகள் ஒரு த்ரில்லர் படத்திற்கு இணையான வேகத்தைக் கொடுத்தன. 

இத்தகைய சிறு சிறு நுணுக்கங்களே இப்படத்தை வெறும் வாழ்க்கை வரலாறாக மட்டுமன்றி ஒரு கலைப் படைப்பாக மாற்றின.
==========================
படத்தின் கதை:-

 இத்திரைப்படம் ஒரு மாபெரும் தேசத்தின் இக்கட்டான அரசியல் சதுரங்கத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

1940 ஆம் ஆண்டு மே மாதம் ஹிட்லரின் நாஜிப் படைகள் ஐரோப்பாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வேளையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிலவிய கடும் கொந்தளிப்புடன் கதை தொடங்குகிறது.

 அப்போதைய பிரதமர் நெவில் சேம்பர்லின் மீது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

 நாஜிக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அவர் தகுதியற்றவர் என முழக்கங்கள் எழுகின்றன. இந்த இக்கட்டான நிலையில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் விருப்பமில்லாமல் வின்ஸ்டன் சர்ச்சில் (கேரி ஓல்ட்மேன்) என்பவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க அழைக்கிறார்.

 சர்ச்சிலின் முந்தைய காலத்து அரசியல் தோல்விகள் மற்றும் அவரது முரட்டுத்தனமான சுபாவம் காரணமாக அவர் மீது யாருக்கும் பெரிய நம்பிக்கை இருப்பதில்லை.

சர்ச்சில் பிரதமராகப் பொறுப்பேற்ற அதே சமயம் பிரான்சில் நிலைமை மிக மோசமாகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தின் பெரும்பகுதி டன்கிர்க் கடற்கரையில் நாஜிக்களால் சூழப்பட்டு தப்பிக்க வழியின்றித் தவிக்கிறது. 

இந்த இக்கட்டான தருணத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அவரது அமைச்சரவை சகாக்களான ஹாலிஃபாக்ஸ் மற்றும் சேம்பர்லின் ஆகியோரிடமிருந்து கடும் அழுத்தம் உண்டாகிறது.

 ஹிட்லருடன் இத்தாலி வழியாகச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் பிரிட்டன் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். 

ஆனால் சர்ச்சில் அடிபணிவதை விடப் போராடி மடிவதே மேல் என நினைக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி கிளமெண்டைன் அவருக்குப் பெரும் துணையாக நிற்கிறார். 

தனது புதிய உதவியாளர் எலிசபெத் லேய்டனிடம் அவர் காட்டும் கடுமை பின்னர் மெல்ல மெல்ல ஒரு புரிதலாக மாறுகிறது.

அமைச்சரவைக்குள் சர்ச்சில் தனிமைப்படுத்தப்படுகிறார். ஒருபுறம் ராணுவத் தளபதிகள் டன்கிர்க் மீட்புப் பணி சாத்தியமற்றது என கைவிரிக்கும் நிலையில் சர்ச்சில் ஒரு துணிச்சலான முடிவை எடுக்கிறார். 

காலே பகுதியில் இருக்கும் சிறிய பிரிட்டிஷ் படையை தற்கொலைத் தாக்குதலுக்கு இணையான ஒரு போரில் ஈடுபடச் செய்து அதன் மூலம் டன்கிர்க் வீரர்களை மீட்க நேரம் வாங்குகிறார்.

 அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் உதவி கேட்டும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இத்தகைய பெரும் பாரத்தைச் சுமக்கும் சர்ச்சில் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து போகிறார்.

 அப்போது மன்னர் ஜார்ஜ் சர்ச்சிலின் இல்லத்திற்கு வந்து அவருக்குத் தனது முழு ஆதரவை வழங்குகிறார்.

 மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பதை அறிய சர்ச்சில் முதல்முறையாக லண்டன் சுரங்கப்பாதையில் பயணம் செய்கிறார்.

அங்குள்ள சாதாரண குடிமக்கள் எக்காரணம் கொண்டும் ஹிட்லரிடம் சரணடையக் கூடாது என ஒருமித்த குரலில் சர்ச்சிலிடம் கூறுகிறார்கள். 

இது அவருக்கு ஒரு புதிய தெம்பை அளிக்கிறது. அமைச்சரவையின் சதித்திட்டங்களை முறியடித்து நாடாளுமன்றத்தில் அவர் நிகழ்த்தும் அந்தப் புகழ்பெற்ற உரை பிரிட்டனின் வரலாற்றையே மாற்றுகிறது.

 கடற்கரைகளிலும் இடுக்கிலும் போரிடுவோம் என அவர் முழங்கும்போது ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அவருக்குப் பின்னால் திரள்கிறது. 

இதுவே ஆபரேஷன் டைனமோ எனும் மாபெரும் மீட்பு நடவடிக்கை வெற்றிபெறக் காரணமாகிறது.

இப்படம் சொல்லும் செய்தி  ஒரு தலைவனின் ஆகச்சிறந்த ஆயுதம் அவனது சொற்கள் மட்டுமே. 

உலகம் ஒரு இருண்ட காலத்தைச் சந்திக்கும்போது அச்சத்தை விட நம்பிக்கையே அதிக வலிமை கொண்டது என்பதை இப்படம் உணர்த்துகிறது. 

சமரசம் செய்துகொள்வது தற்காலிகப் பாதுகாப்பைத் தரலாம் ஆனால் சுதந்திரத்தை வழங்காது என்பதை சர்ச்சிலின் பிடிவாதம் மெய்ப்பிக்கிறது. 

ஒரு தனிமனிதனின் மன உறுதி ஒரு தேசத்தின் மொத்த வீரத்தையும் தட்டியெழுப்ப முடியும் என்பதே இத்திரைப்படம் வழியே நாம் உணரும் மாபெரும் உண்மையாகும். 

வின்ஸ்டன் சர்ச்சில் வெறும் அரசியல்வாதியாக அல்லாமல் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இக்கதையில் மிளிர்கிறார். 

தோல்வியின் விளிம்பில் நின்று வெற்றியைச் செதுக்கும் கலையை இப்படம் விரிவாகப் பேசுகிறது.

ஒரு தலைவன் என்பவன் பெரும்பான்மையின் கருத்துக்குப் பணிந்து போபவன் அல்ல, மாறாகப் பெரும் நெருக்கடியின் போது சரியான கொள்கையை முன்னிறுத்தி மக்களை வழிநடத்துபவன். 

தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல, வெற்றி என்பது இறுதியானது அல்ல, தொடர்வதற்கான தைரியமே முக்கியமானது எனும் சர்ச்சிலின் தத்துவமே இப்படத்தின் ஆன்மா.

 அடிமைப்பட்டு நிம்மதியாக வாழ்வதை விட, உரிமையைக் காக்கப் போராடி மடிவதே ஒரு தேசத்திற்கு கௌரவம் என்பதை இத்திரைப்படம் உரக்கச் சொல்கிறது.

 சொற்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதையும், ஒரு சரியான உரை ஒரு ராணுவத்தையே உருவாக்கும் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. 

ஒரு நாட்டின் இருண்ட மணித்துளிகளில் தோன்றும் ஒரு சிறு ஒளிக்கீற்று உலக வரலாற்றையே மாற்றும் வல்லமை கொண்டது என்பதே இப்படம் பார்வையாளர்களுக்குக் கடத்தும் பாடமாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) ஆஸ்கர் (75) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)