ஹேராம் படத்தில் மைதிலிக்கு சாகேத்ராமும், சாகேத்ராமிற்கு மைதிலியும் அளிக்கும் Peace offering என்ற சமாதான பரிசு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
அதில் ஒரு சுவையான Detail , இவர் மைதிலிக்கு தரும் கல்கத்தா காளிக்கு முன்பக்கம் shot வைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் திரு, ஆனால் மைதிலி தான் வரைந்த ஆண்டாளை இவருக்குத் தருகையில் பின்பக்கம் மட்டும் பார்ப்போம், அதை இயல்பாக ஒருவரிடம் தருவது போலவே காண்பித்ததால் அங்கே கேமரா கோணத்தை மாற்றவில்லை.
கடைசிக் காட்சியில் சவமரியாதைக்கு வந்த துஷார் காந்தியை சாகேத் ராமின் பேரன் தாத்தா அறைக்குள் கூட்டிச் சென்று மர பீரோவைத் திறப்பார் , அங்கே ஃப்ரேம் போட்ட ஆண்டாள் மற்றும் காளி படங்கள் இருக்கும்,
அதில் அபர்ணா வரைந்த காளி நேராக இருக்கும், மைதிலி வரைந்த ஆண்டாள் திரும்பியிருக்கும், இதை எப்படி வேண்டுமானாலும் ஒருவர் உருவகப் படுத்திக் கொள்ளலாம்.
சாகேத்ராமால் அபர்ணா அளவுக்கு மைதிலியை ஏற்க முடியவில்லை, இருந்தும் சகியாக ஏற்றுக் கொண்டார் என உணர்த்தியது.
#ஹேராம், #சமாதான_பரிசு, #கமல்ஹாசன்,#kamalhaasan, #ஆண்டாள்,#காளி,#peace_offering