யவனிக ( திரைச்சீலை) மலையாளப் (1982 ) படத்தில் வரும் ஒரு புலன் விசாரணைக் காட்சி இது, படம் முழுக்க இப்படி இயல்பான வசனங்கள் இழையோடும், இக்காட்சி ஒரு பதம், படத்தின் இயக்கம் கே.ஜி.ஜார்ஜ் அவர்கள், இப்படம் முழுக்க ஒரு நாடகக் கம்பெனியும் அதன் தபலிஸ்டான, சமீபத்தில் மர்மமாக காணாமல் போன ஐயப்பனையும் சுற்றிச் சுழலும்,
குடிகார தபலிஸ்ட் ஐயப்பனாக பரத்கோபி கலக்கியிருப்பார்,அந்த ஒற்றை நாடி உடல்,தேங்காய் மட்டை போன்ற வழுக்கைத்தலையுடன் எந்த கதாபாத்திரம் ஆனாலும் இறங்கி மிரட்டுவார், குரலில் ஏற்ற இறக்கம் எல்லாம் அப்படி இருக்கும் , இவர் பெரிய வஸ்தாத் வேஷம் போட்டாலுமே நம்பி நாம் கட்டுண்டு விடுவோம்.
படம் முழுக்க அழகியல், எளிய இசை , டார்க் ஹ்யூமர், நடிகர்களின் அபாரமான இயல்பான நடிப்பினால் கட்டமைக்கப்பட்டிருக்கும், படத்தின் இசை எம்.பி.சீனிவாசன் அவர்கள்,ஒளிப்பதிவு ராமசந்திர பாபு அவர்கள்.
இப்படத்தில் மம்முட்டி செய்த இன்ஸ்பெக்டர் ஜேக்கப் ஏரலி கதாபாத்திரம் அப்படி கொண்டாடப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் செய்ய வைத்தது
இந்த ஒரு காட்சியில் தபலிஸ்ட் ஐயப்பனின் மனைவியை இன்ஸ்பெக்டர் விசாரிப்பார்,
நீ ஐயப்பன் பெண்டாட்டி தானே?
அந்த மனுஷனுக்கு நாடு முழுக்க பெண்டாட்டி ஆச்சே சாரே?!!
அப்படின்னா அந்த பெண்டாட்டி கூட்டத்தில் நீ கூட்டு பெண்டாட்டி தானே?,
ஆமாம் ,கூட்டு பெண்டாட்டியே தான்.
இல்லைன்னு சொல்லவா முடியும்? காலன் ஆனாலும் கட்டியவனாச்சே ?
பீடி வலிச்சு தள்ளுவது போல அந்த ஆளுக்கு பெண்கள்,
மனைவியை விசாரித்த பின் ஐயப்பனின் மகன் அசோகன் உள்ளே வருகிறான், அவன், அடிதடி வழக்கில் பல முறை போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கியவன், எதற்கும் அஞ்சமாட்டான்,அப்பன் ஐயப்பனை அறவே ஆகாது,
இன்ஸ்பெக்டர் அவனிடம் ,புட்டத்திற்கு மேல் தூக்கிய வேட்டியை இறக்கி விடச் சொல்வார், பின் அதிகார தொனியில் அவன் உள்ளங்கையை வாங்கி ரேகைகளை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்தவர்,
ஐயம் நீங்காமல் நக்கல் மற்றும் அச்சுருத்தல் தொனியில் கேட்பார், இந்த ரேகைகள் எதற்கு இருக்கிறது தெரியுமாடா?
அசோகன் ஓ தெரியுமே!,கையை மடக்குவதற்கு வேண்டி என்று தெனாவெட்டாக சொல்வார்,
அது இல்லையடா! இது கொலைகாரன் அமைப்பைச் சொல்லும் ரேகைகள்,நீ சமீபத்தில் செய்த கொலையைச் சொல்கிறது, ஐயப்பனைக் கொன்றது நீ தானே?என்பார், அசோகன் அசரவே மாட்டார், என்னை கொலை கேசில் பிடிப்பதென்றால் பிடி சாரே,கவலையேயில்லை என்பார்,
ஜெயில் என்றால் என்ன? அதுவும் ஒரு தண்டனை தானே? என்பார், இன்ஸ்பெக்டர் அசோகனின் சீற்றத்தைப் பார்த்தவர் அவனை கொத்தாகப் பற்றி லாக்கப்பில் வைக்குமாறு வெளியேற்றியவர் விட்டு விடுமாறு சைகை காண்பிப்பார்.
அசோகன் ஏற்கனவே பப்பேட்டாவின் பெருவழிஅம்பலம் படத்தில் கோபக்காரத் தம்பி கதாபாத்திரத்தை அப்படி அருமையாக செய்தவர், தூவானத்தும்பிகள் படத்தில் இவரது "தேவி எலக்ட்ரிகல்ஸ்" வசனம், மூணாம்பக்கம் படத்தில் ஜெயராமின் சித்திவகைப் பெண்ணுடனான காதல் தூண்டில் பேச்சு , அரப்பெட்டா கெட்டிய கிராமத்தில் படத்தில் நண்பர்களுடன் விலைமாது குடில் சென்று அங்கே மனதுக்குப் பிடித்த பெண்ணை இழுத்துக் கொண்டு தப்புவது என எல்லாம் செமயாக
இருக்கும்,
சினிமாவில் முற்பாதியில் சாதித்து விட்டு இப்போது அமைதியாக சிறிய ரோல்களை கம்பெனி ஆள் போல செய்து விட்டுச் செல்கிறார் , 80 களின் சிறந்த மலையாள படங்களை அசோகனை விட்டு விட்டு வரிசைப்படுத்தவே முடியாது,
#கைமடக்கான், #பத்மராஜன்,#பப்பேட்டா,
#கூட்டுபார்யா,#யவனிக,#பரத்கோபி, #அசோகன்,#மம்முட்டி