எந்த படைப்பென்றாலும் அதன் மூல வடிவத்திலேயே அதைக் கேட்க வேண்டும் என்பது வேத வாக்கு, இந்த ராட்சசடு 1986 தெலுங்கு திரைப்படம் மொழிமாற்றம் பெற்று தமிழுக்கு வந்துள்ளது,
தெலுங்கர்கள் இசைஞானியை சாமியாக கும்பிடுவதற்கு காரணம் உள்ளது, எத்தனை richness பாடல் முழுவதும் தந்து இழைத்துள்ளார், எனக்கு தெலுங்கு ஒரு அட்சரம் தெரியாவிட்டாலும் இந்த கவிஞர் வேட்டுரி சுந்தரராம மூர்த்தி பாடல் வரிகளை karaoke படித்து பாட அத்தனை குதூகலமாக உள்ளது, பாஷாபிமானம் விட்டு நாமாக இது போல தேடிக் கேட்கலாம், எஸ்பிபி ஜானகியம்மா எத்தனை அழகாக பாடியுள்ளார்கள்.
இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதினார், இன்றும் தமிழ் வடிவ பாடல்களைக் கேட்கையில் இது மொழிமாற்று வடிவத்துக்கு எழுதியது என்பதை உணர முடியாது
பாடலை இங்கே கேட்கலாம்
#இசைஞானி,#வேட்டுரி,#ராட்சசடு,#மல்லி_மல்லி,#ராட்சசன்,#