கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் வரும் சமத்துவம் பேசும் புரட்சிப்பாடல் இது ,மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது,
சோளக்காட்டில் காவல் காக்க புதிதாய் வேலைக்குச் சேரும் நாவிதர் வீட்டு இளைஞன் சுதாகர் ஒரு தண்டச்சோறு சாப்பிடும் புரட்சிக் கவிஞர் .
முதிர்ந்த சோளத்தை காவல் காக்க வந்த இடத்தில் ஒவ்வொரு காட்டையும் காக்கும் காவல்காரன் ஏஹேய் என அடிக்கொரு தடவை குரல் எழுப்ப வேண்டும், அதைக் கேட்ட அடுத்த வயல்காட்டின் காவல் காரன் திரும்ப ஏ ஹேய் என குரல் எழுப்பி, வெள்ளாமைத் திருடர்களிடமிருந்து பயிரைக் காக்க வேண்டும்,
இதை காவல்காரரான பாக்யராஜ் புதிய காவல்காரனான சுதாகருக்கு சொல்லித் தந்து விட்டு ஷிப்ட் முடிந்து செல்வார்.ஆனால் சுதாகரோ ஏஹேய் என மெட்டு பிடித்து பாடத் தொடங்குவார்,
அவர் லயித்துப் பாடுகையில் சோளம் முழுக்க கொள்ளை போய்விடும்.இவருக்கு வேலையும் போய்விடும், வெள்ளாமைக்கான பணத்திற்கான கடன்சுமை சுதாகரின் தந்தை தலையில் விழும்.
இந்தப் பாடல் ஒரு ரேர்ஜெம் பாடல், இசைஞானி குரலில் ஏஹேய் தொடங்கும்.
படத்தின் lp coverல் இந்தப் பாடல் இல்லை,இந்தப் பாடலை இயக்குனர் k.பாக்கியராஜ் எழுதியுள்ளார்.
பாடல் இங்கே