தமிழகத்தில் இந்த ஆண்டில் 72 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி என்று படித்தேன் , எங்கள் பம்மலில் புதிதாக பல அரிசிக்கடைகள் வந்து விட்டன,இன்று காலை அரிசி சிப்பத்தை பிரித்து டப்பாவில் கொட்டினால் அதில் எவர்சில்வர் குழம்பு கரண்டி இனாமாக இருந்தது,Raj Sekar சார் அரிசி வாங்குகையில் உள்ளே எவர்சில்வர் தட்டு இனாம் இருந்துள்ளது.
90 களில் 5 லிட்டர் வார்னிஷ் கேன், sealer டின் வாங்கினால்
6 ஐந்து ரூபாய் வில்லை அதற்குள் இருக்கும், அதை பெயின்டர்கள் முதலில் எடுத்து விடுவார்கள், குமார் ப்ராண்ட் பிரஷ் வாங்கினால் 2 ஐந்து ரூபாய் வில்லை இருக்கும், அமர் பிரஷ்ஷிற்கு போட்டி அது, சைட் சூபர்வைசருக்கு இவற்றை வாங்கித் தருவதுடன் கடமை தீர்ந்தது
#இலவசம்,#கொசுறு, #freebee,#அரிசி_சிப்பம்,#பெயிண்ட், #வார்னிஷ்,#இனாம்