குரூர சைக்கோ கொலையாளிகளின் அன்னை தந்தையர் ஒரு ஆய்வு


உலகெங்கிலும் கொடூர மிருகங்களை வயிற்றில் சுமந்து பெற்ற தாயாரின் மனநிலை இப்படித்தான் உள்ளது,

"என் பிள்ளை நல்லவன்,எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டான்", 

சமூகத்தின் இந்த தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி மனநிலை குறித்து நிறைய சிந்தித்துள்ளேன் , எத்தனை கொடூரமான குரூபியின் தாயாரும் தன் மகன் தவறு செய்திருக்க மாட்டான் என சாதிப்பார்கள், 
குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவனை மன்னிக்க கூடாதா?என் மகனை தூக்கில் ஏற்றிக் கொல்வதால்  போன உயிர் திரும்ப வந்திடுமா? என்பார்கள்.

தேவர் மகன் திரைப்படத்தில் கொடூரனான மாயனின் தாயார் s.n.லட்சுமி சொல்லும் அந்த வசனம் ஒன்று போதும் " நான் குடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே"
"பாத்தியா , தெய்வம் யார் தலைய வாங்குச்சுன்னு"
"பாவி மகனே இப்படி முண்டமா கெடக்குறியே"

இதெல்லாம் வெறும் திரைப்படத்துக்கு எழுதிய வசனமல்ல, யதார்த்த நிஜம்.

இந்த கொடூர மிருகம் சைக்கோ சங்கரின் இறுதி சடங்கில் அவன் தாயார் தற்கொலை செய்து கொண்டு இறந்த மகாபாவிக்கு வெடித்து அழுவதைப் பாருங்கள், அவன் மனைவியோ  தன் கணவன் சாவில் சந்தேகம் உள்ளது, அதற்கு நீதி விசாரணை தேவை என்றாள், அவன் மகள்கள் காணக்கிடைக்காத தங்க அப்பாவுக்கு  ஒப்பாரி வைப்பதை பாருங்கள், இவர்கள் யாரும் இந்த சைக்கோ மிருகத்தால் வன்புணர்வு செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்டு புதரில் வீசப்பட்ட 19  அப்பாவி உயிர்களுக்கு கண்ணீர் உகுக்கவில்லை, வருந்தவில்லை, சைக்கோ சங்கரின் தாயார் ரவுடி கணவன் மாரிமுத்துவின் வன்புணர்வுகளை  கொலைகளை கண்டும் காணாமல் விட்டவள், அதே போலவே மகன் ஜெய்சங்கரையும் தருதலையாக வளர்த்தெடுத்திருக்கிறாள், விளைவு சைக்கோ சங்கர் வன்புணர்ந்து கொன்று காணாப்பிணம் ஆக்கியவர்களின் சரியான கணக்கு போலீஸ் குற்றப்பதிவேட்டில் இல்லை.

உலகமெங்கும் இது தான் விந்தையான மனநிலையாக உள்ளது, உதாரணமாக டெக்ஸாஸில் வகுப்பறையில் 21 பேர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற Salvador Ramos என்ற 18 வயது இளைஞனின் தாயார் மகனை மன்னிக்க கேட்கிறார்.

நீதிக்கு தலைவணங்கு திரைப்படத்தில் தாசேட்டா பாடும் இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் பாடல் தமிழின் அற்புதமான நீதி நெறிப்பாடல், புலவர் புலமைப்பித்தன் எழுதியது, அதில் வரும் இந்த வரிகள் முக்கியமானவை.

"எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே 

அவன் நல்லவனாவதும்
தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே"

இந்த வரிகள் மெய்யானவை அன்னை வளர்த்தெடுப்பதில் தான் ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் உள்ளது.

அந்தநாள் திரைப்படத்தில் தாய் நாட்டு ராணுவ ரகசியங்களை எதிரிநாட்டிடம் விற்கத் துணியும்  தேசதுரோகி கணவனை சுட்டுக் கொள்வார் மனைவி பண்டரிபாய்.

தங்கப்பதக்கம்  திரைப்படத்தில் தாய் நாட்டு ராணுவ ரகசியங்களை எதிரிநாட்டிடம் விற்கத் துணியும்  தேசதுரோகி மகனை  சுட்டுக் கொள்வார் எஸ்.பி.சவுத்திரி .

இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் வாங்கிய மகனால் பள்ளிக் குழந்தைகள் கொத்தாக இறந்ததை அறிந்த சேனாதிபதி மகனையும் தன் கத்தியால் குத்திக் கொல்வார்.

நந்தா திரைப்படத்தில் திருத்தமுடியாத கொலைகாரனாகிவிட்ட மகனை கொல்ல உணவில் விஷம் வைத்து மகனை சாப்பிட வைத்து அதே சோற்றை தானும் சாப்பிட்டு மகன் மடியில் இறக்க தானும் வெட்கியபடி இறப்பார் தாய் ராஜ்யஸ்ரீ.

இவையெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் போலிருக்கிறது.

மகாநதி திரைப்படத்தில் ஒரு வசனம், நல்லவனுக்கு கிடைக்கிற எல்லாமும் கெட்டவனுக்கும் கிடைச்சிருதே அது எப்படி ? என்று ஆதங்கப்படுவார் கிருஷ்ணா, இந்த சைக்கோ சங்கருக்கு இறுதி மரியாதைக்கு சுடுகாட்டில் கூடிய கூட்டம் அதைத் தான் காட்டுகிறது.

இதே போலவே ஹாசினி என்ற  குழந்தையை தன் அறைக்குள் அழைத்து போய் நாசம் செய்து கொன்று, தன் gym bagல் திணித்து போய்  எரித்துக் கொன்ற phedophilic கொலையாளி தஷ்வந்த் என்பவனின் தாயார் கொலையாளி மகனுக்காக 50 லட்சம் செலவழித்து வழக்காடினாள், ஆனால் அந்த கொடூரன் பிணையில் வந்தபோது தாயாரையே சுத்தியலால் அடித்துக் கொன்று அவள் தாலிசங்கிலி அறுத்துக்கொண்டு,வளையல்களை உருவிக்கொண்டு தப்பி பின்னர் பிடிபட்டது வரலாறு.

இதே போல ஊடகங்கள் மறந்து போன சைக்கோ கொலையாளி ஜெயப்ரகாஷ் என்பவனை அவன் தந்தை தூக்கு கயிற்றில் இருந்து  தப்பிக்க விட்ட துயரக்கதை இங்கே சொல்ல உண்டு.

24-2-1984 அன்று நூறாவது நாள் திரைப்படம் வடபழனி கமலா திரையரங்கில்  வெளியானது, வேலை தேடி திருநெல்வேலியில் இருந்து  சென்னை விருகம்பாக்கத்தில் தங்கை தேசிகாராணி வீட்டில். வந்து தங்கியிருந்த 22 வயதான ஜெயபிரகாஷ் என்ற கல்லூரி இளங்கலை மாணவன் அந்த திரைப்படத்தை காலைக்காட்சி பார்த்துவிட்டு விருகம்பாக்கம் வீட்டிற்கு வருகிறான்,அவன் கராத்தே ப்ளாக் பெல்ட் பயின்றவனும் கூட , என்னப்பா சிரத்தையாக வேலை தேடக்கூடாதா? என என தங்கை கணவர் நரசிம்மன் (24) அன்றும் வழக்கம் போல புத்திமதி சொல்ல, கணவரை வெறித்தனமாக கராத்தே அடி அடித்து வீழ்த்தி அம்மிக்கல்லை தலையில் போட்டு முதல் கொலை செய்தான் ஜெயபிரகாஷ்.
தடுக்க வந்த 18 வயது பச்சை உடம்புக்காரி தங்கையையும் தலைமுடியை கொத்தாக பற்றித் தூக்கி சுவற்றில் பல முறை மோதிக் கொன்றான், தூளியில் சத்தத்தால் தூக்கம் கலைந்து கத்திக்கொண்டிருந்த ஆறுமாத ஆண் குழந்தை சம்பத்தை வெளியே எடுத்து தரையில் வீசிக் கொன்றான், என்ன பயங்கர சத்தம் என்று கேட்டபடி வந்த நரசிம்மனின் அண்ணி ராணியை (22) கதவின் பின்னால் ஒளிந்து கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்றான், மனைவி ராணியைத் தேடிவந்த நரசிம்மனின் அண்ணன் மணியையும் (28) அதே போல பின்னால் இருந்து கழுத்தை சுருக்கிட்டு நெறித்துக் கொன்றான், பெற்றோரைத் தேடி அடுத்தடுத்து வீட்டுக்குள் வந்த மகள்கள் கவிதா (2 வயது) மற்றும் தமிழ் செல்வியை (6 வயது )வாயைப் பொத்தி மூர்ச்சையாக்கிக் கொன்றான் ஜெயபிரகாஷ், 
நரசிம்மன் நடத்தும் பிளாஸ்டிக் குடங்கள் பக்கெட் தயாரிக்கும் பட்டறையில் லேத்மேனாக  இருந்த சேகர் என்பவர் இரவு 10-30 மணிக்கு பட்டறையை மூடி சாவியைக் கொண்டு வந்து தர வந்தவரை கராத்தே அடி அடித்து  முதுகில் கத்தியை இறக்கிக் கொன்றான் ஜெயபிரகாஷ்.

24-2-1984 அன்று மாலை 3.30 மணி துவங்கி  இரவு 10 மணி வரை இப்படி கொலை வெறித் தாண்டவமாடினான் ஜெயபிரகாஷ். 

வீடரடு சுவற்றை கையில் கிடைத்த கருவிக்க் கொண்டு துளையிட முயன்று தோற்றவன், பள்ளம் பறிக்க முயன்று அதிலும் தோல்வி அடைந்துள்ளான், பெண்கள் குழந்தைகள் என அத்தனைபேர் நகையையும் திருடி சாலிகிராமம் மார்வாடி கடையில் அடகு வைத்துள்ளான்.

ஒருவர் மீது ஒருவராக இரு தினங்களுக்கு அடுக்கி வைக்கப்பட்டனர்,  பிணங்களை அப்படியே போட்டு வைத்து வெளியே பூட்டி  இரவு சாப்பிடவும்  வெளியே சென்று வந்துள்ளான், அக்கம்பக்கத்தில் கேட்க சகோதரி குடும்பத்தார் திருப்பதி சென்றதாகவும் தான் இன்று சென்று அவர்களுடன் சேர்ந்து கொள்வதாகவும்  புளுகியுள்ளான்,சொன்னபடியே  திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து மொட்டை இட்டு, வில்லன் சத்யராஜ் போல வட்டக்கண்ணாடியும் வாங்கி சுற்றியுள்ளான், சகிக்கமுடியாத நாற்றம்  எழுவதைக் கண்ட அக்கம்பக்கத்தார் போலீஸுக்கு தகவல் சொல்ல திருப்பதியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் இறங்குகையில் பிடிபட்டான் ஜெயபிரகாஷ்,

1985 ஆம் ஆண்டு  கொலைகாரன் ஜெயபிரகாஷ் தந்தை விண்ணப்பித்த  மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன, கொலைகாரன் ஜெயபிரகாஷ் தந்தை k.கோவிந்தசாமி  அப்போதே பல லட்சங்கள் செலவு செய்து சுப்ரீம் கோர்டிலும், ஜனாதிபதி , ஆளுனர் என தொடர்ந்து மேல்முறையீடுகள் கருணை மனுக்கள் செய்தார், தன் மகனுக்கு delusional disorder என்று மனநல மருத்துவர் துணையுடன் வாதாடினார், சைக்கோ கொலைகாரன் ஜெயபிரகாஷ் பெற்ற மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது,
1988 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி R.வெங்கட்ராமன் ,  தமிழக ஆளுனர்கள் சுந்தர் லால் குரானா மற்றும்
 P.C. அலெக்ஸாண்டரால் கருணை மன்னிப்பு வழங்ப்பட்டு அவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதும் 2012 ஆம் ஆண்டு கொலைகாரன் ஜெயபிரகாஷ் விடுதலை ஆகிவிட்டதும் துயர வரலாறு, 

இதே போலவே நாவரசு என்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மருத்துவக்கல்லூரி மாணவனை அறைக்கு அழைத்து இச்சைக்கு உடன்படாத ஆத்திரத்தில் கொன்று தலை கைகள் கால்கள் முண்டம் என வெவ்வேறு ஊர்களில் சென்று வீசி அப்புறப்படுத்திய சைக்கோ கொலையாளி ஜான் டேவிட் என்ற மிருகத்தை பெற்ற தாயாரும் தன் மகனை கோடிக்ணக்கான ரூபாய் செலவழித்து வழக்காடி பிணை எடுத்து ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கித் தர பாடுபட்டவள், அவன் மீண்டும் போலீசாரிடம் பிடிபட்டு சிதம்பரம் மத்திய சிறையில் உழல்வது வரலாறு. 

சைக்கோ சங்கர் பற்றிய முந்தைய பதிவு

சைக்கோ கொலையாளி ஜான் டேவிட் பற்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)