மிகவும் நெகிழ்ச்சியான தருணம் , ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ நம்பிக்கை ஒளி தருவது தமிழகம் என்பது நிரூபணமாகியுள்ளது.
நம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சென்னையின் பெருமையாகும், இணைப்பு படத்தில் இருப்பது ப்ளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி அவர்கள், உடன் இருப்பது மாற்று கைகள் தானம் பெற்ற திரு.நாராயணசாமி ஆவார்.
2015 ஆம் ஆட்டு தன் இரண்டு கைகளையும் மின்சார விபத்தில் கருகி பறிகொடுத்த ஏழை கட்டிடத் தொழிலாளி நாராயணசாமிக்கு 2019 ஆம் ஆண்டு , நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக , மூளைச்சாவு அடைந்த வேறு ஒருவரின் இரண்டு கைகளையும் சுமார் 13 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து பொருத்தி உள்ளனர் ப்ளாஸ்டிக் சர்ஜரி துறை சிறப்பு மருத்துவர்கள்,
அத்துடன் நில்லாமல் மாற்று கைகள் பொருத்திய ஒரு வருடம் சிறப்பு கண்காணிப்பு அறையில் அவரை தங்கவைத்து தொடர் சிகிச்சை அளித்துள்ளனர் ஸ்டான்லி மருத்துவர்கள்,
மேலும் அவர் வீட்டில் கழிவறை கூட இல்லாததால் அவருக்கு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் கழிவறையுடன் பசுமைவீடும் கட்டித்தந்து, நோய் தொற்று நேராத வண்ணம் அறைகளுக்கு anti fungal பெயிண்ட் அடித்து தந்துள்ளனர்,
கட்டிட தொழிலாளியாக பணி புரிந்த அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்ட் மேலாளர் வேலை தந்து, மாதம் ஒரு முறை சென்னை சென்று பொருத்திய மாற்று கைகளுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்து வர சிறப்பு அனுமதியும் வழங்கி உள்ளது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்.
அரசு என்பது ஏழைகளுக்கானது என்பதை உணர்த்திய நெகிழ்ச்சியான தருணம் இது.
இது பற்றி வெளியான ஆனந்த விகடன் கட்டுரை
இது பற்றி வெளியான சிறுகதை பாணி கட்டுரை