Tall Tales |Apró mesék | ஹங்கேரி |Attila Szász


சினிமா ஆர்வலர்கள் யாரும் தவற விடக்கூடாத Noir படைப்பு, ஹங்கேரி நாட்டுத் திரைப்படம்,படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு, இதே போல கதையம்சத்தில் எத்தனையோ திரைப்படங்கள் கண்டிருக்கிறேன், உதாரணமாக  Sleeping with the Enemy , agnisakshi, அவள் வருவாளா? போன்றவை, ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்து war criminals தண்டிக்கப்படும் காலகட்டத்தில் நடக்கும் இக்கதை  தனித்துவமான noir படைப்பாக மிளிர்கிறது,

காதலா காதலா திரைப்படத்தில் கமல்ஹாசன் பத்திரிக்கையில் வெளியான obituary விளம்பரத்தை பார்த்துவிட்டு, இறந்து போனவர்  தன்னிடம் professional portrait வரைய சொல்லி ஆர்டர் தந்ததாக பொய் சொல்வார்,  வரைந்த ஓவியத்தை தந்து காசு வாங்கி பிழைப்பார், அதே போல இரண்டாம் உலகப் போரின் முடிவில் லட்சக்கணக்கான காணாமல் போனோரின் உறவினர்கள் தினசரிகளில் உற்றார்  உறவுகளை காணவில்லை என பெட்டிச் செய்தி விளம்பரம் தந்தனர், அந்த விளம்பரங்களை குறிவைத்து எனக்கு உங்கள் மகனைத் தெரியும், எனக்கு உங்கள் கணவனைத் தெரியும்,எனக்கு உங்கள் சகோதரனைத் தெரியும்,என கிளம்பிச் சென்று அவர்கள் பற்றி இமாலயப் பொய்களைக் கதையாகச் சொல்லி வீட்டாரை நெகிழவைத்து உணவு, உடை ,பணம் என அவர்கள் மகிழ்ந்து தருவதை பெற்று வந்து உய்யும் நாடோடி நாயகன் Balász,

 இவனிடம் எந்த விதமான அடையாள அட்டை,கடவுச் சீட்டும் இல்லை, இவனுக்கு முன்கதை சொல்வதில்லை, அவன் சொல்லும் பொய்கள் மட்டுமே காட்சியாக விரிகின்றன, இப்படி அசகாய சூர பொய்யன், 

Balász ரஷ்யப்படையிடமிருந்து தப்ப வேண்டி ரயிலை இடை நிறுத்தியவன், ஹங்கேரியில் danube நதி ஓடும் அழகிய அடர்ந்த காட்டிற்குள் வருகிறான் ,அங்கு அழகிய முரட்டு துப்பாக்கி வேட்டைக்காரி ஜூடித் மற்றும் அவள் மகன் விர்ஜில் இருவரைப் பார்க்கிறான், ஜூடித் கணவன் ஒரு போர் குற்றவாளி, கொடுங்கோலன் , அவன் போரில் இறந்திருக்ககூடும் என ஜூடித்தும் ஊராரும் நம்புகின்றனர்,

காட்டிற்குள் ஜூடித் , விர்ஜில்  துப்பாக்கிக்கு பலியாகாமல் மயிரிழையில் இரக்கம் சம்பாதித்து, அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுவிடுகிறான் Balász ,அவள் கணவன் berces உடன் ராணுவத்தில்  பணியாற்றியதாகவும் அவன் அசகாய சூரன் என்றும் வழமையாக கதைக்கிறான்,மகன் விர்ஜில் அவற்றை நம்புகிறான் , கிரகிக்கிறான் ,ஆனால் ஜூடித் அவற்றை நம்புவதுமில்லை, ரசிப்பதுமில்லை .

 இருவாரங்கள் அவர்கள் வீட்டில் சுகமாக தங்குகிறான்,காட்டுக்குள. பெரிய கடா மானை கொம்பு வாத்தியம் ஊதி வரவழைத்து வேட்டையாடி துண்டம் போட்டு சந்தையில் சென்று விற்க உதவுகிறான், 

ஹங்கேரிய அதிகாரிகள் இவன் சொல்லும் பொய்யையும் நம்பி
 இவனுக்கு தற்காலிக அடையாள அட்டை தருகின்றனர் ,

வீட்டில் ஜூடித்திற்கும் இவனுக்கும் மிக அழகாக காதல் அரும்புகிறது,எண்ணும் போதெல்லாம் கணவன் மனைவி போல இருவரும் முயங்குகின்றனர், இவனையே கணவனாக வரிக்கலாம் என எண்ணுகையில் அவ்வூரின் வேட்டைக்காரன்,பெரிய war criminal , ஜூடித்தின் கணவன் berces திரும்ப வந்து விடுகிறான், அதுவும் Balász ஐ தெரியும் என அமோதிக்கிறான், அவன் சொன்ன கதைக்கு கச்சிதமாக continuity சொல்கிறான்,தன் வீட்டாருக்கு உதவிதற்கு ஆரத்தழுவி நன்றி கூறுகிறான்.

ஜூடித்திற்கும் Balászற்கும் அதிர்ச்சியில் மின்சாரக் கம்பியை மிதித்தது போல ஆகிறது, 

இனி என்ன ஆகும், படம் கண்டிப்பாக பாருங்கள்.

திரைக்கதையின்படி, சில காட்சிகள் சோவியத் போர் முனையிலும் (szovjet hadszíntéren), சில காட்சிகள் குண்டு வீசப்பட்ட புடாபெஸ்டிலும் (szétbombázott Budapest), மீதமுள்ளவை ஜெமென்க் (Gemenc) பகுதிக்கு அருகில் உள்ள பாரன்ஃபாக் (Bárányfok) மற்றும் அதன் வெளிப்புறப் பகுதிகளிலும் (külterületein) நடக்கின்றன.

போர்முனைக் காட்சிகள் டாட்ரா மலைத்தொடரில் (Tátrában) படமாக்கப்பட்டன. பாரன்ஃபாக் காட்சிகளோ, மற்ற இடங்களுடன் சேர்த்து, பேட்டி (Páty) கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் (külterületén) மற்றும் ஃபோட் ஏரிகளிலும் (fóti tavaknál) படமாக்கப்பட்டுள்ளன.

#சென்னை_திரைப்பட_விழா
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (204) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) கலை (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) ஓவியம் (21) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) இலக்கியம் (14) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)