ஃபவுண்டன் ப்ளாஸா,பாந்தியன் ரோடு ,எழும்பூர், இது எண்பது தொண்ணூறுகளில் மிகவும் புகழ் பெற்ற வணிக வளாகம்,Alsa mall, prince plaza விற்கு முன்னோடி, இந்த டவரின் முகப்பில் ramp ஒன்று ஏறும்,
அது நேராக அருகில் உள்ள வணிக வளாகக் கடைகளின் மேலுள்ள கார் பார்க்கிங்கிற்கு செல்லும்,
அங்கிருந்து கீழே இறங்க கிழக்கும் மேற்கும் இரண்டு head room இருந்தன, அங்கிருந்து படிகள் இறங்கினால் கீழே உள்ள boutique கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள் மேல்தட்டு குடும்பத் தலைவிகள், வளர்ப்பு நாய்களையும் கூட்டி வருவார்கள்.
மேக்கப் பார்லர்கள், ஜூஸ்கடைகள், உள்ளாடைக் கடைகள், சுடிதார், நெயில்பாலீஷ், மேக்கப் பொருட்கள், என எல்லா sophisticated சமாசாரம் முதல் லோக்கல் சமாச்சாரம் வரை எல்லாக் கடைகளும் இருந்தன,
கடைகளின் நுழைவு வாயிலில் fountain இருந்ததால் இது fountain plaza, அங்கே அப்போது வராத வெளிநாட்டுக் கார்களே கிடையாது, இந்த ramp இடையில் first floor ல் ஆட்களை இறக்கிவிட drop off கூட இருந்தது, இங்கே சூரசம்ஹாரம் chasing ஒன்று எடுத்திருப்பார்கள்.
இங்கே இந்த tower ல் sharing office concept ல் நிறைய அலுவலங்கள் இருந்தன, அன்று நகரின் மையத்தில் வாடகை மிகவும் அதிகம் வரும் , எல்லாமே 10'x 25 ' வரும் சிறிய அலுவலகங்கள் ,இடையில் அலுவலக கதவு, தண்ணீர் கேன் வைக்க ,காபி, டீ,ஊற்றித் தர சிறிய vestibule இருந்தது ,
இதன் வாடகையே அன்று ஐயாயிரம் வரும், எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகம் ஆறாவது மாடியில் இருந்தது, முதல் முறையாக அத்தனை உயரத்தில் வேலை செய்கிறேன் என்று thrill இருந்தது ,தொண்ணூறுகளின் post license raj யுகம் அது,freshers ன் ஆரம்ப சம்பளம் எல்லாம் ஆயிரம் ரூபாய் அளவில் தான் இருக்கும்.
உணவு இடைவேளையில் எதிரே இருக்கும் மியூசியத்தின் வாயிலில் சென்று படிகளில் அமர்வேன்,அல்லது அங்கே நடக்கும் ஏதாவது படப்படிப்பில் லயிப்பேன், அல்லது அலுவலக சன்னலில் மேலே இருந்து ramp வழியாக பணக்கார சீமாட்டிகள் ஸ்வயம் ஓட்டி வரும் கார்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்,
அப்போது இவையெல்லாமே அதிசயம், பாந்தியன் சாலையில் 1998ல் மேம்பாலம் கட்டத் துவங்கினர், மேம்பாலம் கட்டி அதில் பயணித்ததே இல்லை ,இன்று cmda வரை செல்கையில் இந்த பழைய பொக்கிஷத்தை படமெடுத்து பாலத்தில் ஏறி திரும்பி வந்தேன்.
#ஃபவுண்டன்_ப்ளாஸா,#fountain_plaza