நம் மனதில் நீங்கா இடம்பெற்ற இந்த முள்ளும் மலரும் விஞ்ச் -ரோப்வே, ரோப்கார் மற்றும் அதன் லொக்கேஷன்கள் ஊட்டியின் சின்காரா பவர் ஹவுஸ் முதல் க்ளென்மார்கன் வரையேயான 3கிமீ தூரமுள்ள ரோப்வே தடத்தில் படமாக்கப்பட்டன என்று படித்தேன்.
ஊட்டியில் வழிகாட்டிகள் இதை முள்ளும் மலரும் விஞ்ச் கோர்ட் என்றே சொல்வார்கள், இந்த பிரதேசத்தை முதன் முதலில் தனது கேமராவில் ஒளிப்பதிவு செய்து திரையில் காண்பித்தவர்கள் இரு மகேந்திரர்கள்.ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, இயக்குனர் பாலு மகேந்திரா.
PS: இதை கெத்தை geddai விஞ்ச் என்றும் பலர் ஆணித்தரமாக விவாதிக்கின்றனர்,
கெத்தைக்கும் க்ளென்மார்கனுக்கும் சாலை மார்க்கமாக 85 கிமீ உள்ளது, இரண்டு வெவ்வேறு மலைப்பகுதிகளில் அமைந்த நீர் மின் நிலையத்திற்கான விஞ்ச்கள்,
இணையத்தில் இரு விதமான கருத்து உள்ளது, இது குறித்து மூத்த சினிமாகாரர்கள் அல்லது உள்ளூர் வாசிகள் தெளிவுபடுத்த கேட்டிருந்தேன், ராஜநாயஹம் சார் இதை கெத்தை என்று இன்று உறுதிப்படுத்தினார்,
அவர் பதிவை படங்களைப் பாருங்கள். அவர் உறுதிப்படுத்தினால் மாற்றுக் கருத்தே கிடையாது
க்ளென்மார்கன் கெத்தை இது இரண்டும் ஒரே போன்ற விஞ்ச் பாதைகள் என்பதால் நேர்ந்த தர்க்க குழப்பம்,அதிக பேர் வாக்களித்த இந்த படப்பிடிப்பு பிரதேசத்தை ஊட்டியின் கெத்தை என்றே உறுதிப்படுத்துகிறேன்.
http://rprajanayahem.blogspot.com/2019/07/blog-post_24.html?m=0
#பாலு_மகேந்திரா,#விஞ்ச்,#கெத்தை, #க்ளென்மார்கன்,#ropeway,#glen_morgan