வீட்டின் தலைவன் தருதலையாகவோ குடிகாரனாகவோ மாறினால்,
வீட்டின் வயது வந்த பிள்ளைகள் கேட்பார் மேய்பாரின்றி போனால் , நன்கு வாழ்ந்த குடும்பம் நசியத் துவங்கினால் அவ்வீட்டின் தட்டு முட்டு சமையல் பாத்திரங்கள், வெங்கலப் பானைகள், எவர்சில்வர் அடுக்கு , பித்தளை பூஜை சாமான்கள் சாமி படங்களின் கண்ணாடிகள் , தகரங்கள் , சீலிங் ஃபேன்கள் ஃபர்னீசர் , கேஸ் அடுப்பு ,சிலிண்டர்,பாட புத்தகம் , ரேஷன் அட்டை என ஒவ்வொன்றாக காயலான் கடைக்கு வரும்,
இவற்றை எல்லாம் சொற்ப விலைக்கு விற்று ஒரே நாளில் தின்று அழித்து விட முடியும், ஆனால் அந்த பொருட்கள் ஒவ்வொன்றும் அந்த வீட்டின் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை,பார்த்து பார்த்து வாங்கியவை, அவ்வீட்டின் கௌரவத்தை பறைசாற்றுபவை, அன்று தரமாக வாங்கிய அந்த பொருட்களை இன்று அதே தரத்தில் அதே பழைய விலையில் வாங்கிடவே முடியாது,
இதே நிலை தான் நாட்டிற்கும், கோமாளி ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் தனியாரிடம் சடுதியில் விற்று காசாக்கிடலாம், ஆனால் அந்த ஒரு ஒரு துறையையும் ஒவ்வொரு செங்கலாக உருவாக்க இன்னும் நூறு வருடங்கள் பிடிக்கும்,
விவசாயி விதைநெல்லை விற்று சாப்பிடுவது போன்ற பேரவலம் இது.
தேர்தல் நிதிக்கு பெரிய தொகையை பெருநிறுவனங்களிடமிருந்து பெறவேண்டி இருப்பதால் எரியும் வீட்டில் எதைப் பிடுங்கினாலும் லாபம் என்பதன் பேராசையின் வெளிப்பாடு தான் இப்படி உள்ளது உள்ளபடிக்கு விற்பனை என்ற அறிவிப்பு.
#காயலாங்கடை,#பேரீச்சம்பழம்,#ஈயம்_பித்தாளை,#விதைநெல்,#வாழ்ந்து_கெடுதல்,#நசிந்த_வாழ்வு,#பொது_துறை