ப்ளூ ஜாஸ்மின் Blue Jasmine 2013

ப்ளூ ஜாஸ்மின் Blue Jasmine  2013ஆம் ஆண்டு வெளியான  அமெரிக்க அவல நகைச்சுவை-நாடகத் திரைப்படம்.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வுடி ஆலன் எழுதி இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தின் அடிநாதம்  மனிதனின் பேராசை, சுய ஏமாற்று மற்றும் வர்க்க வீழ்ச்சியால் ஏற்படும் உளவியல் சிதைவு ஆகும்.

 போலி கௌரவம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கும் ஒரு பெண், தன் கணவனின் பெருங்குற்றங்களால் அனைத்தையும் இழந்து நடுத்தர வர்க்க சூழலுக்கு தள்ளப்படும்போது, அவளால் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. 

கடந்த கால பகட்டையும், நிகழ்கால ஏழ்மையையும் சமன் செய்ய முடியாமல் தன் தவறுகளையும் பொய்களையும் மூடிமறைக்க முயன்று, இறுதியில் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டு தனித்து விடப்படும் ஒரு பெண்ணின் தத்தளிப்பை இப்படம் மிக ஆழமாகப் பேசுகிறது.

ஜேவியர் அகிரேஸரோப்  இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கேட் பிளான்ஷெட் நடித்துள்ளார். அவருடன் சாலி ஹாக்கின்ஸ், அலெக் பால்ட்வின், பீட்டர் சார்ஸ்கார்ட், லூயிஸ் சி.கே., ஆண்ட்ரூ டைஸ் கிளே மற்றும் பாபி கன்னவாலே உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். 

 பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து மனநலம் பாதிக்கப்பட்ட நியூயார்க் சமூகவாதியாக கேட் பிளான்ஷெட்டும், அவரது சாதாரண நடுத்தர வர்க்க சகோதரியாக சாலி ஹாக்கின்ஸும் தங்களின் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றதுடன், பல்வேறு உலகளாவிய விருதுகளையும் குவித்தது. 

இப்படத்தில் நடித்ததற்காக கேட் பிளான்ஷெட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

 அதுமட்டுமின்றி, சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது, எஸ்.ஏ.ஜி  விருது மற்றும் பாஃப்டா  விருதையும் அவர் பெற்றார்.

 இத்திரைப்படத்திற்காக சாலி ஹாக்கின்ஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்கும், வுடி ஆலன் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டனர்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு உருவாக்கத்தின் போது, படத்தின் பின்னணி மற்றும் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சில சுவாரஸ்யமான உத்திகள் கையாளப்பட்டன.
ஒளிப்பதிவாளர் ஜேவியர் அகிரேஸரோப், கதையின் முக்கிய இரண்டு களங்களான நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களின் வர்க்க வேறுபாடுகளைக் காட்சிகளின் வழியே கடத்தினார். 

ஜாஸ்மினின் கடந்த கால ஆடம்பர நியூயார்க் வாழ்க்கை பிரகாசமான, வெதுவெதுப்பான ஒளியமைப்பிலும், அவளது தற்போதைய சான் பிரான்சிஸ்கோ நடுத்தர வர்க்க வாழ்க்கை சற்றே எதார்த்தமான, குளிர்ந்த ஒளியமைப்பிலும் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது அதன் ஆடை மற்றும் கலை வடிவமைப்பு ஆகும்.

 ஜாஸ்மினின் பணக்கார தோற்றத்தைக் காட்டுவதற்கு படக்குழுவிற்கு வெறும் $35,000 மட்டுமே ஆடை பட்ஜெட்டாக இருந்தது.

 இதனால், காஸ்டியூம் டிசைனர் சுசி பென்சிங்கர் மற்றும் வுடி ஆலன் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி சேனல், ஃபெண்டி, ஹெர்ம்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களிடமிருந்து ஆடைகளையும், லூயிஸ் விட்டன் நிறுவனத்திடமிருந்து விலையுயர்ந்த பெட்டிகளையும் கடனாகப் பெற்றனர்.

குறிப்பாக, படம் முழுவதும் ஜாஸ்மின் அணியும் புகழ்பெற்ற வெள்ளை நிற 'ஷனல்' (channel )கோட்டை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட் இரண்டு பிரதிகளாக வழங்கினார்.

 அதில் ஒன்று நியூயார்க் காட்சிகளுக்காகப் புதியதாகவும், மற்றொன்று சான் பிரான்சிஸ்கோ காட்சிகளில் அவள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டதைக் காட்டுவதற்காக துணி மென்மையாக்கியில்  ஊறவைக்கப்பட்டு, தேய்ந்த தோற்றத்துடனும் பயன்படுத்தப்பட்டது.

 இத்தகைய நுணுக்கமான காட்சி அமைப்புகள் ஜாஸ்மினின் வீழ்ச்சியைத் திரையில் துல்லியமாகக் கடத்த உதவின.

இத்திரைப்படத்தின் இசை உருவாக்கத்தில் வுடி ஆலன் தனது வழக்கமான பாணியான கிளாசிக் ஜாஸ் ) இசையை முதன்மையாகப் பயன்படுத்தினார்.

 இப்படத்திற்கெனத் தனியாக ஒரு புதிய பின்னணி இசைக்கோர்ப்பு  உருவாக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக ஏற்கனவே புகழ்பெற்ற சில ஜாஸ் பாடல்களின் தொகுப்பே பயன்படுத்தப்பட்டது.

கதையின் முதன்மைக் கதாபாத்திரமான ஜாஸ்மினின் மனநிலை மாற்றங்களையும், அவளது கடந்த கால நினைவுகளையும் கடத்துவதில் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற "ப்ளூ மூன்"  என்ற பாடல் மிக முக்கியப் பங்கு வகித்தது. ஜாஸ்மின் தனது கணவரை முதன்முதலில் சந்தித்தபோது இந்தப் பாடல் ஒலித்ததால், அவள் மன அழுத்தத்திற்குள்ளாகி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் போதெல்லாம் இந்தப் பாடலையே முணுமுணுக்கிறாள்.

 நியூயார்க்கின் உயர்தர சமூக வாழ்க்கையைக் காட்ட மென்மையான, நேர்த்தியான ஜாஸ் இசையும், சான் பிரான்சிஸ்கோவின் எதார்த்தமான சூழலைக் காட்ட சற்றே துடிப்பான ப்ளூஸ் மற்றும் கிளாசிக் ஜாஸ் இசையும் பயன்படுத்தப்பட்டன.

 படத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும், ஏமாற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்த இந்த இசைத் தேர்வுகள் பெரிதும் உதவின.

 திரைப்படத்தின் கதை உருவாக்கத்தின் பின்னணியில் நிஜ உலக நிகழ்வுகளும், கிளாசிக் இலக்கியத் தாக்கங்களும் முக்கியப் பங்காற்றின.

இப்படத்தின் மையக்கதை, அமெரிக்க வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 'பெர்னார்ட் மடோஃப்' நிதி மோசடி ஊழலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

 அந்தப் பெருவாரியான பொருளாதாரக் குற்றத்திற்குப் பிறகு, சொகுசு வாழ்க்கையை இழந்து நடுத்தர நிலைக்குத் தள்ளப்பட்ட பெரும் பணக்கார குடும்பத்து பெண்களின் நிஜ வாழ்க்கை நிலையை வுடி ஆலன் உற்றுநோக்கி இந்தக் கதையை எழுதினார்.

மேலும், இக்கதை டென்னசி வில்லியம்ஸின் புகழ்பெற்ற நாடகமான 'ய ஸ்ட்ரீட்கார் நேம்டு டிசையர்'  கதையமைப்போடு மிக நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

 ஆடம்பரத்தை இழந்து, மனநிலை பாதிக்கப்பட்டு, தனது ஏழை சகோதரியின் எளிய வீட்டிற்குத் தஞ்சம் புகுந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதைக்களம் அந்த நாடகத்தின் நவீன வடிவமாகவே உருவாக்கப்பட்டது.

அதேபோல், வுடி ஆலன் தனது முன்னாள் துணையான மியா ஃபாரோவுடனான கசப்பான பிரிவின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்த ஜாஸ்மின் கதாபாத்திரத்தின் கதையை உருவாக்கினார் என்ற ஒரு வலுவான விவாதமும் இத்திரைப்படம் வெளியானபோது  எழுந்தது.

 கதாநாயகி ஜாஸ்மின், கடந்த கால ஆடம்பரங்களை மறக்க முடியாமல் தன் சகோதரியின் சாதாரண வீட்டுக்குத் தஞ்சம் புகுவது மற்றும் அங்குள்ள ஆண்களுடன் அவளுக்கு ஏற்படும் வர்க்க முரண்பாடுகள் என நாடகத்தின் முக்கியக் கூறுகள் 'ய ஸ்ட்ரீட்கார் நேம்டு டிசையர்' படத்தில் இருந்து இதில் தழுவப்பட்டிருந்தன.

 கடந்த கால நினைவுகளும் நிகழ்கால எதார்த்தமும் மாறி மாறி வரும் நேரியலற்ற (Non-linear) திரைக்கதை அமைப்பின் மூலம், ஒரு பெண்ணின் மனச்சிதைவை வுடி ஆலன் மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தார்.

============================
படத்தின் கதை:-

ஜீன் ஜாஸ்மின் பிரான்சிஸ் (கேட் பிளான்ஷெட்) நியூயார்க் நகரத்திலிருந்து விமானம் மூலம் சான் பிரான்சிஸ்கோவில் அவளது சகோதரியின் வீட்டில்  வந்து இறங்குகிறாள். 

அவள் தான் முற்றிலும் திவாலாகிவிட்டதாகக் கூறினாலும், அவள் முதல் வகுப்பில் பயணித்ததை அறிந்து அவளது சகோதரி ஜிஞ்சர் (சாலி ஹாக்கின்ஸ்) அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைகிறாள். 

ஜாஸ்மின் சமீபத்தில் கடுமையான நரம்பு முறிவால் பாதிக்கப்பட்டு, பெரும் கடனில் மூழ்கியதால், வேறு வழியின்றித் தன் சகோதரியின் எளிய குடியிருப்பில் தஞ்சம் புக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

அவளது கடந்த கால பின்னோட்டக் காட்சிகள் மூலம், அவளது கணவரான நிதி மேலாளர் ஹால் பிரான்சிஸ் (அலெக் பால்ட்வின்), தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டது தெரியவருகிறது. 

ஹாலின் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் ஜிஞ்சரும் அவளது முன்னாள் கணவர் ஆக்சியும் (ஆண்ட்ரூ டைஸ் கிளே) அடங்குவர்.

 ஆக்சி ஒரு தொழில் தொடங்குவதற்காக வைத்திருந்த லாட்டரி பரிசுப் பணமான இரண்டு லட்சம் டாலர் தொகையை ஹால் ஏமாற்றிப் பறித்ததால், அவர்களின் திருமண வாழ்க்கையும் முறிந்து போனது. 

பின்னர், பொதுவெளியில் ஏகமாய் அவமானமடைந்த ஹால் சிறையிலேயே தற்கொலை செய்து கொள்கிறான்.

 ஹாலின் மறைவைத் தொடர்ந்து அவனது மகனான டானி (ஆல்டன் ஏஹ்ரென்ரைக்), ஹார்வர்ட் பல்கலைக்கழகப் படிப்பைக் கைவிட்டு, தன் மாற்றாந்தாயான ஜாஸ்மினுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்கிறான். 

கணவனின் இறப்பு மற்றும் குடும்பச் சிதைவுக்குப் பிறகு, ஜாஸ்மின் கடுமையான மதுப்பழக்கத்திற்கும், மன அழுத்த மாத்திரைகளுக்கும் அடிமையாகி, தன் கடந்த காலத்தைப் பற்றித் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் மனநோய்க்கு ஆளாகிறாள்.

ஜிஞ்சர் தற்போது சிலி (பாபி கன்னவாலே) என்ற மெக்கானிக்குடன் பழகி வருகிறாள். 

ஆனால், அவனது சாதாரண உழைக்கும் வர்க்க வேலையையும், அவனது முரட்டுத்தனமான குணத்தையும் ஜாஸ்மின் அடியோடு வெறுக்கிறாள். 

தன் வசம் உள்ள உயர்ந்த ரசனை மற்றும் வீடுகளை அலங்கரித்த பழைய அனுபவத்தைக் கொண்டு ஒரு உள்துறை வடிவமைப்பாளராக மாற ஜாஸ்மின் ஆசைப்படுகிறாள்.

 செலவு குறைவாக இருக்கும் என்பதால் இணையவழி படிப்பைத் தேர்ந்தெடுக்க நினைக்கும் அவளுக்கு, கணினியைப் பயன்படுத்தத் தெரியாததால் முதலில் கணினி வகுப்பில் சேர முடிவெடுக்கிறாள். 

வருமானம் இல்லாத காரணத்தால், விருப்பமே இன்றி ஒரு பல் மருத்துவ மனையில் வரவேற்பாளராக வேலைக்குச் சேர்கிறாள்.

 அங்குள்ள பல் மருத்துவர் டாக்டர் ஃப்ளிக்கர் (மைக்கேல் ஸ்டுல்பர்க்) அவளிடம் தவறாக நடக்க முயன்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபடும்போது, அவரை எதிர்த்துப் போராடிவிட்டு ஜாஸ்மின் தன் வேலையை விலகுகிறாள்.

மரின் கவுண்டியில் உள்ள ஒரு விருந்தில் ஜாஸ்மின், வசதி படைத்த விதவையான டுவைட் வெஸ்ட்லேக் (பீட்டர் சார்ஸ்கார்ட்) என்ற பணக்காரரைச் சந்திக்கிறாள் ஜாஸ்மின்,   அவளது தரித்திர நிலைமை மாறப்போவதாக நம்பிக்கை கொள்கிறாள்.

 கணினி வகுப்பில் பழகிய ஒரு தோழியின் அழைப்பின் பேரில் அவள் அந்த விருந்துக்குச் செல்கிறாள் ஜாஸ்மின்.

அவளது பழைய பணக்கார நண்பர்கள் யாரும் இப்போது அவளுடன் தொடர்பில் இல்லை. விருந்தில் சந்தித்த டுவைட் ஒரு தூதராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆக விரும்பும் அரசியல் ஆசை கொண்டவராகவும் இருக்கிறான். 

அவனிடம் தன்னை ஒரு உள் அலங்கார வடிவமைப்பாளர் என்றும், தன் கணவர் இதய நோயால் இறந்து போனார் என்றும் அவர் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், தனக்குக் குழந்தைகள் யாரும் இல்லை என்றும் பொய் சொல்லித் தன்னை ஒரு உயர் சமூகப் பெண்ணாகக் காட்டிக் கொள்கிறாள்.

 அவளது அலங்கார நளினத்தால் ஈர்க்கப்பட்ட டுவைட், தனது புதிய வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்கிறான்.

 அதே விருந்தில் ஜிஞ்சருக்கும் அல் (லூயிஸ் சி.கே.) என்பவனுக்கும் காதல் மலர்கிறது. இதனால் ஜிஞ்சர் சிலியை விட்டுப் பிரிகிறாள், ஆனால் சிலியோ தன்னை விட்டுப் போக வேண்டாம் என்று கெஞ்சுகிறான்.

 இறுதியில், அல் ஏற்கனவே திருமணமானவன் என்பதை ஜிஞ்சர் கண்டறிந்து, ஜாஸ்மினின் பேச்சைக் கேட்டு சிலியைத் தன்னை விடத் தாழ்ந்தவனாக எண்ணித் தவறு செய்துவிட்டதை உணர்ந்து, மீண்டும் சிலியிடமே சென்று அவனுடன் இணைகிறாள்.

மறுபுறம், ஜாஸ்மினுக்கும் டுவைட்டுக்கும் இடையிலான காதல் ஆழமாகி, அவன் அவளுக்கு ஒரு நிச்சயதார்த்த மோதிரம் வாங்க உயர்தர நகைக் கடைக்கு அழைத்துச் செல்கிறான். 

அப்போது எதிர்பாராதவிதமாக நகைக் கடைக்கு வெளியே அவர்கள் ஆக்சியைச் சந்திக்கும்படி நேரிடுகிறது. 

ஆக்சி, ஹால் தங்களை ஏமாற்றிய பணத்தைப் பற்றி ஜாஸ்மினைக் கடுமையான வார்த்தைகளால் சாடுகிறான்.

 அதோடு, அவளது வளர்ப்பு மகன் டானி அருகில் உள்ள ஓக்லாந்தில் திருமணமாகி வசித்து வருவதையும் வெளிப்படுத்துகிறான்.

 ஜாஸ்மின் தன்னிடம் இவ்வளவு பெரிய பொய்களைக் கூறி ஏமாற்றியதை அறிந்து ஆத்திரமடையும் டுவைட், திருமண நிச்சயதார்த்தத்தை உடனடியாக ரத்து செய்கிறான். 

ஏமாற்றமடைந்த ஜாஸ்மின் ஓக்லாந்திற்குச் சென்று டானியைச் சந்திக்கிறாள்.

 ஆனால், தன் தந்தையின் அழிவுக்குக் காரணமே ஜாஸ்மின் தான் என்று கூறும் டானி, இனி அவளது முகத்திலேயே விழிக்க விரும்பவில்லை என்று கூறி அவளை விரட்டுகிறான்.

இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவெனில், ஹாலுக்குப் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை ஜாஸ்மின் ஒருகட்டத்தில் கண்டுபிடித்து அவனிடம் சண்டையிட்டுள்ளாள். 

ஹால் அவளை விவாகரத்து செய்துவிட்டு, பத்தொன்பது வயதுடைய ஒரு இளம் பெண்ணுடன் வாழ விரும்புவதாகக் கூறியதால், ஆத்திரமடைந்த ஜாஸ்மின், விவாகரத்து தருவதற்குப் பதிலாக, மத்திய புலனாய்வு அமைப்புக்குத் தொலைபேசி மூலம் ரகசியத் தகவல் கொடுத்து அவனது நிதி மோசடிகளைக் காட்டிக் கொடுத்துக் கைது செய்ய வைத்துள்ளாள். 

இதுவே ஹாலின் தற்கொலைக்கும், குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பது இங்கே வெளிச்சத்திற்கு வருகிறது.

முற்றிலும் உடைந்துபோன ஜாஸ்மின் மீண்டும் தன் சகோதரியின் வீட்டிற்கு வருகிறாள். 

அங்கு ஜிஞ்சர் மீண்டும் சிலியுடன் இணைந்து வாழத் தொடங்கியிருப்பதையும், அவன் வீட்டிற்குள் குடியேறுவதையும் பார்க்கிறாள். 

சிலியும் ஜாஸ்மினும் ஒருவரையொருவர் அவதூறுகளை வாரி இறைத்துக் கொள்ளும் சண்டையில், ஜிஞ்சர் சிலியின் பக்கமே நியாயமிருப்பதாகக் கூறுகிறாள். 

இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின், தான் டுவைட்டைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அன்றே வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

 வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் உள்ள ஒரு பூங்கா பெஞ்சில் அமர்ந்து, தலைமுடி கலைந்த நிலையில், தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி, நிராதரவாகி முற்றிலும் மனநிலை பாதிக்கப்பட்டவள் போலத் தனக்குத்தானே பிதற்றத் தொடங்குகையில் படம் நிறைகிறது.

இத்திரைப்படம் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான  எதார்த்தமான செய்திகளைச் சொல்கிறது.

ஒரு மனிதன் தன்னிடம் உள்ள செல்வத்தையும், போலி கௌரவத்தையும் மட்டுமே தன் அடையாளமாக நினைக்கும்போது, அவை பறிபோகும் தருணத்தில் அவனது ஒட்டுமொத்த ஆளுமையும் சிதைந்துவிடும் என்பதை இப்படம் உணர்த்துகிறது. 

தவறு என்று தெரிந்தே தன் கணவனின் சட்டவிரோதச் செயல்களையும், துரோகங்களையும் ஆடம்பர வாழ்க்கைக்காகக் கண்டும் காணாமல் வாழும் ஜாஸ்மினின் நிலை, சுய ஏமாற்று  எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது.

கடந்த காலத்தின் பகட்டிலேயே வாழ்ந்து, நிகழ்காலத்தின் எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எவரும் நிம்மதியாக வாழ முடியாது என்பதே இதன் முக்கியச் செய்தியாகும்.

 வர்க்கப் பெருமிதமும், சக மனிதர்களைத் தாழ்வாக மதிப்பிடும் குணம் கொண்ட ஒருத்தி, இறுதியில் தன்னிடம் எஞ்சியிருந்த உண்மையான உறவுகளையும் இழந்து, தனிமையிலும் மனச்சிதைவிலும் மட்டுமே தஞ்சமடைய முடியும் என்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்கிறது.

A Streetcar Named Desire   அமெரிக்க நாடக ஆசிரியர் டென்னசி வில்லியம்ஸால் எழுதப்பட்டு, 1947 இல் மேடையேற்றப்பட்டு, பின்னர் 1951 இல் புகழ்பெற்ற திரைப்படமாக உருவெடுத்த ஒரு வழிபாட்டு உன்னத  படைப்பு.

இக்கதை கடந்த கால உயர் வர்க்கப் பெருமையையும் சொத்துக்களையும் இழந்து, கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான பிளான்ச் டுபோவா (Blanche DuBois) என்ற பெண்ணைச் சுற்றி நகர்கிறது. 

அவள் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசிக்கும் தன் தங்கை ஸ்டெல்லா மற்றும் அவளது முரட்டுத்தனமான, உழைக்கும் வர்க்கக் கணவனான ஸ்டான்லி கோவால்ஸ்கி ஆகியோரின் எளிய இல்லத்தில் தஞ்சம் புகுகிறாள். 

பிளான்ச்சின் மாய உலகப் பேச்சுகளும், அவளது போலி கௌரவமும் எதார்த்தவாதியான ஸ்டான்லிக்கு எரிச்சலை ஊட்டுகின்றன. 

அவளது கடந்த கால ரகசியங்களை அவன் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி, அவளை வன்முறைக்கு உள்ளாக்கும் போது, பிளான்ச் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறாள்.

வீழ்ந்துவிட்ட பழைய தென்னமெரிக்க உயர் வர்க்கக் கலாச்சாரத்திற்கும், வளர்ந்து வரும் நவீன தொழில்மய உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான ஆழமான மோதலை இப்படைப்பு மிக ஆக்ரோஷமாகப் பேசுகிறது.

 எலியா கசான் இயக்கத்தில் விவியன் லீ (பிளான்ச் ஆக) மற்றும் மார்லன் பிராண்டோ (ஸ்டான்லி ஆக) நடித்த 1951 ஆம் ஆண்டுத் திரைப்படம், ஹாலிவுட் வரலாற்றில் மிகச் சிறந்த நடிப்புக்கான புதிய இலக்கணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு மைல்கல் படைப்பாக இன்றும் போற்றப்படுகிறது.

இப்படைப்பை பற்றி முன்பு எழுதியதை இங்கே படிக்கலாம்.
 https://www.facebook.com/share/p/18zEz9kuFi/

#கீதப்ப்ரியன்ஆஸ்கர் 
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (123) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)