மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார்காந்தி ஹேராம் படத்தில் நன்றிக் கடனுக்கு வேண்டியே தோன்றினார் என்றால் மிகையில்லை,
அந்த சுவாரஸ்யமான பின்னணியை தசாவதாரம் படத்தின் மேடையில் அப்போது எழுந்த எதிர்ப்புக்குரல்களுக்கு பதில் சொல்கையில் விளக்கினார் கமல்ஹாசன், எதிர்ப்பாளர்களே வாருங்கள் பேசுவோம், ஆனால் என் படைப்பைப் பற்றி முன்முடிவு செய்துவிட்டு என்னிடம் பேச வராதீர்கள்! என்றார்,
அப்படித்தான் துஷார் காந்தி பற்றியும் குறிப்பிட்டார், ஹேராம் படத்தின் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடக்கையில்,நாடெங்கும் சினிமா பத்திரிக்கைகள் இஷ்டம் போல கிசுகிசுத்தன,
அவற்றை செவியுற்ற துஷார் காந்தி இவரைச் சந்திக்க நேரம் கேட்டார், அதன்படி இவர் வாசல் வரை வந்தவர் உள்ளே வரத் தயங்குகிறார், எடுத்த எடுப்பில் , நான் உங்கள் ரசிகன், நீங்கள் நாதுராம் கோட்சேவாகத் தானே நடிக்கிறீர்கள்?! அது வேண்டாமே!
தயவு செய்து கைவிடுங்கள், எனக்கு தினம் ஐந்து மணிநேரம் மட்டும் ஒதுக்குங்கள், பாபுஜி பற்றி தகுதியானவற்றை , நெகிழ்ச்சியானவற்றை சொல்கிறேன், அதன் பின் நீங்களே படத்தை கைவிடுவீர்கள் என்றார்.
கமல்ஹாசன், துஷார் காந்தியிடம், எந்த முன்முடிவும் செய்யாமல் எனக்கு ஒரு மணி நேரம் மட்டும் கொடுங்கள், இந்தப் படத்தை எடுக்க வேண்டிய அவசியத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
அதன் பின் அன்றைய இரவு உணவு வரை பல பல விவாதங்கள், கதையைப் பற்றியும் காந்தியைப் பற்றியும் நீண்டது, முடிவில், படத்தின் கடைசியில் முத்தாய்ப்பாக சாகேத்ராமின் சவ மரியாதையில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவார்,கதர் நூல்கண்டு திரியை அழகாக உடல் மீது மாலை போல வைப்பார்,காலைத் தொட்டு வணங்குவார்,படத்தில் துஷார் காந்தியின் தோற்றம் எத்தனை ஊர் வாய்களை அடைத்தது?
சாகேத் ராமின் பேரன்,துஷார் காந்தியை தன் தாத்தா அறைக்குக் கூட்டிப்போய் அவரின் பொக்கிஷங்களைக் காட்டுவார், இதில் சாகேத்ராம் கவர்ந்து வந்த காந்தியின் ரத்தக்கறை படிந்த செருப்புகளையும், கண்ணாடியையும் காண்பிப்பார்,
அவர் அவற்றை தான் வைத்துக்கொள்ளவா? என தயங்கியபடி கேட்க தாராளமாக, இவை உங்களுடையது என்பார், இவை எதற்கும் வசனம் கிடையாது, காந்தியின் பெரிய கோட்டுச்சித்திர wallpaper ஒட்டப்பட்ட அறை சன்னல்களை ஒவ்வொன்றாகத் திறப்பார் பேரன், அங்கே அறைக்குள் வெளிச்சம் வரும்.
PS: சவ மரியாதைக் காட்சியின் பின்னணியில் globus துணிக்கடையின் முகப்பு தெரியும்,கருப்பு வெள்ளை ஒளிப்பதிவிற்கு நிகழ்கால contemporary உலகின் தன்மையைத் தரும் அது ,globus அந்த லத்தின் சொல்லிற்கு எத்தனையோ? அர்த்தங்கள் உண்டு, ஒருவருக்கு உணர்ச்சிவசப்பட்டு தொண்டை கட்டுவதைக் கூட globus என்கின்றனர், அவ்வகையில் அந்தக் காட்சிக்கு அந்த globus கடையின் signage font பொருத்தமாகவே இருந்தது.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான ஒன்று ஹேராம் திரைபடத்தை பார்த்துவிட்டு சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசனை கடிதத்தில் தொடர்பு கொண்ட தலைமை நிர்வாகி, படத்தில் காணாமல் போன பாப்புஜியின் கண்ணாடி மற்றும் செருப்பை நீங்கள் காந்தியின் பேரன் துஷார் காந்தியிடம் ஒப்படைத்துள்ளீர்களே!!! அது தேசத்தின் சொத்தல்லவா? நீங்கள் எங்கள் ஆசிரமத்திடம் தானே ஒப்படைத்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்களாம், உண்மையும் கற்பனையும் வைத்து செய்த அபாரமான திரைக்கதை முயற்சி செய்த சாதனை இது,இல்லை என்றால் இப்படி ஒரு கடிதத்தை அவர்கள் இயக்குனருக்கு எழுதியிருப்பார்களா?
#ஹேராம், #heyram, #kamalhaasan, #கமல்ஹாசன், #துஷார்_காந்தி,#tushar_gandhi,#globus