ஹேராம் | ஆகாஷே ஜோத்ஸ்னா " கவிதையை எழுதிய கவிஞர் ஜிபானந்ததாஸ் பற்றிய குறிப்பு

ஹேராம் படத்தில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடலின் துவக்கத்தில் வரும் ஆகாஷே ஜோத்ஸ்னா புகழ்பெற்ற வங்கக் கவிதை.

மேற்கு வங்கம் தரமான இலக்கியங்கள் கவிதைகள் மற்றும்  புதுக் கவிதைகளுக்கு தாய்வீடு,"ஆகாஷே ஜோத்ஸ்னா " கவிதையை எழுதிய கவிஞர் ஜிபானந்ததாஸ் வங்கக்கவிஞர்களில் முக்கியமானவர்

இவர் வாழும் காலத்தில் அதிகம் பேசப்படாத  நவீனத்துவ கவிஞர், கவிஞர் ரபீந்த்ரநாத் தாகூருக்கு அடுத்து நவீன நடை கவிதைகளுக்காக ஜிபானந்ததாஸ் நினைவுகூறப்படுகிறார், 

இயக்குனர் சத்யஜித்ரே உள்ளிட்ட  வங்க இலக்கிய ஆர்வலர்களின் ஆதர்சம் இவர், அதனால் தான் ஹேராம் படத்தில் இவரது ஆகாஷ ஜோத்ஸ்னா என்ற நவீன வங்கக் கவிதையை அபர்னா விரகதாபத்துடன் கீழே தரையில் படுத்தபடி உச்சரிக்க , சாகேத் ராம் அமர்ந்த நிலையில் பியானோ வாசித்தபடி இருப்பார்,இதில் ராணி முகர்ஜிக்கு தமிழ் ஆங்கிலத்தில் பின்னணி பேசியவர் நடிகை ஜஸ்வர்யா (நடிகை லட்சுமி மகள்)

எத்தனை கவிதை போன்ற ஒரு காட்சிக்கு தேர்ந்தெடுத்த அற்புதமான கவிதை இது, இதற்கு இசைஞானி அமைத்த இசை எந்த ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது.

1927 ஆம் ஆண்டு ஜிபானந்ததாஸின் முதல் கவிதைத் தொகுப்பான ஜாரோ பாலக் வெளிவந்தது. அவரின் ருபாஸி பங்ளா  1934 ஆம் ஆண்டு எழுதியது, ஏழ்மைத்துயரினாலும் தொடர் தோல்விகளாலும் அவர் இறந்த பின் 1957ஆம் ஆண்டில் தான் பதிப்பிக்கப்பட்டதாம்,  அதன் அட்டையை வடிவமைத்தது சத்யஜித்ரே.

கவிஞர் ஜிபானந்ததாஸ் வங்கப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர், தொடர்ந்த வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர், உறவுக்காரப் பெண்ணைக்  காதலித்து தங்கை முறை என்பதால் தன் காதலை வெளிச்சொல்ல முடியாமல் தோல்வியுற்றவர், ஆமை போல மெதுவாகச் செல்லும் கல்கத்தா ட்ராமில் தலை மோதி படுகாயமடைந்து படுத்த படுக்கையாகி உயிர் துறந்தார்.(பார்த்த  பலர் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கின்றனர் )

இவர் சுமார் 280 கவிதைகள் எழுதியுள்ளார்,இவர் பல புதினங்கள் சிறுகதைகளும் எழுதியுள்ளார்,

"Janmon Ki Jwala" பாடலை  ஆடியோவாக கேட்டு ரசித்த கல்கத்தா மக்கள் , படத்தில் அந்த கவிதையின் பின்னணியில் சாகேத்ராமும் அபர்னாவும் கொள்ளும் கலவிக் காட்சிக்கு  கொதித்து விட்டனர், அதை புரிந்து கொள்ளவும் முயலவில்லை

என்ன சிக்கும் ? இந்தப்  படத்தை தடை செய்யலாம் என எதிர்கட்சி காங்கிரஸ் அரசியல்வாதிகள் மாணவர்களையும், குண்டர்களையும் தூண்டி விட்டனர், தியேட்டர் திரைகள் கிழிக்கப்பட்டது , நாற்காலிகள் உடைக்கப்பட்டன, பார்வையாளர்கள் தாக்கப்பட்டனர்,

அவர்கள் ,இது வங்கக் கவிஞர் ஜிபானந்ததாஸிற்கான போராட்டம் என ஒன்று திரண்டு கல்கத்தாவின்  ப்ரியா மற்றும் ஜோதி தியேட்டர்கள் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஹேராம் படம் இப்படி பல எதிர்ப்புக்களை மீறித் தான் வடக்கு,  கிழக்கு , மேற்கு மாகாணங்களில் வெளியானது , வெறுப்பையும் தோல்வியையும் எதிர்கொண்டது.

வங்கக் கவிதை மூலம்
//Akashe jyotsna 
Phuler pathe chita baagher gayer karam 
Hridoy amar horin jano 
Ratrer ei niraboder bhetor, kondike cholechi? 
Rupali paatar chaya amar shorire 
Kothao kono horin neyi 
Aar joto door jaayee, kaashter moton banka chaand 
Shesh shonale horin, shorsho khete niyeche jano 
Taar par dhire dhire dube jaache 
Shata shata mrigedaar choker ghumer andhokaarer bhetor //

ஆகாஷே ஜோத்ஸ்னா கவிதையின் ஆங்கில/தமிழ் வடிவம்

Moonlight in the sky

நிலவொளி பூசிய வானில்

On the Forest Trail the Scent of the Leopard

வனத்தின் தடத்தில்  சிறுத்தையின் மணம்

My Heart is like a Deer

என் இதயம் மானைப் போன்றது

In the Silence of this night, which way am I going?

இந்த அமைதியான இரவில் நான் எவ்வழிக்காய் போகிறேன்?

The silvery shadow of leaves on my body
No more deer anywhere

என் உடம்பின் மீது இலைகளின்  வெள்ளி நிழல் விழுகிறது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறெந்த மானையும்  காணவில்லை,

As far as I go I see the moon bent like a sickle

நான் எத்தனை தூரம் போனாலும், கதிர் அரிவாள் தோற்றம் கொண்ட  நிலவை  மட்டுமே பார்க்கிறேன், 

Cutting the last golden deer-grain
Then sinking slowly

அது கடைசி பொன்மான் நிற கதிர்மணிகளையும் அறுத்தபின் சாய்கிறது

Into the darkness of all the sleep
In the eyes of a hundred does.

நூறு கண்கள் கொண்டிருக்கும் உறக்கத்தின் இருட்டிற்குள்ளே.

தமிழில் இப்பாடலைப் பாடியவர்கள் 
ராணி முகர்ஜி ஆஷா போஸ்லே மற்றும் கமல்ஹாசன்,பாடலை எழுதியதும் கமல்ஹாசன், 

இந்தியில் இப்பாடலைப் பாடியவர்கள் 
ராணி முகர்ஜி ஆஷா போஸ்லே மற்றும் ஹரிஹரன்,பாடலை எழுதியது சமீர், 

நூறு வருடங்கள் கடந்தாலும் வரிகளுக்காக, இசைக்காக , காட்சியாக்கத்திற்காக பேசப்படும் பாடலாக இப்பாடல் அமைந்து விட்டது என்றால் மிகையில்லை.

இது கமல்ஹாசனின் மொழிபெயர்ப்பு ஹேராம் திரைக்கதை புத்தகத்தில் இருந்து.

வானிலே வெண்நிலா

கானகப் பாதையில் சிறுத்தையின் உடல் வாசனை.

என் இதயம் புள்ளி மான் போல,
இந்த இரவின் அமைதியில் 
நான் எந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறேன்?

என் உடல் மீது
வெள்ளி இலைகளின் நிழல்.
புள்ளிமானை எங்கும் காணோம்.

நான் போகும் தூரமெல்லாம்
தங்கமான்- பயிரை , அறுவடை செய்யும்
அரிவாள் போல அரைநிலா.
அந்த நிலா,மெல்ல மெல்ல,
நூற்றுக்கணக்கான பெண் மான்களின் விழிகளின் உறக்க இருளுக்குள்  அமிழ்ந்து கொண்டிருக்கிறது...

#ஹேராம், #heyram,#kamalhaasan,#கமல்ஹாசன்,#இசைஞானி,#ஜிபானந்ததாஸ்,#Jibonanda_Das
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)