மனிதன் மகத்தான சல்லிப்பயல், தேவையிருக்கையில் சகலத்தையும் அடைந்து உபயோகப்படுத்திக் கொண்டு அந்த தேவை முடிந்தவுடன் அதை கெட்டு சீரழிய விட்டு விடுகிறான்,
மனிதரோ ,மாடோ,உயிரற்ற வாகனமோ அதை முறையாக பராமரிக்க வேண்டும் தனக்கு பாரமாக இருக்கிறது என்று பல சுயநலமிகள் தாம் உபயோகித்து தேய்த்த வாகனங்களை பல வருடக்கணக்கில் இப்படி சாலையில் நிறுத்தி விடுகின்றனர், இது போல சென்னை முழுவதும் நிறைய வாகனங்களைப் பார்க்கிறேன், என்னிடம் பார்க்கிங் இல்லை என்பதால் நான் இது வரை கார் வாங்கவில்லை,
பொது சாலையை அபகரித்து ஆக்கிரமிப்பதில் மெத்த படித்தவன் ,எழுதப் படிக்கத் தெரியாதவன் என வித்தியாசமில்லை, இந்த மாருதி 800 கார் நங்கநல்லூர் 43 வது தெருவில் சுமார் 56 சதுர அடி அரசு சாலையை அபகரித்து பல வருடங்களாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருக்கிறது, இது ஒரு சோற்றுப் பதம் தான், 30 அடி அகலமுள்ள சாலையில் ஆறடியை இது அடைத்துக் கொள்கிறது, அது வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பிற மக்கள் வாகனம் எத்தனை சிரம்ப்பட்டு போனாலும் கவலையில்லை, தனி மனித ஒழுக்கம் என்பது நம்மால் அடுத்தவருக்கு தொல்லை நேரக்கூடாது என நினைப்பது தான்.
நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் இதற்கு கடுமையான அபராதம் விதிக்கலாம், ஆனால் செய்யமாட்டார்கள், சாலையில் எருமைமாடு கூட ஹார்ன் அடித்தால் லேசாக நகரும், இதன் உரிமையாளரும் இதை olx ல் அல்லது காயலாங்கடையில் விற்க மாட்டார், இந்த காரை இன்னும் பத்து வருடங்களானாலும் நகராட்சி ஊழியர்கள் பாடையில் ஏற்ற மாட்டார்கள்.
#சமூகம்,#waste_wealth,#வேண்டா_சொத்து,#எருமை_மாடு,#படித்த_முட்டாள்,#சுயநலமி,#சுற்றுச்சூழல்,#waste_management, #recycle