ஹேராம் படத்தில் சாகேத்ராம் தன் காசி சந்நியாசத்திற்கு பிறகு பைரவ் என்று நாமதேயம் சூட்டிக் கொள்வார், கால(ன்)பைரவ் =எம பைரவர்,
இப்படி முறுக்கி விட்ட மீசையை ஆங்கிலத்தில் handle bar மீசை என்றே சொல்கின்றனர், ஒரு காட்சியில் மைதிலி அம்மாவிடம் போனில்,சாரி மாமா ஜோஸ்யம் பலித்துவிட்டது, கோபித்துக் கொண்டு போய் திரும்பி வந்த கணவர் handle bar மீசை வைத்துக் கொண்டு பாரதியார் போல இருக்கிறார்மா என்பார்.
அந்த handle bar மீசைக்கு படத்தின் டைட்டில் லோகோவான வில்லில் பூட்டப்பட்ட அம்பிற்கு உள்ள connection பாருங்கள் ,
டிசைனர் அலுவலகங்களில் mood board என்று செய்வார்கள், இன்ன மாதிரி பாணியில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் (signature ) எதையேனும் வடிவமைக்கப் போகிறோம் என்றால் அதை ஒத்த மாதிரிகளை கூட்டாக சேகரித்து collage போல பலகையில் ஒட்டி வார்ப்பார்கள், பின்னர் அந்த theme ஐ வாடிக்கையாளர்/ பார்வையாளர் எளிதில் உள்வாங்க முடியும்.
ஹேராமில் பைரவ் தொடர்புடைய எல்லா வடிவங்களும் அழகாய் ஒருங்கிணைக்கப்பட்டு கைகூடி வந்திருக்கிறது பாருங்கள்
#ஹேராம், #heyram, #கமல்ஹாசன், #kamalhaasan,#bhairav