மைதிலியின் வீட்டுக்கு பெண் பார்க்க சாகேத் ராம் வருகையில் கேமரா ஃப்ரேமிற்குள் எத்தனை Details பாருங்கள்,ஏற்கனவே நண்பர்கள் பலர் இது பற்றி அருமையாக எழுதி விட்டனர்.
ஜோதிடர் சாரி நல்ல நேரம் முடிய ஐந்து நொடிகள் தான் உள்ளது என்று சென்னையில் இருந்து மன்னார்குடி அக்ரஹாரத்திற்கு வந்தவர்களை அவசரமாக வரவேற்கிறார், அங்கே வராந்தாவில் மைதிலியின் லேடீஸ் சைக்கிள் நிற்பதைப் பாருங்கள்,
மைதிலி ஒருசமயம் சாகேத்ராமிடம் எதிர்த்துப் பேசுவார், நான் சின்னப் பெண் இல்லை,நாம் பண்ணிண்டது பால்ய விவாகம் இல்லை என்று,
ஒரு கடிதத்தில் மைதிலி நீ புத்திசாலி என்பார் சாகேத்ராம், ஐம்பதுகளில் சைக்கிள் பழக விட்டு கைகால் உடைந்தால் திருமணத்திற்கு தடை வரும் என்று நிறைய பெற்றோர் பழகித்தர மாட்டார்கள்,வீட்டுப் பெண்களுக்கு சைக்கிள் வாங்கித்தர மாட்டார்கள்,
இங்கே உப்பிலி ஐயங்கார் , அம்புஜம் மாமி வித்தியாசமானவர்கள் தம் பெண்ணைப் படிக்க வைத்துள்ளனர், உப்பிலி ஐயங்காரின் கார் வெளியே நிற்கும், அவர் வீட்டில் பழங்கால டெலிபோன் சுவற்றில் தொங்கும்,
மைதிலி கையால் காபி போட்டிருக்கிறாள் , எனவே அவளுக்கு சமையல் தெரியும், மைதிலி காந்தியின் சுயசரிதையை விரும்பிப் படித்திருக்கிறாள், அவளுக்கு சைக்கிளும் ஓட்டவும் தெரிகிறது, தன் தாத்தா பெயர் T.V.R பெயரை எம்ப்ராய்டரி போடத் தெரிகிறது, எனவே பெரியவர்களிடம் மரியாதையானவள்,
கிருஷ்ணர் எம்ப்ராய்டரி போட்டிருக்கிறாள் , எனவே கிருஷ்ண பக்தியுள்ளவள்,
ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று எம்ப்ராய்டரி போட்டிருக்கிறாள், எனவே மிகுந்த ரசனையுள்ளவள், கனவுகளுள்ளவள்,
தம்புரு மீட்டி வைஷ்ணவ ஜனதோ பாடுகிறாள், இசையார்வம் கொண்டவள்,நல்ல சாரீரம் கொண்டவள்,உச்சஸ்தாயி எடுத்தும் லாவகமாக பிசிரின்றி தன் குரலை சரி செய்கிறாள், எனவே புத்திசாலி ,
பாடலை இடையில் நிறுத்தி சாகேத்ராமை கண்கொட்டாமல் பார்க்கிறாள்,அபர்னா போலவே மைதிலியும் நல்ல தைர்யசாலி , சாகேத்ராமும் கண் கொட்டாமல் மைதிலியைப் பார்க்கிறார்.
இதில் பப்ஃபுன் போன்ற வையாபுரி கதாபாத்திரம் முக்கியமானது, சென்னையில் இருந்து அக்ரஹாரத்திற்கு தன் நண்பன் பெண் பார்க்க வந்துள்ளான் என்று மிகவும் இயல்பாக சாகேத்ராமனை நலம் விசாரிப்பார்,என்னடா? தாடியும் மீசையுமா? பாஷ்யம் மாமா போலவே? நல்லவேளை அவரை மாதிரி கல்யாணம் பண்ணிக்காமல் ,ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துண்டயே! என்று துடுக்காக கேட்பார்,
யாரும் அதை ரசிக்க மாட்டார்கள், வசந்தா அக்காவிடம் மாமா வர்லயா? எனக் கேட்டுக் கொண்டே அவர் டீ டேபிளில் வைத்த வாழையிலையில் மடித்த மல்லிகைச் சரத்தை எடுத்து (குரங்கு சேஷ்டை ) முகரப் போவார், அதை வசந்தாக்கா வெடுக்கென பிடுங்குவார்.
வைஷ்ணவ ஜனதோ பாடலில் pause ன் போது இவர், அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள் என wit அடித்து சூழ்நிலை இறுக்கத்தை தளர்த்தி,சற்று முன் இவரை வைத எல்லோரையும் சிரிக்க வைப்பார்,பின்னணியில் ஜோதிடர் சாரியின் சிரிப்புக் குரல் கேட்கும் "வேதா நீ சரியான buffoon டா "ஹாஹஹ என்று
மாப்பிள்ளைப் பெண்ணை போட்டோ எடுக்கையில் வேதா அவர்களை மறித்து நின்று போட்டோவுக்கு போஸ் தருவார்.
முக்கியமாக முதலிரவு அறைக்குள் வரும் மைதிலி பால் கொண்டு வர மாட்டார்,வெளியில் கதவை அடைப்பார்கள், மைதிலி மடியில் மட்டைத் தேங்காயும் வெற்றிலைப்பாக்கு பழமும் கட்டிக் கொண்டு வந்தவர் அவற்றை முதலில் மேசையில் அவிழ்த்து வைப்பார், மங்களத்தின் அறிகுறி, வடகலை ஐயங்கார் சம்பிரதாயம்,
இந்த அக்ரஹார வீடு, திருமணம் நடக்கும், திருமண மண்டபம்,உணவுப் பந்தல் ,காரில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் எல்லாமே மயிலை மாதவப்பெருமாள் கோவிலும் அதன்
சுற்றுப்புறமும் தான்
#ஹேராம், #திரு,#கமல்ஹாசன், #மயிலை, #heyram, #kamalhaasan,#வையாபுரி