இன்று மாலை திருநீர்மலை திவ்யதேசம் போயிருந்தேன், வீட்டில் இருந்து ஐந்து கிமீ தான், வழக்கம் போல ஐந்து பெருமாளையும் கண்குளிர சேவித்தேன், படியேறுகையில் கவனித்தேன் ,கல்கி மண்டபத்தை ஒட்டிய எட்டு படிகளை 1930களில் லிஃப்கோ பதிப்பகத்தார் உபயம் செய்துள்ளர், கல்கி மண்டபம் எம்.எஸ்.அம்மாவை ,கல்கி சதாசிவம் அவர்கள் இங்கே மணமுடிக்கையில் அதன் நினைவாக எழுப்பியது,எட்டு குதிரை வீரர்கள் நான்கு தூண்களிலும் வீற்றிருப்பார்கள்.
இங்கே தல விருட்சம் வெட்பாலை மரங்கள் , அதை மலை முழுவதும் பச்சைப் பசேலென வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம்,உடன் வேப்ப மரங்களும் உண்டு.
சின்னத்தம்பி படப்பிடிப்பு இங்கே நடந்தது, அந்த 108 தேங்காய் உடைக்கும் மண்டப படிக்கட்டில் தான் கருடாழ்வார் சேவை சாதிக்கிறார்.
இங்கே கீழே நீர்வண்ணர் கோவிலில் சாத்துப்படி மண்டபம் மட்டும் இருந்தது, ஊர்காவலன் படப்பிடிப்பு இங்கே நடக்கையில் அதில் நிரந்தரமாக எட்டடி உயர பிரம்மாண்ட அனுமார் சுதை பொம்மையை நிறுவினார்கள்,
அவரை படப்பிடிப்பு முடிந்து அகற்றவில்லை,அவர் அப்படியே இன்றும் அங்கே சேவை சாதிக்கிறார், திருநீர்மலை நீர்வண்ணர்,ராமர், கிழக்கு பாரத்தவர், மேலே ரங்கநாதர் தெற்கு பார்த்தவர், உலகளந்த பெருமாள்,
பால(சாந்த )நரசிம்மர் கிழக்கு பார்த்தவர்கள்,
கீழே தாயார் அனிமாமலர் மங்கை கிழக்கு பார்த்தவர், மேலே ரங்கநாயகி தாயார் கிழக்கு பார்த்தவர் , ஆண்டாள் கிழக்கு பார்த்தவர்,அவர் சந்நிதி மண்டபத்தில் தான் வைகுண்ட
வாசல் உள்ளது,
அற்புதமான பிரார்த்தனை ஸ்தலம் இது, ஸ்ரீரங்கம் போலவே தெற்கு முக ரங்கநாதர் ஆதலால் இதை மத்ய ரங்க ஷேத்ரம் என்கின்றனர்.ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் உண்டு,ஷீர புஷ்கரிணி மிகப் பெரியது, முன்பு படகு சவாரி எல்லாம் இருந்தது.
#திருநீர்மலை,#நீரவண்ணர்,#ரங்கநாதர்,#கல்கிமண்டபம்