ஹேராம் படத்தில் சாகேத்ராம் தன் துப்பாக்கி சிலிண்டர் பேரலை கழற்றிப் பிரித்துப் போட்டு மேம்படுத்துகிற காட்சி, எத்தனை நம்பகத் தன்மையுடன் வந்துள்ளது பாருங்கள், வெல்டிங் செய்கையில் அதற்கு ப்ரத்யேகமாக அணியும் அப்போது புழக்கத்தில் இருந்த கண்ணாடியை அவர் அணிந்துள்ளதைப் பாருங்கள்,
அறையின் ஒளியமைப்பு பாருங்கள்,இறுக்க மூடிய கதவு, சன்னல்கள், சுவற்றில் உள்ள காந்தி படம் ஓவியர் ஆதிமூலம் வரைந்த 150 காந்திகளில் ஒன்று, அதில் சாகேத்ராம் என்ற கையொப்பம் பாருங்கள்,
Mauser C96 broom handle துப்பாக்கியின் owner manualன் specifications சுவற்றில் பாருங்கள்,அங்கே பின் மேசை மீது Mauser ஐ அக்கு வேறாக கழற்றிப் போட்டிருப்பார், இரவு முழுக்க பட்டறையில் வேலை நடக்கும், விடியலில் மார்கழி மாத பஜனை பாடிக்கொண்டு தெருவில் நடக்கும் சத்தம் கேட்டு,சன்னலைத் திறப்பார் சாகேத்ராம்,
விடிந்ததை உணர்வார், லேத் மீது மாட்டி வைத்த தன் கடிகாரத்தை அணிவார், அங்கவஸ்திரத்தை விசிறி வீசி அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியேறுவார், பூட்டுவார்.
உலகசினிமாவில் நாயகன் தன் கொலையாயுதத்தை தேர்ந்தெடுப்பது, அதை தனக்கேற்றபடி மறு வடிவமைத்து உபயோகிக்கும் காட்சி பல படங்களில் வந்துள்ளது , அதில் 2007 ஆம் ஆண்டு வெளியான No country for old men படம் இன்னும் cult அந்தஸ்தைக் கொண்டுள்ளது, அதற்கு படத்தில் காட்டப்படும் கொலையாயுதங்களின் மறுவடிவாக்கமும் ஒரு காரணம் ,
இப்படத்தின் bafoon அம்சம் கொண்ட வில்லன் Anton chigurgh கொண்டு வரும் cattle gun பாருங்கள்,இதை இறைச்சிக்கு வெட்ட வந்த மாட்டின் நெற்றியில் வைத்து இதன் விசையை அழுத்த, பிஸ்டன் வெளியேறி மூளைக்குள் நுழைந்து மாட்டின் உயிரை எடுத்துக் கொண்டு திரும்பி வெளியே வரும்,குண்டு வெளியேறாது, இதை மனிதர்களைக் கொல்லவும் பூட்டிய கதவுகளின் cylindrical lock ஐ உடைக்கவும் உபயோகிப்பார் Anton chigurgh,
கூடவே அவர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கைப்பற்றிய Remington 1187 என்ற புராதான துப்பாக்கியில் SIG SAUER என்ற புதுமையான பெரிய சைலன்சரையும் மாட்டி வைத்திருப்பார், அதைக் கொண்டு அவர் செய்யும் சத்தமில்லாக் கொலைகள் நமக்கு கதிகலங்க வைக்கும்,
அவருக்கு பதிலடி தருவதற்கு நாயகன் Lewellyn Moss , armoryற்குப் போய் நீண்ட இரட்டைக் குழல் கொண்ட சக்தி வாய்ந்த வேட்டை துப்பாக்கி , தோட்டாக்கள் வாங்கி வந்தவர் தன் மோட்டல் அறையில் வைத்து அதன் நீண்ட குழலை ஹாக்ஸா ப்ளேடால் அறுத்து ஷாட்கன் போல செய்து மேம்படுத்துவார்,
இந்த ஆயுதம் சம்பந்தமான காட்சிகள் அத்தனையும் படத்துக்கு மிகுந்த நம்பகத்தன்மையை வழங்கியிருக்கும், இப்படம் Perfectionist's Duo இயக்குனர்கள் கோயன் சகோதரர்கள் இயக்கியது, நவீன Crime story Master என அறியப்படும் Carmac McCarthy எழுதிய details ,
அவற்றை அச்சு பிசகாமல் திரையில் கொண்டு வந்திருப்பார்கள், இயக்குனர் கமல்ஹாசன் இத்தனை தரத்தில் ஒரு கொலையாயுத மேம்படுத்தல் காட்சியை அதற்கு பல வருடங்கள் முன்பே இங்கு தமிழ் & இந்தி சினிமாவில் செய்திருக்கிறார் என்று எண்ணி வியக்கிறேன்.
PS:இந்த மார்கழி மாத பஜனைக் காட்சியை நான் ஏவிஎம் ராஜேஸ்வரியில் படம் பார்க்கையில் , ஏதோ பஜனை கோஷ்டி தியேட்டருக்குள் வந்தது போல வலது பக்கத்தில் இருந்து சிங் சாக் சத்தத்துடன் வரவும், எல்லோரும் அங்கு திரும்புகிறோம்,
சாகேத்ராமும் சரியாக அந்த சன்னலைத் திறந்து பார்ப்பார், ஜனவரி இரண்டாம் வாரத் துவக்கம் அது மார்கழி முடியும் தருணம்,அதை சிறிய காட்சியில் cross reference செய்திருப்பார் இயக்குனர்.
பகலில் வீட்டு வரவேற்பறையில் கமல் வாசிக்கும் விகடன் பாருங்கள் 11.12.1947 என இருக்கும், அவருக்கு மகாராஜாவிடம் இருந்து வரும் தந்தியின் காலக்கிரமத்தை நுணுக்கமாக நமக்கு உணர்த்துவது போல இருக்கும், பட்டறையில் Gandhi itinerary என்று ஒட்டப்பட்ட சுவரிலும் அவரின் program இருக்கும்,
பின்னர் கமல் காசிக்குச் செல்கையில் தபால் பெட்டியில் கடிதம் இடுவார், தூரத்தில் மார்கழி குளிருக்கு நடைபாதை வாசிகள் குளிர் காய்வார்கள்,
சாகேத்ராம் கொல்ல ஒத்திகை பார்க்க பிர்லா ஹவுஸ் செல்கையில் பியர்ஸ் காலண்டரில் 20 ஜனவரி என்ற தேதி இருக்கும், அவர் பொது மன்னிப்பு கேட்க துப்பாக்கியுடன் பிர்லா ஹவுஸ் போகையில் காலண்டரில் 30 ஜனவரி என்று இருக்கும்
இது போல ஒவ்வொரு காட்சியும் கால நிர்ணய நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கும்.
#கமல்ஹாசன், #ஹேராம், #anton_chigurh, #Lewellyn_moss, #heyram,#perfectionist