ஹேராம் படத்தில் சாகேத்ராமின் சென்னை வீட்டில் இரண்டு கார்கள் உண்டு, ஒன்று சாகேத்ராமின் personal காரான Citroen traction avant இது பிரெஞ்சு கார் right hand drive மாடல் இங்கிலாந்தில் தயாரானது, மற்றொன்று , Jaguar mark V இதுவும் இங்கிலாந்தில் தயாரானது இது வீட்டு கேரேஜில் நிற்பதைப் பாருங்கள்,
நாம் இதிலிருந்தே சாகேத்ராம் எத்தனை வசதி படைத்தவர் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்,
மகாராஷ்ட்ரா கோலாப்பூருக்கு மகாராஜாவைப் பார்க்க சாகேத்ராம் மைதிலியுடன் கிளம்பிப் போகும் காட்சி தத்ரூபமானது, அதில் மாமியார் அம்புஜம் ரயில் பிரயாணத்தில் சாப்பிட பித்தளை உணவு கேரியர் கொண்டு வருவார் , வழியில் படிக்க கல்கி பத்திரிக்கை பெண்ணுக்குத் தர வைத்திருப்பார்,
ஆனால் சாகேத்ராமோ எக்மோரிலிருந்தா? சென்ட்ரலிலிருந்தா? எனக் கேள்வி கேட்ட பாஷ்யம் மாமாவுக்கு பிடி எதுவும் கொடுக்காமல் ஏரோப்ளேனில் மனைவியைக் கூட்டிக் கொண்டு பறப்பார், வீர் சாவர்கர் எழுதியதாக அப்யங்கர் தந்த அட்டை போட்ட புத்தகத்தைப் படிப்பார்,அவர்களது சித்தாந்தத்தில் உந்தப்பட்டவர் இவராக அவரின் வேறொரு புத்தகத்தையும் வாங்கியிருப்பார்,அதற்கும் அட்டை போட்டிருப்பார்,அதை மைதிலிக்கு படிக்கத் தருவார், மைதிலி அதை மறுதலிப்பார்.
மஹாராஷ்ட்ரா கோலாப்பூர் விமான நிலையத்தில் இவர்களை அப்யங்கர் வரவேற்கையில் மைதிலி கையில் அம்மா தந்த கல்கி பத்திரிக்கை இருப்பதைப் பாருங்கள், இதைத் தான் சினிமாவில் continuity பார்ப்பது என்பார்கள், பாலபாடம் அது, ஒரு காட்சிக்கு நம்பகத் தன்மை அளிப்பது.
அங்கே, அப்யங்கர் baggage collection ல் இருந்து, வெளியே போர்டிகோவில் நின்றிருந்த பெரிய காருக்கு அழைத்துப் போவார், இருட்டியிருக்கும், அந்த தகதகக்கும் காரைப் பார்த்தவுடன் சாகேத்ராம் கேட்கும் கேள்வி,இந்த காரிலா?!! மைதிலியோ nice car என்பார், அப்யங்கர் , ஆமாம் மகாராஜா உனக்காக அவர் காரை பிரத்யேகமாக அனுப்பி வைத்துள்ளார் என்பார், அந்த கார் Fiat 502 Torpedo Luxury 1923 , landaulette மாடல், அப்போதைய மகாராஜாக்களின் தேர்வு (அமெரிக்காவில் தயாரானது),
மேலும் காலையில் சென்னையில் ஏறி மாலையில் கோலாப்பூரில் இரவில் இறங்கியிருப்பார்கள்,விமானம் இறங்குகையில் கீழே panhala மலைக்கோட்டையின் சுற்றுச்சுவர் மற்றும் சிதிலங்கள் தெரிவதைப் பாருங்கள், விமானத்தில் கோலாப்பூர் செல்கையில் இன்றும் அதை நீங்கள் பார்க்கலாம்,கோலாப்பூரில் கதக் நடனமேதை குல்கர்னியிடம் கமல்ஹாசன் 70 களில் இரண்டு வருடங்கள் சென்று தங்கி கதக் நடனம் பயின்றுள்ளார், அந்த நிலப்பரப்பு கமல்ஹாசனுக்கு அத்துப்படி என்பது இதில் வெளிப்பட்டுள்ளது.
அந்த விமான நிலையம் முகப்பு கூட நிஜ விமான நிலையத்தின் முகப்புடன் ஒத்துப் போவதை கவனியுங்கள், இத்தனை மிகுந்த details வைத்து செலவுகள் செய்து விட்டு அதை இரவுக் காட்சியாக ஏன் எடுக்கவேண்டும்? ,பகலில் எடுத்தால் நன்றாக மனதில் பதியுமே,என்ற வழமையான compromise எதுவும் கிடையாது படம் முழுக்க காலை மாலை இரவு என நம்பகத்தன்மை இருக்கும்.
இக்கார்களை எல்லாம் சென்னை, கோவை, பெங்களூர் என ஒவ்வொரு vintage car collector களிடமிருந்தும் அரும்பாடுபட்டு சேகரித்துக் கொண்டு வந்து பின்னி மில் வளாகத்தில் அமைக்கப்பட்ட வெவ்வேறு செட்களுக்கு வெளியில் நிறுத்தப்பட்டு படமாக்கப்பட்டது,
இந்த கோலாப்பூர் விமான நிலையத்தின் வெளியே மட்டும் எத்தனை vintage கார்கள் நின்றிருக்கின்றன? பாருங்கள்,
முதலில் இயக்குனர் கமல்ஹாசனுக்கு பின்னி மில்லில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, கலைஞர் கருணாநிதி எதேச்சையாக கமல்ஹாசனைத் தொடர்பு கொண்டவர்,உங்கள் ஹேராம் படம் என்ன அளவில் உள்ளது? முன்பு என்னிடம் புதிதாக எது செய்தாலும் ஆர்வமாக காட்டுவீர்கள், இப்போது காட்டுவதில்லையே? , எங்கே படப்பிடிப்பு வைத்து நடத்துகிறீர்கள்? எனக் கேட்க, விஷயத்தைச் சொல்கிறார் இயக்குனர், மறுநாள் பின்னி மில்லின் சேர்மன் திரு.எத்திராஜ் முதலியாரே இயக்குனரை அழைத்தவர்,என்ன பெரிய அளவில் சென்று விட்டீர்களே?, நமக்குள்ளே பேசியிருக்கலாமே என சொல்லி, படப்பிடிப்பு நடத்த பின்னி மில்லைத் தந்து அதற்கு வாடகையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்,
இது எத்தனை பெரிய உதவி பாருங்கள்?அந்த கிடைக்கதற்கரிய மாணிக்கத்தை மதிப்பு தெரிந்து படத்தில் பயன்படுத்தினார் இயக்குனர், படத்தில் நாம் பார்க்கும் Dacota- Douglas C-47 Skytrain விமானத்தின் உள்புறத் தோற்றம் கூட பின்னி மில் செட் தான் , அந்த விமானத்தின் வெளிப்புறத் தோற்றம் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் இயங்கி வந்த அனிமேஷன் நிறுவனமான மந்த்ரா டிஜிட்டல் செய்த பணி, இன்று அந்த முன்னோடியான அனிமேஷன் நிறுவனம் வியாபார உலகில் இல்லை.
PS:சமீபத்தில் க்ரேசி மோகனுடன் ஒரு ஜாலி பேட்டியில் 80 களின் சம்பவம் ஒன்று சொன்னார் கமல்ஹாசன், ஊட்டியில் சக கலைஞர் ஒருவர் எட்டு மசால்வடை தின்று விட்டு உப்பிசமாகி வயிறு வலிக்கிறது என்று சொல்ல இவர் இரு என்று நாடி பிடித்து,இசிஜி எடுத்து,அதை ஊன்றிப் படிப்பது போல பாவங்கள் காட்டி,உச்சு கொட்டி, பெரிதாக ஊதிப் பெருக்கி,சான்ஸ் கேட்டிருந்த ரிசப்ஷனிஸ்டையும் அங்கே டாக்டராக நடிக்க வைத்து அது மாரடைப்போ என்று சீரியசாக முகம் வைத்து கலாட்டாக்கள் செய்ய, அவரோ வியர்த்து பயந்து போய் ஊட்டியில் இருந்து சென்னை போக கார் எதுவும் கிடைக்காத நிலையில் நடிகர் / தயாரிப்பாளர் பாலாஜியின் Citroen வகைக் காரில் போய் ஏறிக் கொண்டு ஊருக்கு விரைந்து போகச் சொல்ல, உனக்கு புரொட்யூசரின் Citroen காரே தான் வேண்டுமா? என உண்மையைச் சொல்லி கலாய்த்தாராம் ,இந்த Citroen கார் அவருக்கு அத்தனைப் பிடித்ததால் தான் ஹேராமில் அது personal கார்.
#ஹேராம், #பின்னி_மில்,#கலைஞர்,#கமல்ஹாசன்,#kamalhaasan,#சாபுசிரில்,#ஹேமமாலினி,#சாகேத்ராம்,#மைதிலி,#மந்த்ரா,#citroen,#jaguar,#ford502