மலையாளத்தில் தலயண மந்திரம் திரைப்படத்தில் கார் வாங்க நச்சரிக்கும் மனைவி ஊர்வசியை திருப்திப்படுத்த இருபதாயிரம் ரூபாய்க்கு சிகப்பு வண்ண ஸ்டாண்டர்ட் gazel 1972 ஆம் ஆண்டு மாடல் காரை வாங்கி விடுவார் சீனிவாசன்,
ஊரே அந்த வழியில் இடைக்கிடையில் நின்றுவிடும் கார் கண்டு சிரிக்கும்,குடும்பமே அந்த காரை மாற்றி மாற்றித் தள்ளும்.
இந்த டப்பா கார் வாங்கித் தந்த மேஸ்திரி மாமுகோயாவேஅந்த ஸ்டாண்டர்ட் gazel காரில் சிவில் சூபர்வைசர் சீனிவாசனுக்கு கார் ஓட்ட சொல்லித் தருவார்,
சீனிவாசனின் மோசமான டிரைவிங்கால் நொந்தவர் அப்படி தோன்றியபடி தெறி விளிப்பார்,
இதனால் கோபமும் அவமானமுமுற்ற சீனிவாசன், திரும்பத் திரும்ப "ஞான் போலிடெக்னிக் படித்தவனா" , "எந்த்ரங்களின்ட ப்ரவர்த்தன ரீதி ஒண்ணும் தான் எனிக்கி படிப்பிக்கண்டா" என்பார்,
ரகளையான நகைச்சுவை அது, சிரித்து சாவோம்.
சீனிவாசன் அந்த காரில் தோன்றியபடி கியர் இடுவார்,
வளையம் ஒடிப்பார்,க்ளட்சை குனிந்து காலுக்கு கீழ் தேடுவார், ப்ரேக்கிற்கு ஆக்ஸிலேட்ரை மிதிப்பார்,கார் வேகமெடுக்கும், ப்ரேக் தட்டுப்படவே படாது.
அப்படி ஒரு வீட்டின் சுவரை மோதி உடைத்தும் விடுவார் சீனிவாசன், ஆக காரும் போய், இவர் காலும் உடைந்து, அந்த வீட்டு சுவரையும் கட்டித் தருவது போல ஆகிவிடும், இப்படத்தில் ஸ்டாண்டர்ட் காரை அப்படி கிண்டல் செய்திருப்பார்கள்.
இயக்குனர் சத்யன் அந்திக்காட் படைப்புகளில் மிகவும் பிடித்த படம் இது.
மலையாளம் நடிகர் மாமுகோயா தமிழில் அரங்கேற்றவேளை திரைப்படத்தில் பணக்காரர் ஜெய்கணேஷ் வீட்டு வேலைக்காரராக நடித்தார், ஆனால் அவரின் அந்த குரல் நீக்கப்பட்டு,யாரோ குரல் தரவே எடுக்கவில்லை.
இதே போன்றே அப்பு மலையாள படத்தில் நெடுமுடிவேணு டிரைவிங் ஸ்கூல் நடத்தும் திருமேனி, மோகன்லாலுக்கு பழைய ஃபியட் 1100 மாடல் காரில் கார் ஓட்ட படிப்பிப்பார் , மோகன்லால் காரை ஏரியில் கொண்டு போய் தள்ளி, திருமேனியை ஏரியில் கவிழ்த்தும் விடுவார்.
#சீனிவாசன்,#மாமுக்கோயா,#ஊர்வசி,#சத்யன்_அந்திக்காட்