தினமும் இந்த சட்டவிரோதமான கவுல்பஜார் குப்பைக்காடு வழியாக தான் சென்று மாலையில் கெருகம்பாக்கம் யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து திரும்பி வருவோம்,கெருகம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியே இங்கு தடுப்பு வேலி எழுப்பி 24 மணி நேரம் குப்பை எரிப்பதை செய்கிறது
சாலைத் திருப்பத்தில் பிணம் எரியும் நாற்றம் அடிக்கும், நேற்று கோயில் போக முடியவில்லை, இரவு தந்தி டிவி செய்தி பார்த்தால் பிரபலமில்லாத சினிமா ஃபைனான்ஸியர் ஒருவர் தனக்கு துரோகம் செய்த நெடுநாள் தண்டல் வசூல் செய்யும் ஊழியரை நொளும்பூர் வீட்டில் இரும்பு தடியால் இரவு முழுக்க அலற அலற அடித்துக் கொன்றவர், சவத்தை தன் அல்லக்கைகளிடம் தந்து இங்கே நடுநிசியில் எடுத்து வந்து குப்பையில் கொட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்,
இந்த சட்ட விரோத குப்பைக் கிடங்கின் அருகே ஒரு டஜன் பிணந்தின்னிக் கழுகுகள் ஆற்றுப் பாறையில் அமர்ந்திருக்கும்,சுமார் இருபது நாய்கள் ,இருபது மாடுகள் தத்தம் சைவ அசைவ கழிவுகளை குத்திக் கிளறியபடி இருக்கும்.
இந்த தந்தி டிவி செய்தியை காணொளி இங்கே பார்க்கலாம்.
https://youtu.be/c8qhwU62wqY