எழும்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழும்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஃபவுண்டன் ப்ளாஸா | சென்னை | எழும்பூர் | பேந்தியன் சாலை

ஃபவுண்டன் ப்ளாஸா,பாந்தியன் ரோடு ,எழும்பூர், இது எண்பது தொண்ணூறுகளில்  மிகவும் புகழ் பெற்ற வணிக வளாகம்,Alsa mall, prince plaza விற்கு முன்னோடி, இந்த டவரின் முகப்பில் ramp ஒன்று ஏறும்,

 அது நேராக அருகில் உள்ள வணிக வளாகக் கடைகளின் மேலுள்ள கார் பார்க்கிங்கிற்கு செல்லும், 
அங்கிருந்து கீழே இறங்க கிழக்கும் மேற்கும் இரண்டு head room இருந்தன, அங்கிருந்து படிகள் இறங்கினால் கீழே உள்ள boutique கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள் மேல்தட்டு குடும்பத் தலைவிகள், வளர்ப்பு நாய்களையும் கூட்டி வருவார்கள்.

மேக்கப் பார்லர்கள், ஜூஸ்கடைகள், உள்ளாடைக் கடைகள், சுடிதார், நெயில்பாலீஷ், மேக்கப் பொருட்கள், என எல்லா sophisticated சமாசாரம் முதல் லோக்கல் சமாச்சாரம் வரை எல்லாக் கடைகளும் இருந்தன, 

கடைகளின் நுழைவு வாயிலில் fountain இருந்ததால் இது fountain plaza,  அங்கே அப்போது வராத வெளிநாட்டுக் கார்களே கிடையாது, இந்த ramp இடையில் first floor ல் ஆட்களை இறக்கிவிட drop off கூட இருந்தது, இங்கே சூரசம்ஹாரம் chasing ஒன்று எடுத்திருப்பார்கள்.

இங்கே இந்த tower ல் sharing office concept ல் நிறைய அலுவலங்கள் இருந்தன, அன்று நகரின் மையத்தில் வாடகை மிகவும் அதிகம் வரும் , எல்லாமே 10'x 25 ' வரும் சிறிய அலுவலகங்கள் ,இடையில் அலுவலக கதவு, தண்ணீர் கேன் வைக்க ,காபி, டீ,ஊற்றித் தர சிறிய vestibule இருந்தது ,  

இதன் வாடகையே அன்று ஐயாயிரம் வரும், எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகம் ஆறாவது மாடியில் இருந்தது, முதல் முறையாக அத்தனை உயரத்தில் வேலை செய்கிறேன் என்று thrill இருந்தது ,தொண்ணூறுகளின் post license raj யுகம் அது,freshers ன் ஆரம்ப சம்பளம் எல்லாம் ஆயிரம் ரூபாய் அளவில் தான் இருக்கும்.

உணவு இடைவேளையில் எதிரே இருக்கும் மியூசியத்தின் வாயிலில் சென்று படிகளில் அமர்வேன்,அல்லது அங்கே நடக்கும் ஏதாவது படப்படிப்பில் லயிப்பேன், அல்லது அலுவலக சன்னலில் மேலே இருந்து ramp வழியாக பணக்கார சீமாட்டிகள் ஸ்வயம் ஓட்டி வரும் கார்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன், 

அப்போது இவையெல்லாமே அதிசயம், பாந்தியன் சாலையில் 1998ல் மேம்பாலம்  கட்டத் துவங்கினர், மேம்பாலம் கட்டி அதில் பயணித்ததே இல்லை ,இன்று cmda வரை செல்கையில் இந்த பழைய பொக்கிஷத்தை படமெடுத்து பாலத்தில் ஏறி திரும்பி வந்தேன்.

#ஃபவுண்டன்_ப்ளாஸா,#fountain_plaza

எழும்பூர் அருங்காட்சியகத்தின் உள்ளே அமைந்திருக்கும் விக்டோரியா நினைவகம்

எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் எனக்கு சென்னையில் மிகவும் பிடித்தமான நூற்றாண்டு விழா கண்ட கட்டிடமாகும், 2021 ஆம் ஆண்டில் பழமை மாறாமல் புதுப்பித்து  (conservation ) மீட்டெடுத்துள்ளனர், அத்தனை அழகாக இருக்கிறது, இந்த கட்டிடத்தை காண இருவிழிகள் போதாது என்றால் மிகையில்லை.

விக்டோரியா மெமோரியல் ஹால்  பாந்தியன் சாலையில் மெட்ராஸ் மியூசியம் (செத்த காலேஜ் ) வளாகத்திற்குள் உள்ளது,1998 ஆம் ஆண்டு இதன் முகப்பில் பேந்தியன் சாலை மீது மேம்பாலம் கட்டப்பட்டது , அதனால் இதன் புறத்தோற்றம் முழுக்க அடைபட்டுப் போய் குடத்தினுள் இட்ட விளக்கு போல அமைந்துள்ளது, 1998 ஆம் ஆண்டு இங்கே எதிரே உள்ள ஃபவுண்டன் ப்ளாஸா அலுவலக வளாகத்தில் என் ஆர்கிடெக்ட் அலுவலகம் இருந்தது, அங்கு மதிய உணவு இடைவேளையில் இங்கே வந்து இதன் அழகைப்பருகியபடி நிழலில் அமர்ந்திருப்பது என் வாடிக்கை.

1980 -1990 களில் இக்கட்டிடம் அழுக்கேறி பொலிவிழந்திருந்தது, மோசமான பராமரிப்பு , கூரையில் அரசமரம் கூட வளர்ந்து கட்டிடத்தை சேதப்படுத்தியிருந்தது, சுமார் இருபது ஆண்டுகளாக இந்த  பழமை மாறாமல் புதுப்பிக்கும் conservation பணிகள் நடந்து இன்று புத்தம் புதியதாக உள்ளது,இருந்தும் ஒரு இடத்தில் கூரையில்  செடி வளர்ந்ததை பார்க்க முடிந்தது, இதற்கு மாதா மாதம் பராமரிப்பு தேவை, பொறியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு கூட தன்னார்வ பசுமை நடை ஒருங்கிணைத்து இங்கு உழவாரப்பணிகளை முன்னெடுக்கலாம், மாணவர்களுக்கும் புராதான கட்டிடங்களை பாதுகாப்பது பற்றிய சிந்தனை திறப்பிற்கு இது வழிவகுக்கும்.
அத்தனை அற்புதமான வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ள கட்டிடம் இது.

1887 ஆம் ஆண்டில் இங்கிலாந்து 
மகாராணி விக்டோரியாவின் 50 வது ஆண்டு  ஆட்சியின் நினைவாக, சென்னை அருங்காட்சிய வளாகத்தில் விக்டோரியா நினைவு மண்டபம் மற்றும் விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (VTI) அமைக்க திட்டமிடப்பட்டது.  

விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (VTI) என்பது உள்ளூர் கலை மற்றும் கைவினைகளை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் விக்டோரியா பொது மன்றம் (Victoria Public Hall) அமைந்துள்ளது. இந்தக் கட்டுரை விக்டோரியா எழும்பூர் நினைவு மண்டபத்தைப் பற்றியது. இரண்டும் வேறுபட்டவை. பொதுவாக, இரண்டிற்கும் இடையே மக்கள் எளிதில் குழப்பிக் கொள்வர், Google Map இடுகையில் Victoria Memorial Hall , Pantheon road என சரியாக தேர்வு செய்யவும்.

விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி   நிறுவனத்திற்கு (VTI) பல ஆண்டுகளாக நிரந்தர கண்காட்சி கூடம் கிடையாது.  1906 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி, வேல்ஸ் இளவரசர் ( மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ) அவர்கள் இந்த எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் நாம் இங்கே காணும் விக்டோரியா நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.  

1909 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சென்னை கவர்னர் Sir Arthur Lawley இந்த நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்.  இதனால், VTI க்கு இங்கே நிரந்தரமான பெருமைமிகு முகவரி கிடைத்தது.

இக்கட்டிடத்தை  ஐரிஷ் கட்டிடக் கலைஞரான Henry Irvin அவர்கள் வடிவமைத்தார், புகழ்பெற்ற கட்டுமானராக திகழ்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் நம்பெருமாள் செட்டி இதைக் கட்டினார், நம்பெருமாள் செட்டி அவர்களுக்கு சென்னையில் 99 வீடுகள் இருந்தன,புரவலரான இவர் கணிதமேதை ராமானுஜம் அவர்களின் இறுதிநாட்களில் தன் mc Nichol's road வீடான cryant மற்றும் Gometra வில்  வைத்து தரமிகு சிகிச்சை தந்து கவனித்துக் கொண்டவர்,கட்டுமானர் நம்பெருமாள் செட்டி பற்றி பாடத்தில் இருக்க வேண்டும்,ஆனால் நமக்கு அது முக்கியமில்லை என்பதால் அவரை சடுதியில் மறந்துவிட்டோம், B.Arch கட்டிடக்கலை பாடத்தில் கூட  Indo Sara scenic கட்டிடக்கலைக்கு உழைத்த அவரை  நினைவுகூறுவதில்லை.

இந்த இருவரின்  கூட்டு பங்களிப்பில் சென்னையில் எத்தனையோ கட்டிடங்கள் சிறப்புற அமைந்து இவர்களுக்கு புகழாரம் சூட்டுகின்றன, சட்டக் கல்லூரி, உயர் நீதிமன்றம், எஸ்பிஐ மற்றும் கன்னிமாரா நூலகம் போன்ற பல அற்புதமான கட்டமைப்புகளை நகரத்தில் உருவாக்கியவர்கள்,  இந்த தலைசிறந்த தனித்துவமான படைப்பும்  அவற்றில் ஒன்று.

இந்த கட்டிடக்கலை பாணி முகலாய -  ராஜஸ்தானி பாணிகளின் ஊடும் பாவுமான கலவையாகும், இது ஜெய்ப்பூர் முகல் பாணி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் வெளிப்புறச் சுவர்கள் தடாவிலிருந்து  வெட்டிக் கொண்டு வந்த இளஞ்சிவப்பு மணற்கற்களால் (light red sand stone ) ஆனவை.இந்த எல்லை சுவரை இணைப்பு படங்களில் பாருங்கள் ,அதில் கூட Mashrabia என்ற intricated chiseled jally  கடைசல் வேலைபாடுகள் இளஞ்சிவப்பு மணற்கல் பலகங்களில் வடித்து பொருத்தியதைப் பாருங்கள்.

இதன் பிரம்மாண்டமான வாசல் 1600 களின் முற்பகுதியில் ஃபதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட புலந்த் தர்வாசா அல்லது ""The Door to Victory"" பாணியை ஒத்திருக்கிறது. 

இரண்டாம் உலகப் போரின் போது VTI தனது முகவரியை அண்ணா சாலையில் இன்றைய TVS க்கு நேரெதிரே மாற்றியது.

1951 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் தனது நூற்றாண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது. 

பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மண்டபத்தை தேசிய கண்காட்சியமாக பெருமையுடன் அர்ப்பணித்தார்.  
ஏறக்குறைய கடந்த இருபதாண்டு காலமாக பழுதுபார்த்தல்  மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்தன, 
பொதுமக்களுக்கு பார்வை  மறுக்கப்பட்டது, நான் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தாலும் கட்டிடத்திற்குள் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.  

இந்த விக்டோரியா மெமோரியல் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் coca cola வில் மயக்க மருந்து கலந்து தந்து வைர நெக்லஸ் மற்றும் வைரங்களை திருடும்  காட்சி படமாக்கப்பட்டுள்ளது, திருடா திருடா சந்திரலேகா பாடல் இந்த கட்டிட முகப்பில் இரவுக் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தானின் புலிச்சின்னம் பொறித்த பீரங்கி மற்றும் போர் தளவாடங்கள்


திப்பு சுல்தானின் போர்ப்படை தளவாடங்கள் உலகப் புகழ் பெற்றவை, உலகத் தரமான துல்லியத்தையும் கொண்டிருந்தவை, 

திப்பு சுல்தான் 'மைசூர் புலி' என்று அழைக்கப்பட்டவர்,வீரம் பொருந்திய விலங்கினமான புலியை தன் அரசவை உள் அலங்காரங்களில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பொதித்து வைத்திருந்தார் திப்பு சுல்தான்.

இந்த   பீரங்கிகள் ஸ்ரீங்கப்பட்டத்தில் உள்ள அரசவை ஆயுதப்பட்டறையில் தலைமை கருமார்  அகமது பாலி செய்தது , வெங்கல மணியைப் போன்ற அருமையான தரத்தில் செய்யப்பட்டது,இதற்கு தங்க முலாம் பூசி கம்பீரமாக பராமரித்தும் வந்திருக்கிறார்கள்.

இந்த பீரங்கியில் குறிப்பிடப்பட்ட தேதி Mawludi ஆண்டு 1219 என்பதாகும், இதற்கீடான கிருஸ்து ஆண்டு 1790/91 எனக் கொள்ள வேண்டும், 
எத்தனை அழகும் தொலைநோக்கும் கொண்டு உணர்ந்து செய்த  product design என்று பாருங்கள்.
இதன் சுமை மற்றும் எடை கூட பீரங்கியில் பொறித்து வார்க்கப்பட்டிருப்பது திப்பு சுல்தான் அவர்களின் போர் திட்டமிடலை நமக்கு விவரிக்கிறது,

இதில் உருதுவில் குறித்துள்ள  பட்டண்  என்பது பட்டணமான ஸ்ரீரங்கப்பட்டணத்தை குறிக்கிறது, உற்பத்தி செய்த இடத்தையும் உரைக்கிறது, 
ஹைதர் என்பது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியை குறிக்கிறது.

பீரங்கியின்  Trunnion முனைகள் மற்றும் Gascable பொத்தான் அனைத்தும் சீறும் புலியின் தலைகளாக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ளன, பின்புறம் பீரங்கி குழலை உயர்த்தும் திருகுக்கான மோதிரத்தை பாருங்கள், கடந்த 224 ஆண்டுகளாக எந்த தட்பவெப்பத்தையும் தாங்கி துரு பிடிக்காமல் நிற்கிறது.

மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் மகன்  திப்பு சுல்தான், 1753 ஆம் ஆண்டு பிறந்தார், அவர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகப் போரில் குதிரைப்படைக்கு தலைமை தாங்கினார்.  

டிசம்பர் 1782 ஆம் ஆண்டு  அவர் தனது தந்தைக்குப் பிறகு, ஆங்கிலேயர்களை போர்களில் தோற்கடித்தும் வந்தார் (1 வது மைசூர் போர், 1780-84) 1784 ஆம் ஆண்டில் சமாதான உடன்படிக்கை செய்தார். 1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவர் மீது போர் தொடுத்தனர், ஸ்ரீரங்கப்பட்டினத்தில்  திப்புசுல்தான் போரில் தோல்வியடைந்தார்,
மார்ச் 1799 ஆம் ஆண்டு பிரதேசங்கள் கைமாறின,போருக்கான உடப்படிக்கைக்காக தன் இரு மகன்களை பணயக்கைதிகளாக ஒப்பும் கொடுத்தார், ஸ்ரீரங்கப்பட்டினத்தில்   மீண்டும் போர் துவங்க அவர் அந்த உக்கிரமான போரில்  1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி  கொல்லப்பட்டார்.

திப்பு சுல்தானின் ஆயுதங்கள், அவரது அரண்மனை மரச்சாமான்கள் அனைத்திலும் புலி முகம் சின்னமாக இடம் பெற்று இருந்தது, சிறிய துப்பாக்கியில் கூட புலி முகம் இருந்தது, அவரின் கைத்தடியில் கூட புலி உடம்பு இருந்தது, ஆங்கிலேய போர்படைத் தளபதியை மைசூர் புலி ஒன்று தாக்கி கழுத்தை கடித்து கொன்றதை தத்ரூபமாக scale down செய்து சாவி தரும்  பொம்மையாக இரண்டை வடிவமைத்து வடித்து அதை ஒலிக்க வைத்து கேட்டும் வந்திருக்கிறார் திப்பு சுல்தான்,இரண்டு பொம்மைகள் இருந்தன , தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.
காணொளி கமெண்டில்.

ஸ்ரீரங்கப்பட்டணம் வீழ்ச்சியின் போது மொத்தம் 927 பீரங்கிகள் கைப்பற்றப்பட்டன. 7 ஆண்டுகள் நடந்த நீண்ட போர், வெற்றியும் தோல்வியும் எதிராளிகள் இருவருக்கும்  மாறி மாறி கிடைத்த போர், இந்த 927 பீரங்கிகளில் 400 வெண்கல பீரங்கிகளாகும், மீதமிருந்தவை எஃகு பீரங்கிகளாகும், இந்த பீரங்கிகளில்  பாதிக்கும் மேற்பட்டவை திப்புசுல்தானின் சொந்த ஆயுத பட்டறைகளில் உருவானவை என்றால் அவரின் தொழிற்நுட்பம் எத்தனை தொலைநோக்காக இருந்திருக்கும் பாருங்கள், 

பெங்களூரில் இருத்தும்  ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்தும் கைப்பற்றப்பட்ட இந்த பீரங்கிகளை பிரிட்டீஷார் ஆண்ட பல நாடுகளில் அமைக்கப்பட அரசு அருங்காட்சியகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு கண்காட்சிக்கு வைத்தனர்,
உலக அரங்கில் கலைப்பொருள் திருடர்கள் இந்த பீரங்கிகளை கடத்தித் சென்று லண்டன் மற்றும் பாரீஸ் பழம்பொருள் சேகரிப்பாளர்கள் மற்றும் ஆராதகர்களுக்கு ஏல சம்மேளனத்தில் வைத்து இன்றும் கூட ஏலம் விடுகின்றனர், இந்த படத்தில் காணும் பீரங்கி கடைசியாக 6 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பீரங்கியில் ஒரு தனித்துவமான ஹைதர் அணிந்த தாயத்தின் வரிகள்  (amulet ) பொறிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்,  இந்த தனித்தன்மை பீரங்கி அரசவை ஆயுதப் பட்டறையில் உருவானதைக்  குறிக்கிறது.
 
எஞ்சிய பீரங்கிகள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ராயல் ஃபவுண்டரியில்,  போவிஸ் கோட்டையில் உள்ள கிளைவ் சேகரிப்பு கண்காட்சியகத்தில் , நமது எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில்  பாதுகாக்கப்படுகிறது.  இவை அறுபத்தாறு பவுண்டுகள் மற்றும் இரண்டு grains  என மொழிபெயர்க்கப்பட்ட எடையுடன் 2¾-3 பவுண்டர் அளவுகள் உள்ள  பீரங்கி குண்டுகளை கோருபவை, இந்த அளவுகளும் கூட துல்லியமாக பீரங்கி மீது பொறிக்கப்பட்டுள்ளது.

1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஓவியர்  Robert Kerr Porter வரைந்த  The Storming of Srirangapatnam' ஓவியங்களில் இந்த வீரன் திப்புவின் மரணம் எப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது எனப் பாருங்கள், அதில் திப்பு சுல்தானின் மரணம் ஒரு சுத்த வீரனின் மரணமாக சித்தரிக்கப்பட்டதை காணலாம், மிகவும் அரிய உயரிய பண்பு அது,எதிரியையும்  உயர்த்தும் பண்பு, கர்ணன் திரைப்படத்தில் தேர் சக்கரத்தில் சாய்ந்து உயிரை விடுவாரே நடிகர் திலகம், அது போல ,தரையில் திட்டில் சாய்ந்து அமர்ந்து, கால்களை நீட்டி, தலையை வானம் பார்க்க உயர்த்தி, நெஞ்சத்தை எத்தனை முடியுமோ அத்தனை நிமிர்த்தி உயிரை விட்டிருப்பதை அந்த ஓவியர் அத்தனை அற்புதமாக வரைந்து ஒரு வீரனுக்கு அஞ்சலி செலுத்தியதைக் காணலாம்.

Tanks of Madras Egmore Museum | சென்னை எழும்பூர் அருங்காட்சியக பீரங்கிகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)