சிங்கம் 3 படத்துக்கு எப்படி யு கொடுத்தனர்? நிறைய பேர் குழந்தைகளுடன் வந்திருந்தனர், படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல நிறைய
வக்கிரம் ததும்பும் காட்சிகள் உள்ளன,
வில்லனை பேட்டி காணப்போகும் ஸ்ருதியை போலீஸின் உளவாளி என அறிந்த வில்லன், அவளின் உடையைக் கிழித்து அவன் அல்லக்கைகளுக்கு அவளை ரேப் செய்யுங்கள் என ஆணையிடுகிறான், மீடியா ஆள் என்று அவர்கள் ரேப் செய்யத் தயங்க ஸருதிக்கு கோகெய்ன் ஃபுல் டோஸ் ஏற்றி ஆம்புலன்ஸில் கடத்துகின்றனர்.
இன்னொரு காட்சியில் சுங்க இலாகா அதிகாரியிடம் ஆபத்தான கண்டெய்னர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பம் வாங்க, அவர் மனைவியின் மார்பில் கணவன் , குழந்தை முன்னிலையில் அல்லக்கைகள் இறங்குகின்றன, அதுவரை வேடிக்கைப் பார்த்து விட்டு போலீஸ் சூர்யா அங்கே அவர்களை அடித்துத் துவைக்கிறார்.
மேலும் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி வில்லனால் அடித்து துவைக்கப்பட்டு முகம் உடைக்கப்பட்டு கந்தல் கந்தலாகிறார்,
மருத்துவமனையில் என்னாயிற்று எனக் கேட்டால் முதல் மாடியில் இருந்து விழுந்தேன் என சொல் என்று ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்புகிறான் வில்லன்.
இயக்குனர் ஹரி இத்தனை வக்கிரமாக இறங்கி இப்போது தான் பார்க்கிறேன், அடுத்த முறை சிங்கம்4ற்கு நேர்மையாக ஏ சர்டிபிகேட் வாங்கி விடுங்கள், வெளிநாட்டு திரையரங்குகளிலேனும் நிச்சயம் குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
படம் விறுவெனக் கடந்ததில் தலை வலி வந்துவிட்டது, சத்தமும் மிக மிக அதிகம், ஃப்ரேமும் அதிகம்.கண், செவிக்கு சரியான வேலை, பிபி உள்ளவர்கள் போகாதீர்கள்.