அம்ஜத் : அப்ப உன் துப்பாக்கி முஸ்லிம்களை கொல்ற துப்பாக்கி? இல்லையா?!!
சாகேத் ராம் : (துப்பாக்கியின் safety lock ஐ விடுவித்து குறி வைத்தவர் ) தேவைப்பட்டால் அதுவும் செய்யும்.
நீங்கள்லாம் சேர்ந்து தான்டா என் அபர்ணாவைக் கொன்னேள்
அம்ஜத் : உன் அபர்ணாவைக் கொன்னதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்,என் அப்பாவைக் கொன்னதுக்கு நான் உன்னை மன்னிக்கிறேன்,உனக்கு அப்படியும் ஆத்திரம் அடங்கலைன்னா, என்னைக் கொல்லு, ஒரு முஸ்லீமைக் கொன்ன சந்தோஷத்தை நான் தர்ரேன், ஆனால் அதன் பிறகு உன் மதவெறி துவேஷத்தை விட்டுடுவேன்னு நீ எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு, கொடுப்பியாடா ? ராம்!,என்று துப்பாக்கியை தன் நெஞ்சின் மீது அழுத்தி ட்ரிக்கரை இழுக்கப் போகிறார்,
சாகேத்ராமுக்கு அப்பொது தான் தான் மனிதன் என்ற ப்ரக்ஞை திரும்புகிறது, துப்பாக்கியைப் பிடுங்கி safety lock செய்கிறார்.
சாகேத்ராம் : நான் உன்னைக் கொல்ல வர்ல, இதுக்கான காரணத்தைக் கொல்ல வந்திருக்கேன்.
அம்ஜத் : இதுக்கான காரணம் யார்னு நினைக்கிற ராம்?!
சாகேத்ராம் : அல்டாஃப் டெய்லரா?விரலால் (அழகாக) இல்லை என்கிறார்., சுஹ்ரவர்தி? அவருமில்லை,ஜின்னா? அவருமில்லை, மிஸ்டர்.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அவரைத் தான் கொல்லனும்.
அம்ஜத்: உனக்குப் பைத்தியமாடா? ராம்
Gandhi is the only sanity in this country
( காந்தி ஒருவரே இந்நாட்டில் தூய்மையானவர்)
#சாகேத்ராம், #ஹேராம், #அம்ஜத்,#ஆசாத்,#கமல்ஹாசன்,#மைதிலி,#நஃபீஸா,#காந்தி