ஹேராம் படத்தில் நான் பார்த்து வியந்த ஒரு விஷயம் சாகேத் ராம் அணிந்து வரும் ful vue கண்ணாடி ஃப்ரேம்கள், இதில் சாகேத்ராமின் ஐந்து படிநிலை தோற்றங்களுக்கும் வெவ்வேறு வண்ணம்,material கொண்ட கண்ணாடிகளை அவர் மாற்றினாலும் அவர் தேர்ந்தெடுத்து அணிந்த அடிப்படை வடிவம் என்று பார்த்தால் ful vue தான். இவை அமெரிக்கன் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தால் patent பெறப்பட்ட வடிவம்.
நூறாண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருந்த வட்ட வடிவ (round shape ) கண்ணாடிகளில் இந்த ful vue ஒரு புரட்சி என்றே குறிப்பிடுகின்றனர், குறிப்பாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவர்களின் கண்ணாடி கீழே விழுந்து அடிக்கடி சில்லு பெயர்ந்து விடும் உடையும், அதை கருத்தில் கொண்டு இந்த கண்ணாடி முனைகள் சற்றே துருத்தியபடி இருக்க அவை protector போல செயல்படும்.
சாகேத்ராம் அகழ்வாராய்ச்சி செய்பவர்,ஹாக்கி விளையாட்டு வீரர்,போலோ விளையாட்டு வீரரும் கூட, அப்போது 1930 களில் இந்த full vue AO என்ற அமெரிக்கன் ஆப்டிகல் நிறுவனத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே sophisticator / gadget / art collector ஆன சாகேத்ராம் அதை வாங்கி அணிய ஆரம்பித்து விடுகிறார்,
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல 89 வயது வரை இந்த ful vue வகை கண்ணாடிகளைத் தான் பிடிவாதமாக அணிகிறார்,
இந்த கண்ணாடி ஃப்ரேம் மேலே முனைகள் காதுகள் போல நீண்டு அதன் மீது தான் arms அமைந்திருக்கும், இதன் சௌகர்யம் பல , மகாத்மா காந்தி அணிந்திருக்கும் வட்ட வடிவக் கண்ணாடியின் arms கண்ணாடி ஃப்ரேமின் நடுவே அமர்ந்திருக்கும் அது அணிந்தவர் கார் ஓட்டுகையில் பக்கவாட்டுப் பார்வையை மறைக்கும், இந்த கண்ணாடியில் ஒருவர் 180 டிகிரி தெளிவாக பார்க்கலாம்
அன்றைய 1930's அமெரிக்காவில் இந்த வகை ஃப்ரேம்களை சந்தைப்படுத்துகையில் தம்மையும் குடும்பத்தையும் நாட்டையும் நேசிக்கும் யாரும் இவ்வகை ஃப்ரேமையே வாங்குவர் என்றே விளம்பரம் செய்தனராம், இது தவறுதலாக கீழே விழுந்தாலும் இந்த துருத்திய முனை அந்த அதிர்வை ஏற்று கண்ணாடியை காக்கிறது,
அபர்ணா கூட்டு வன்கலவியில் இவரும் வன்புணர்வில் இருந்து மயிரிழையில் தப்புவார், அப்போது குப்புற விழுந்த இவரது full vue கடுமையாக நொறுங்கி விடும்,கண்ணாடி இல்லாமல் இவரால் ஒன்றும் செய்ய இயலாது என்று உடைந்த கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு விந்தி விந்தி ரத்தம் வழிய நடந்து பழிவாங்க ஓடுவார்.
சாகேத்ராம் தன் கல்கத்தா நீல்கமல் மேன்சனை காலி செய்து டாக்ஸியில் வந்து அமர்கையில் அவரது கண்ணாடி வீறல் விட்டதை மாற்றாமலே இருப்பது தெரியும், அவர் இன்னும் இயல்பு வாழ்வுக்கு திரும்பாததன் பிரதிபலிப்பு அது, அபர்ணாவுக்கு இறுதிசடங்கு செய்த கையுடன் அவர் வீட்டை காலி செய்கிறார் என்ற நமக்கான செய்தி அது, பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மையைத் தரும்
ஹேராம் படத்தில் ஸ்ரீராம் அப்யங்கர் கொலைத் திட்டத்துக்கு வேண்டி ராமகிருஷ்ண பாண்டே என்ற புதிய நாமதேயம் ஏற்றிருப்பார், அவரும் இந்த full vue கண்ணாடியைத் தான் தேர்வு செய்து அணிந்திருப்பார்.
https://www.vintagesunglassesshop.com/ray-ban_ful_vue.html
#கமல்ஹாசன்,#ful_vue,#சாகேத்ராம்,#ஹேராம்,#AO,#american_opticals