1947 earth ( 1998 )படத்தில் வரும் பல பிரிவினைத் துயர் காட்சிகளில் இதுவும் ஒன்று, தேசப்பிரிவினையின் போது லட்சக்கணக்கானோரின் துயரத்தை இயல்பாக இந்த தலைமுறைக்குச் சொன்ன திரைப்படம் இது,இயக்குனர் தீபாமேத்தா சிறந்த பகுத்தறிவாதி, காணும் அனைத்தையும் கேள்வி கேட்பவர்,
பிரிவினை அறிவிக்கப்பட்டவுடன் அது வரை ஒண்ணும் மண்ணுமாய் பழகிய ஒரு தாய் மக்களிடம் மதம் ஏற்படுத்திய பிளவை பொட்டில் அடித்தாற்போல கேள்வி கேட்டவர்,
தம் படைப்புகளில் மதம், கலாச்சாரம் மீதான தொடர் விமர்சனங்களால் இந்தியாவிற்குள் வாழ அச்சுருத்தப்பட்டவர், தொடர்ந்து பெண்ணுரிமை , சமத்துவம் ,நடுநிலை போன்ற உன்னதமான தளங்களில் இயங்குபவர், இன்று நம் நாடு சகிப்புத்தன்மை குறைந்து மததுவேஷ கலவரங்களில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கையில் கடந்தங்கால தவறுகளிலிருந்து பாடம் படிப்பதும் அவற்றை அசைபோடுவதும் அவசியமாகிறது.
காட்சி 1
பணக்கார பார்சி வீட்டுச் சிறுமி லென்னி , தன் வீட்டுக்குப் பின்னால் காலி இடத்தில் கோலி விளையாடும் முஸ்லிம் சிறுவனை அருகே கூப்பிட்டவள்,கேட்கிறாள்
உன் அம்மாவை? Rape செய்தனரா?
இந்துக்கள் எங்கள் கிராமத்தை சுற்றி வளைக்கையில் எல்லோரையும் கொன்று விட்டனர்.
நான் பிரேதங்களுக்கு அடியில் ஒளிந்து கொண்டதால் தப்பினேன்.
உன் அம்மாவையும் கொன்றனரா?
ஆமாம்.
நீங்கள் இந்துக்களா?
இல்லை, பார்ஸிக்கள்.
நாம் கோலி விளையாடலாமா?
இந்துக்கள் கலைந்து போன பின் என் அம்மாவைத் தேடிப் போனேன்.
என் அம்மா மசூதியில் இருந்தாள்.
அவள். தலை முடியை மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டிருந்தனர்.
அவள் உடம்பில் ஒட்டுத்துணியில்லை.
சிறுமி லென்னிக்கு மேலும் கேட்க முடியவில்லை
இன்று என் பிறந்தநாள்.
உனக்கு கேக் வேண்டுமா?
கேக்கா? அப்படி என்றால் என்ன?!!!
காட்சி இருண்டு முடிகிறது
காட்சி 2 இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10158261835186340&id=750161339
#1947earth,#deepamehta,#சகிப்புத்தன்மை,#தேசப்பிரிவினை,#லென்னி,#பார்ஸி