ட்ரீம்ஸ் Dreams 2025 நார்வே


ஒருவரின் மனதில் தோன்றும் காதல் உணர்வுக்கும், அந்தக் காதலைப் பற்றிய கற்பனைக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி இருக்க முடியும்?

அதிலும், ஒருவருடைய தனிப்பட்ட உணர்வுகள் எழுத்தாக வெளிப்பட்டு, மற்றவர்களால் வாசிக்கப்படும்போது அதன் பொருள் எவ்வாறு மாறுகிறது?

இத்தகைய நுட்பமான உளவியல் மற்றும் மனித உறவுகள் சார்ந்த கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நார்வே மொழித் திரைப்படம் டாக் யோஹான் ஹாகெரூட்டின் ட்ரீம்ஸ் .

காதல், பாலியல் உணர்வுகள், தனிமனித ஆசைகள், சமூக ஒழுக்கங்கள் ஆகியவற்றை வெவ்வேறு கோணங்களில் ஆராயும் இயக்குநரின் முத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டாவது திரைப்படம் இது.

ஒரே கருப்பொருளை மூன்று வெவ்வேறு பார்வைகளில் அணுக வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் இந்தப் படைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது.

கீஸ்லாவ்ஸ்கியின் த்ரீ கலர்ஸ் ட்ரலஜி முத்தொகுப்பால் ஈர்க்கப்பட்டு இந்தத் திரைப்படத் திட்டத்தை உருவாக்கியதாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று படங்களும் ஒரே உரையாடலின் வெவ்வேறு பகுதிகளாக உணரப்பட வேண்டும் என்பதே அவரது கலைநோக்கு.

இந்தத் திரைப்படத்தின் முக்கியமான சிறப்பு, காதல் உணர்வுகளை வெறுமனே ஒரு காதல் அனுபவமாகச் சுருக்கிவிடாமல், அவற்றின் உளவியல் தன்மையையும் தனிமனித வெளிப்பாட்டையும் ஆராய்வதாகும்.

ஒருவருக்குள் உருவாகும் ஈர்ப்பு, ஆசை, ஏக்கம் போன்ற உணர்வுகள் அவருடைய மனதில் எத்தகைய உலகத்தை உருவாக்குகின்றன என்பதையும், அந்த உலகத்தை வெளிப்படுத்தும்போது மற்றவர்கள் அதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் திரைப்படம் அணுகுகிறது.

உணர்வுகளின் உண்மைத்தன்மைக்கும் அவற்றை வெளிப்படுத்தும் விதத்திற்கும் இடையிலான வேறுபாடு இங்கு முக்கியமான கருப்பொருளாக அமைகிறது.

எழுத்து என்பது ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் தனிப்பட்ட கருவி மட்டுமல்ல; அது மற்றவர்களின் பார்வைக்கும் மதிப்பீட்டுக்கும் உட்படும் ஒரு வெளிப்பாடாகவும் மாறுகிறது.

குறிப்பாக, சுயசரிதைத் தன்மையுள்ள எழுத்தில் உண்மை அனுபவங்களும் கற்பனைகளும் கலக்கும்போது, வாசிப்பவரின் புரிதல் எவ்வாறு மாறுகிறது என்ற கேள்வியைத் திரைப்படம் முன்வைக்கிறது.

ஒரே எழுத்தைப் படிக்கும் மனிதர்கள் அதிலிருந்து வெவ்வேறு பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் கலைப்படைப்பின் மதிப்பீடு, தனிப்பட்ட அனுபவம், உண்மையைப் புரிந்துகொள்ளும் முயற்சி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்படுகின்றன.

மூன்று தலைமுறைப் பெண்களின் அனுபவங்கள் வழியாக மனித ஆசைகளையும் காதல் பற்றிய புரிதல்களையும் அணுகுவது படத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

இளமைக்குரிய உணர்ச்சிகளும், முதிர்ந்த வயதில் உருவாகும் வாழ்க்கைப் பார்வையும் ஒரே மாதிரியானவை அல்ல. கடந்தகால உறவுகள், நிறைவேறாத விருப்பங்கள், தனிப்பட்ட ஏக்கங்கள் ஆகியவை மனிதர்களின் நிகழ்காலப் புரிதலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு இந்தத் தலைமுறை வேறுபாடு முக்கியமான பின்னணியை வழங்குகிறது.

இதனால் காதல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கே உரிய அனுபவம் என்ற குறுகிய பார்வையைத் திரைப்படம் தவிர்க்கிறது.

கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் உறவுகளையும் இயல்பான உரையாடல்கள் வழியாக வெளிப்படுத்தும் அணுகுமுறையே இயக்குநரின் கதை சொல்லும் முறையின் அடையாளமாகத் தெரிகிறது.

பெரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக மிகையான நாடகத்தன்மையைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மனிதர்களின் எண்ணங்கள், கருத்து வேறுபாடுகள், தனிப்பட்ட புரிதல்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

இதனால் பார்வையாளர்கள் கதாபாத்திரங்களை நல்லவர், கெட்டவர் என்ற எளிய பிரிவுகளுக்குள் அடைக்காமல், அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

ஜோஹான்னேவாக நடித்துள்ள எல்லா ஓவர்பை, ஜோஹான்னாவாக நடித்துள்ள செலோம் எம்னெட்டு, கிறிஸ்டினாக நடித்துள்ள ஆனே டால் டார்ப், கரினாக நடித்துள்ள ஆனே மாரிட் யாக்கோப்சன் ஆகியோரின் நடிப்பு படத்தின் உணர்ச்சிகரமான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

குறிப்பாக, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் மனநிலை, அனுபவம், உறவுகள் குறித்த புரிதல் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய சவாலை இந்தக் கதாபாத்திரங்கள் கொண்டுள்ளன.

அவர்களுடைய நடிப்பின் மூலம் தனிப்பட்ட உணர்வுகளுக்கும் குடும்ப உறவுகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் வெளிப்படுகின்றன.

செசிலி செமெக்கின் ஒளிப்பதிவும், ஜென்ஸ் கிறிஸ்டியன் ஃபோட்ஸ்டாட்டின் படத்தொகுப்பும் திரைப்படத்தின் காட்சியமைப்பை உருவாக்குகின்றன.

குறிப்பாக, 110 நிமிடத் திரைப்படத்தில் உணர்ச்சிகளையும் கதாபாத்திரங்களின் உறவுகளையும் ஒருங்கிணைக்கும் படத்தொகுப்பு முக்கியமானது.

அன்னா பெர்க்கின் இசை திரைப்படத்தின் உணர்ச்சிச் சூழலுக்கு ஆதரவளிக்கிறது. இசை, காட்சிகள், நடிப்பு ஆகியவை இணைந்து படத்தின் மென்மையான கதை சொல்லும் தன்மையை உருவாக்குகின்றன.

இந்தப் படைப்பின் சமூகப் பார்வையில் முக்கியமானது, மனித உறவுகளைச் சுற்றியுள்ள ஒழுக்க விதிகளையும் அதிகார வேறுபாடுகளையும் ஒரே கோணத்தில் அணுகாமல் இருப்பதாகும்.

குறிப்பாக, ஆசிரியர்–மாணவர் உறவில் உள்ள அதிகாரச் சமநிலையின்மை, வயது வேறுபாடு, தனிப்பட்ட விருப்பங்கள், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய சிக்கல்களாக அமைகின்றன.

தனிமனித உணர்வுகளை மதிப்பிடும்போது அவற்றின் பின்னணியையும் உறவுகளின் தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தைத் இத்திரைப்படம் உணர்த்துகிறது.

2024 அக்டோபர் 4 அன்று நார்வே திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், 2025 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் முக்கியப் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது.
அங்கு உயரிய கோல்டன் பியர் விருதையும், சர்வதேசத் திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் ஃபிப்ரெஸ்கி விருதையும் பெற்றது.

ஜெர்மன் கலைத்திரைப்பட அரங்குகளின் சங்க விருதையும் வென்றது. ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பீட்டில் 43 விமர்சனங்களில் 91 சதவீதம் நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வரவேற்பு, திரைப்படத்தின் கருப்பொருள் அணுகுமுறையும் கலைத்தன்மையும் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பதை வெளிப்படுத்துகிறது.

இத்திரைப்படத்தின் தனித்துவம், காதலை ஒரு எளிய உணர்ச்சியாகவோ, மனித ஆசைகளை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாகவோ சுருக்காமல், அவற்றின் பின்னால் இருக்கும் மனநிலைகளையும் அனுபவங்களையும் ஆராய்வதில் இருக்கிறது.

உண்மை, கற்பனை, நினைவு, எழுத்து, காதல் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி சிந்திக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இது குறிப்பிடத்தக்க அனுபவமாக அமையும். மனிதர்களின் உணர்வுகளைத் தீர்ப்பளிக்காமல் புரிந்துகொள்ள முயலும் நிதானமான திரைப்படங்களை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு இது.

================================

படத்தின் கதை:-

ஒஸ்லோ நகரில் தனது தாயார் கிறிஸ்டின் மற்றும் பாட்டி கரின் ஆகியோருடன் வசித்து வருகிறாள் பதினேழு வயதான ஜோஹான்னே.

அவள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறாள். அவளுடைய தாயார் கிறிஸ்டின் கணவருடன் இல்லாமல் தனியாக மகளை வளர்த்து வருகிறார்.

ஜோஹான்னே தனது பாட்டி கரினுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறாள். கரின் ஏற்கெனவே புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள ஓர் எழுத்தாளர்.

ஒருநாள் மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையிலான காதல் உறவைப் பற்றிய ஒரு நாவலை ஜோஹான்னே படிக்கிறாள்.

அந்த நாவல் அவளுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக, தனது பிரெஞ்சு மொழி ஆசிரியையான ஜோஹான்னா மீது அவளுக்குக் காதல் ஈர்ப்பு உருவாகிறது.

அந்த ஈர்ப்பு நாளடைவில் தீவிரமடைகிறது. ஆசிரியையிடம் தனக்கிருக்கும் உணர்வுகளைப் பற்றி அவள் தொடர்ந்து சிந்திக்கத் தொடங்குகிறாள்.

பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஜோஹான்னாவுக்கும் ஜோஹான்னேவுக்கும் இடையிலான பழக்கம், பள்ளி வகுப்பறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

இருவரும் பள்ளிக்கு வெளியேயும் சந்தித்துப் பழகத் தொடங்குகின்றனர். குறிப்பாக, ஜோஹான்னா தனது வீட்டிற்கு ஜோஹான்னேவை அழைத்து, அவளுக்குக் கம்பளி நூலைப் பயன்படுத்தி பின்னல் வேலை செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறாள்.

இவ்வாறு இருவரும் தனியாக நேரம் செலவிடும் சந்தர்ப்பங்கள் ஜோஹான்னேவின் காதல் உணர்வை மேலும் அதிகரிக்கின்றன.

ஜோஹான்னே தனது ஆசிரியையின் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பில் மிகவும் ஆழமாக மூழ்கிவிடுகிறாள். ஜோஹான்னா தன்னுடைய உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, தன்மீது காதல் கொண்டிருப்பதாக அவள் அடிக்கடி கற்பனை செய்கிறாள்.

அந்தக் கற்பனையில் இருவருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகவும், தன்னுடைய காதலுக்கு ஜோஹான்னா பதிலளிப்பதாகவும் எண்ணிக்கொள்கிறாள்.

அவளுடைய மனதில் உருவாகும் காதல் உணர்வுகள், ஆசைகள், கற்பனைகள் ஆகியவை அவளுக்குள் பெரும் உணர்ச்சிப் போராட்டத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த உணர்ச்சிகளைத் தனக்குள் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாத ஜோஹான்னே, அவற்றை எழுத்தின் வழியாக வெளிப்படுத்த முடிவு செய்கிறாள்.

தனது அனுபவங்களையும் மனதில் தோன்றும் எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஏறக்குறைய இருநூறு பக்கங்கள் கொண்ட சுயசரிதைத் தன்மையுள்ள கையெழுத்துப் பிரதியை எழுதுகிறாள்.

அதில் ஜோஹான்னா மீது தனக்கிருக்கும் ஏக்கம், காதல் உணர்வுகள், உடல் சார்ந்த ஆசைகள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறாள். மேலும், ஜோஹான்னாவுடன் நெருக்கமான உடல் உறவு ஏற்பட்டதாகவும் சில சம்பவங்களை எழுதுகிறாள்.

ஆனால் அந்தக் கையெழுத்துப் பிரதியில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடைபெற்றவையா அல்லது ஜோஹான்னேவின் கற்பனையில் உருவானவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவளுடைய உண்மையான உணர்வுகளும் கற்பனைகளும் ஒன்றோடொன்று கலந்த நிலையில் அந்தப் படைப்பு உருவாகியிருக்கிறது.

தனது எழுத்தைப் பற்றிய கருத்தை அறிந்துகொள்ள விரும்பிய ஜோஹான்னே, அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தனது எழுத்தாளர் பாட்டி கரினிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

கரின் அதைப் படித்துப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியப்படுகிறாள். அந்த எழுத்தில் இலக்கியத் தரமும், ஒரு சிறந்த படைப்பாக உருவாகக்கூடிய ஆற்றலும் இருப்பதாக அவள் கருதுகிறாள்.

தனது பேத்தியின் எழுத்துத் திறமையைப் பாராட்டும் கரின், அந்தப் பிரதியை வெளியிடக்கூடிய ஒரு படைப்பாகவும் பார்க்கிறாள்.

ஆனால் ஜோஹான்னே தனது எழுத்தைத் தாயார் கிறிஸ்டினிடம் காட்ட விரும்பவில்லை. இருப்பினும், கரின் தனது பேத்தியின் விருப்பத்திற்கு மாறாக அந்தக் கையெழுத்துப் பிரதியை கிறிஸ்டினிடம் கொடுத்து வாசிக்கச் செய்கிறாள்.

அதைப் படித்த கிறிஸ்டின் அதிர்ச்சியடைகிறாள். குறிப்பாக, தனது பதினேழு வயது மகள் எழுதியுள்ள உடல் சார்ந்த நெருக்கமான விவரங்களும், ஆசிரியையுடன் உறவு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களும் அவளைக் கடுமையாகக் கவலைப்படுத்துகின்றன.

ஜோஹான்னேவின் பிரெஞ்சு ஆசிரியையான ஜோஹான்னா, தனது ஆசிரியர் பொறுப்பையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி மாணவியுடன் முறையற்ற உறவில் ஈடுபட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் கிறிஸ்டினுக்கு ஏற்படுகிறது.

ஏனெனில், ஜோஹான்னே எழுதியுள்ள விவரங்கள் வெறும் காதல் கற்பனைகளாக இல்லாமல், உண்மையில் நடந்த நெருக்கமான சம்பவங்களைப் போலவும் தோன்றுகின்றன. தனது மகள் ஓர் ஆசிரியையால் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சம் கிறிஸ்டினை ஆட்கொள்கிறது.

இதனால் தாய், பாட்டி, பேத்தி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடும் பதற்றமும் உருவாகின்றன. கரின் அந்தக் கையெழுத்துப் பிரதியை ஓர் இலக்கியப் படைப்பாகப் பார்க்கிறாள்.

அதன் எழுத்துத் தரத்தையும், அதில் வெளிப்படும் உணர்ச்சிகளையும் முக்கியமாகக் கருதுகிறாள். ஆனால் கிறிஸ்டினுக்கு இலக்கியத் தரத்தைவிட அதில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களின் உண்மைத்தன்மையே முக்கியமாக இருக்கிறது.

தனது மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள்.

இதற்கிடையில், ஜோஹான்னே எழுதிய அந்தப் பிரதியை வாசித்த கரினும் கிறிஸ்டினும் தங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றனர்.

குறிப்பாக, தங்களுடைய கடந்தகாலக் காதல் உறவுகள், நிறைவேறாமல் போன ஆசைகள், வாழ்க்கையில் அனுபவிக்க முடியாமல் விட்டுவிட்ட விருப்பங்கள் ஆகியவை அவர்களுடைய நினைவுகளுக்கு வருகின்றன.

இளம் வயதில் ஜோஹான்னே அனுபவிக்கும் காதல் உணர்வுகளும் ஆசைகளும், வயதில் மூத்த இந்த இரண்டு பெண்களையும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுகின்றன.

இதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைப் பெண்களும் காதல், ஆசை, உறவு ஆகியவற்றை வெவ்வேறு அனுபவங்களின் வழியாக எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது.

ஜோஹான்னே எழுதியுள்ள சம்பவங்கள் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் கிறிஸ்டின், நேரடியாக ஜோஹான்னாவைச் சந்தித்துப் பேச முடிவு செய்கிறாள்.

அவளிடம் தனது மகளின் கையெழுத்துப் பிரதியில் இடம்பெற்றுள்ள உடல் சார்ந்த நெருக்கமான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றனவா என்று கேட்கிறாள். குறிப்பாக, ஜோஹான்னேவுடன் அத்தகைய உறவில் ஈடுபட்டீர்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்துகிறாள்.

ஆனால் ஜோஹான்னா அதற்கு நேரடியான பதில் அளிக்க மறுக்கிறாள். அந்தச் சம்பவங்கள் நடந்தனவா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தாமல் மழுப்பலான நிலையில் இருக்கிறாள்.

இதனால் கிறிஸ்டினுக்கும் கரினுக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. ஜோஹான்னே எழுதியவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது, எவ்வளவு அவளுடைய காதல் கற்பனை என்பதைக் கண்டறிய முடியாத குழப்பம் நீடிக்கிறது.

இதற்கிடையில், ஒருநாள் ஜோஹான்னே வழக்கம்போல ஜோஹான்னாவின் வீட்டிற்குச் செல்கிறாள். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது.

கதவைத் திறந்தபோது, ஃப்ரோய்டிஸ் என்ற வயதான பெண் அங்கு வருகிறாள். அவள் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி. ஜோஹான்னாவிடம் பின்னல் வேலை கற்றுக்கொள்வதற்காக அவளும் அங்கு வந்திருக்கிறாள்.

ஃப்ரோய்டிஸுக்கும் ஜோஹான்னாவுக்கும் இடையிலான பழக்கத்தைப் பார்க்கும் ஜோஹான்னேவுக்கு ஒரு புதிய உணர்வு ஏற்படுகிறது. ஜோஹான்னா அவளை வெளிப்படையாக அழைத்திருப்பதையும், இருவரும் ஒருவருக்கொருவர் சமமான முதிர்ச்சியுள்ள பெண்களைப் போலப் பழகுவதையும் கவனிக்கிறாள்.

இதற்கு முன்பு ஜோஹான்னாவுடன் தனியாக நேரம் செலவிட்டபோது தனக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை என்பதைப் போல அவள் உணர்கிறாள்.

மேலும், ஃப்ரோய்டிஸுக்கும் ஜோஹான்னாவுக்கும் இடையிலான உறவு தன்னைப் போன்ற பள்ளி மாணவிக்கும் ஆசிரியைக்கும் இடையிலான உறவிலிருந்து மாறுபட்டதாக இருப்பதையும் உணர்கிறாள்.

அந்தச் சூழலில் தான் அங்கு பொருந்தாதவளாக இருப்பதாக ஜோஹான்னே உணர்கிறாள். எனவே, அங்கே தொடர்ந்து இருக்காமல் உடனடியாக ஜோஹான்னாவின் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

இதற்குச் சில காலத்திற்குப் பிறகு, ஜோஹான்னே ஒரு மனநல  மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கான சந்திப்பு நடைபெற வேண்டிய நிலையில், எதிர்பாராதவிதமாக ஃப்ரோய்டிஸையும் சந்திக்கிறாள்.

ஜோஹான்னாவின் வீட்டில் ஏற்கெனவே பார்த்திருந்த ஃப்ரோய்டிஸை மீண்டும் சந்திப்பது இருவருக்கும் உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

அவர்கள் இருவரும் பேசத் தொடங்குகின்றனர். அந்தச் சந்திப்பு மருத்துவமனை வளாகத்திற்குள் மட்டும் முடிந்துவிடாமல், இருவரும் அங்கிருந்து ஒன்றாக வெளியேறுகின்றனர்.

பின்னர் அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்று காபி அருந்துவதற்காக நடந்து செல்கின்றனர்.

இவ்வாறு ஜோஹான்னே தனது ஆசிரியையான ஜோஹான்னா மீது கொண்ட காதல் ஈர்ப்பில் தொடங்கிய நிகழ்வுகள், அவளுடைய தனிப்பட்ட கற்பனைகள் எழுத்துப் படைப்பாக மாறுவது, அந்தப் படைப்பு குடும்பத்திற்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி மற்றும் கருத்து வேறுபாடுகள், உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான குழப்பம், இறுதியில் ஃப்ரோய்டிஸுடனான எதிர்பாராத சந்திப்பு எனத் தொடர்கின்றன.

ஃப்ரோய்டிஸும் ஜோஹான்னேவும் காபி அருந்தச் செல்வதற்காக ஒன்றாக நடந்து செல்லும் காட்சியுடன் திரைப்படத்தின் கதை நிறைவடைகிறது.

காதல், ஆசை, கற்பனை ஆகியவை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களாக அமைகின்றன. ஒருவரின் உணர்வுக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டையும், வயது மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் காதலைப் புரிந்துகொள்ளும் விதத்தை எவ்வாறு மாற்றுகின்றன என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. மனித உணர்வுகளைத் தீர்ப்பளிக்காமல் புரிந்துகொள்வதே இதன் மையச் சாரம்.

#கீதப்ப்ரியன்கோல்டன்பியர்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (250) ஆஸ்கர் (201) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)