1947 இந்தியப் பிரிவினையில் கராச்சியில் தன் வீடு , கடை, மனைவி, பெற்றோர், இரு மகள்களை இழந்த லால்வானியை மகாராஜாவுடன் வேட்டைக்குப் போகையில் சாகேத்ராம் ரயில்வே கேட்டில் வைத்து சந்திப்பார், நெடுநாள் நண்பனை ஆரத் தழுவிக்கொண்டு ஒவ்வொருவராக விசாரித்தவர் சின்னது என்று பெயரை யோசித்து ரொமீலா என்று உச்சரித்தது தான் தாமதம்,
ராமை இன்னும் இறுக்கிக் கொண்டு ஐயோ! பேரு கூட நெனப்பிருக்கா,ராம் என கையில் இருக்கும் பணத்தாள்களை நழுவவிட்டுக் கதறுவார் லால்வானி, அவரது பனியனில் இருக்கும் ஓட்டைகள் அவரது வரிய நிலையைப் பறைசாற்றும், அந்த குழந்தை ரொமீலாவை கராச்சி காஸ்ம்பாலிட்டன் க்ளப்பில் வைத்து சாகேத்ராம் கொஞ்சும் காட்சி இது,இது போல பல நம்பகத்தன்மை கொண்ட cross reference படம் முழுக்க இழையோடுகிறது.
பாகிஸ்தான் பிரிவினையின் போது நிறைய சிந்தி மக்கள் ஜுனாகத் (குஜராத்), மகாராஷ்ட்ரா,குவாலியர் மகாராஜாக்களிடம் சரணடைந்து அரண்மனைக் கணக்காளர்களாக வேலையில் சேர்ந்தனராம்,இதில் டேய் சிந்தி என செல்லமாக அழைக்கப்படும் லால்வாணியும் கணக்கர் தான்,இதில் மகாராஜாவிடம் சாகேத்ராம் நண்பன் லால்வானிக்கு வேண்டி பேசி நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவார், மகாராஜாவுக்கு இதற்காக நன்றிக் கடன் பட்ட சாகேத்ராம் மற்றொரு விலை தர வேண்டிய சூழலும் வரும்,
ஹேராம் படத்தில் எத்தனை எத்தனை குழு காட்சிகள் வரும் ,எப்படி லைவ் ரெகார்டிங் தொழிற்நுட்பம் இக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது என்று மிகவும் வியந்துள்ளேன், லைவ் ரெகார்டிங் என்பதால் டப்பிங் பேசுவதற்கு அவசியம் இல்லை, ஃப்ரேமிற்குள் யார் எந்த இடத்தில் நின்று பேசினார்களோ அப்படியே வசனம் பதிவாகும் படி ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம், மக்கள் கும்பலாகத் தோன்றும் காட்சிகளில் சில தெளிவில்லாத இரைச்சல் ஒலிப்பதிவில் வர , அந்த இடங்களில் மட்டும் noise cancelling செய்து விட்டு டப்பிங் செய்யப்பட்டதாம்.
#ஹேராம்,#கமல்ஹாசன்,#heyram,#kamalhaasan,#live_recording
#ரோமீலா,#லால்வானி,#கமல்ஹாசன்,#kamalhaasan, #சிந்தி,#சாகேத்ராம்,#ஹேராம்,#heyram