தினமும் குளியல் என்பது சுகானுபவம், தலைக்கு சேர்த்து குளிப்பதே குளியல் ஆகும், சந்திரிகா சோப்பு நல்ல தரமான மணமான சோப் எனக்கு மிகவும் பிடித்தமானது, நீண்ட நாட்களாக இதன் உறை வடிவம் மாறவே இல்லை,80 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது. அமீரகத்தில் கிடைக்கும் export quality இன்னும் தரமாக இருக்கும், சோப் அப்படி நுரைக்கும்,கரையும், எனவே இதை சிகைக்கு பயன்படுத்தியும் வந்தனர், விளம்பரமும் அப்படி வந்ததைப் பாருங்கள்.
1980 களில் நுகர்ந்த அதே மணம் இன்னும் கமழ்கிறது,old cinthol classic போன்றே புராதானத்தை மதிக்கும் ஒரு சோப்.சந்திரிகா அல்லது சந்த்ரிகே என்ற சொல் மலையாளத்தில் மிகவும் பிரபலம் , பிறை நிலவு இலச்சினை மீது CRK என எழுதியிருக்கும், செவ்வக வடிவ சோப்பு அழகாக பட்டர் பேப்பர் சுற்றி வரும், அந்நாளில் சாவி அச்சு எடுக்க திருடர்கள் இந்த சோப்பை தான் பிரத்யேகமாக வாங்குவர் என்பது உபசெய்தி.
முன்னர் கேரளத்தின் இரிஜ்ஞாலகுடா என்ற ஊரில் இருந்து தயாரானது இப்போது பெங்களூரின் கச்சரஹனஹள்ளியில் இருந்து தயாராகி வருகிறது.
சந்திரிகா சோப் SV தயாரிப்பு நிறுவனத்தாரால் பெங்களூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்ட மூலிகை சோப் பிராண்ட் .
இந்த நிறுவனம் 1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சி.ஆர். கேசவன் வைத்தியரால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு இருந்தாலும், இப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்திற்குச் சொந்தமாகிவிட்டது,
சமீபத்தில் இதன் உறை வடிவம் என மாற்றி சந்தைப்படுத்துவதை அறிந்தேன், ஆனால் அதே மணம் இன்னும் உள்ளது.
சந்திரிகா சோப்பில் தேங்காய் எண்ணெய், காஸ்டிக் சோடா, காட்டு இஞ்சி, எலுமிச்சை தோல் எண்ணெய், மரவெட்டி என்ற குஷ்டவைரி எண்ணெய் (Hydnocarpus) , ஆரஞ்சு எண்ணெய் மற்றும் சந்தன எண்ணெய் என மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.
இன்று 75 கிராம் சோப் விலை 30₹ , body wash எல்லாம் அத்தனை நன்றாக உள்ளது, இணைப்பு படங்களில் சந்திரிகா சோப் கடந்து வந்த பாதையைப் பாருங்கள்..