மூணாம்பக்கம் ( மூன்றாம் நாள்) இயக்குனர் பத்மராஜனின் கிரீடத்தில் வைரக்கல், இப்படத்தை முன்பு விக்கி இல்லா காலத்தில் மொழி தெரியாமல் ஏசியாநெட்டில் பார்த்து விட்டு பேரன் பாச்சு என்ற பாஸ்கிக்காகவும் தாத்தா அப்பூப்பனுக்காகவும் இரு தினங்கள் வரை அழுததுண்டு, படத்தின் பெயர் கூட மறந்திருப்பேன், ஆனால் அக்கதாபாத்திரங்கள் மறக்காது
இப்போது பாப்பேட்டாவின் படைப்புகளை மொழி தெரிந்து திரும்பவும் ரசித்துப் பார்க்கையில் ஆனந்தமும் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமான உணர்வுகளுக்குள் ஏகாந்தமாய் பயணிக்க வைக்கிறது
இந்த கன்னியாகுமரி அருகே இருக்கும் வட்டக்கோட்டை கடல் தான் பாச்சுவை பறித்துக் கொண்டு மூன்றாம் நாள் கரை ஒதுக்கியது,
இதே கடலில் தான் அப்பூப்பன் தன் பேரனுக்கு பிண்டம் தரச் சென்றவர் தன் உயிரை மாய்த்து அந்த கொலைகாரக் கடலை பழி தீர்த்தார்
இசைஞானி இப்படத்துக்கு உயிரோட்டமான பின்னணி இசையை நல்கினார், அவரின் உணருமீ கானம் மற்றும் தாமரக்கிளி பாடும் என்ற இரு அற்புதமான பாடல்கள் வட்டக்கோட்டை ரஸ்தாவில் இன்னும் எதிரொலித்துககொண்டிருக்கக்கூடும்
#மூணாம்பக்கம்,#அப்பூப்பன்,#திலகன்,#தம்பி,#பாச்சு,#பப்பேட்டா,#இசைஞானி,#பத்மராஜன்