துபாயில் எப்படி சுத்தம் பேணுகிறார்கள்? நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எப்படி சுற்றுலாவை வளர்க்க பிரயத்தனப்படுகிறார்கள் என்பதற்கு சிறு உதாரணம் இது,
ஜுமேய்ரா பீச் மணல் பகுதி இது ,அதிக ஆளரவம் இருக்காது ,நான் துபாயில் வேலை செய்கையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சென்று மணிக்கணக்கில் ஆழமில்லா கடல் பகுதியில் மிதந்து கொண்டிருப்பேன்,
இங்குள்ள மணலில் குப்பை அள்ளும் எந்திரம்( beach raking machine )சுத்தம் செய்து செல்கையில் துபாயின் iconic landmark ஆன புர்ஜ் கலிஃபா மற்றும் கடல் வளங்களை இப்படி ரப்பர் ஸ்டாம்ப் போல கடற்கரை மணலில் சில கிலோ மீட்டருக்கு அச்சடித்து விட்டு செல்கிறது,கடற்கரை மணலில் சிகரெட் துண்டு, கண்ணாடி துண்டு,சிப்பிகள், தலைமுடி, குளிர்பான மூடிகள் ,சாக்லேட் காகிதம் என ஒன்றும் தட்டுப்படாது,ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
PS:இங்கு மெரினாவில் சிறுவனாக இருக்கையில் வெண்மையான பொடிமணல் நிறைய இருக்கும், அதில் நிறைய விளையாடியுள்ளேன், இப்போது மணல் வெளி முழுக்க பெருமணலாக உள்ளது,
அதுவும் அத்தனை அழுக்காக உள்ளது , காந்தி சிலை அருகே உள்ள மணல்வெளி இன்னும் மோசம்,
பலகாலமாக அங்கு சிறுநீர் கழித்து நாசம் செய்துள்ளனர், இங்கும் மணலில் குப்பை அள்ளும் எந்திரம் உள்ளது,ஆனால் மக்கள் கூட்டம் போடும் குப்பை கட்டுக்கடங்காமல் உள்ளதால், எத்தனை முறை அந்த எந்திரம் சென்று வந்தாலும் குப்பைகள் குறைவதில்லை,
மக்கள் ஒரு சாக்லேட் உறை ஆனாலும் குப்பை தொட்டியில் தான் இடுவேன் என உறுதி பூண்டால் தான் மெரினாவில் சுத்தம் என்பது நிகழும்.
http://www.worldsweeper.com/Industry/CherringtonDubai5.16.html
#துபாய்,#ஜுமேய்ரா_கடற்கரை,#மணல்_ஓவியம்