சாகேத்ராம் தன் கையில் மனைவி அபர்ணா வரைந்த காளி படத்தை அணைத்தபடி அவர்கள் ஜோடியாக சென்ற இடங்களின் வழியே மலரும் நினைவுகளை அசைபோட்டபடி வருகையில் இருட்டி விடும், வழியில் ஒரு மிதவாத போராட்ட குழுவுடன் சேர்ந்து வங்காள ப்ரீமியர் சுஹ்ராவர்தியையும் மகாத்மாவையும் பார்த்து கேள்வி கேட்டு விட்டு வருவார்,
அப்போது சுஹ்ராவர்தியின் ஒப்புதல் வாக்குமூலம், காந்தி அவருடனான இணக்கம் பார்த்து குமட்டிக்கிட்டு வருதா ராம் ? என்று கேட்டபடி ஸ்ரீராம் அப்யங்கர் எதிர்ப்படுவார், மனைவியை இழந்த வலி நிஜமாய் கொண்ட சாகேத்ராம் உம்மென்றிருப்பார்,
அப்யங்கருக்கோ செம குஷி , காந்தியையும் சுஹ்ரவர்தியையும் ஒருவன் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல கேட்டானே?என்று,ஆட்டு மந்தை போல பதிலைக் கேட்டு கலையும் மக்கள் மீது இளக்காரம்,இவை சேர்ந்து புத்திஜீவியும் அடிப்படைவாதியுமான அவருக்கு களிப்பைத் தரும்,இந்து முஸ்லிம் bhai bhai என்ற வழிப்போக்கனின் அவல நகைச்சுவைக்கு சிரித்தவர்,
அவனை கேள்வியால் மடக்கிவிட்டு ,குழப்பிய பின் அருகே நிற்கும் சாகேத் ராமை வயிற்றில் செல்லமாக குத்துவார்,ராம் அதை ரசிக்க மாட்டார், கைக்குப் பின்னால் என்ன என்று விலக்கிப் பார்ப்பார் அப்யங்கர்,அபர்ணா வரைந்தது என்பார் சாகேத்ராம், இயல்புக்கு வந்த அப்யங்கர், அடக்கி வாசித்து ராமின் துயரத்தை உணர்வார்,
இதில் ஆழமான ஒரு குறிப்பு உள்ளது,direct action day போது வேட்டையாடிய பலரில் சாகேத்ராம் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்,ஒரு மிதவாதி , அவரால் பத்து மாதங்கள் கடந்த பின்னும் தன் இயல்புக்கு திரும்ப முடியவில்லை,
அப்யங்கர் மதவாதி,அடிப்படைவாதி, சந்தர்ப்பவாதி, கிடைத்த அத்தருணத்தில் பலப்பல கொலைகளை நிகழ்த்திவிட்டார், தன் சகோதரியை வரிசையாக இருபது பேர் அனுபவித்து கொன்று போட்டனர் என்று சொன்னவர், பத்து மாதத்தில் எந்த வருத்தமோ மனசாட்சி உறுத்தலுமின்றி பேசி சிரித்து களித்திருப்பதை இயக்குனர் கமல் நுணுக்கமாக இதில் சித்தரித்திருந்தார்.
பின்னணியில் kores stationery ( கார்பன் தாள்,ரப்பர் ஸ்டாம்ப் மை ) பொருட்கள் நிறுவன விளம்பரம் பாருங்கள் ,1936 தொடங்கி இன்னும் சந்தையில் உள்ளனர், hand brand பிரிட்டிஷ் போர்ட்லேண்ட் சிமெண்ட் விளம்பரம் பாருங்கள்,பிரிவினைக்குப் பின் வழக்கொழிந்து போனது,சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாட கட்டப்பட்ட கொடிகள், தோரணங்கள் பாருங்கள் ,
ஆகஸ்ட் 14 இவர் கல்யாணம், அங்கிருந்து சொல்லாமல் ஓடிவந்தவர், எப்படி காலநிர்ணய நம்பகத்தன்மையை கொண்டு வந்துள்ளார்?இயக்குனர்
gone with the wind (1939) சினிமா போஸ்டர் பாருங்கள்,ஒரு பெங்காலி படத்தின் போஸ்டர் பாருங்கள், பெயர் தெரியவில்லை , கலவரத்தில் எரிக்கப்பட்டு கைவிடப்பட்ட கார் ஓரத்தில் நிற்கும்,
இப்படி பின்னி மில்லை அதன் வரலாற்றில் இத்தனை ஆக்கபூர்வமான ஒரு கடந்தகால படத்திற்கு பயன்படுத்தியது இயக்குனர் கமல்ஹாசன் மட்டுமே, அது தான் இருபது வருடங்கள் கழித்தும் இப்படைப்பை விவாதிக்க வைக்கிறது.
#ஹேராம்,#heyram, #kamalhaasan, #கமல்ஹாசன்,#அதுல்குல்கர்ணி,#பின்னிமில்,#binnymill