இந்த அறை உயரம் 12'0",சென்னையின் உச்சி வெயிலிலும் ஏசி இல்லாமல் நல்ல குளு குளுவென இருந்தது, சாதாரண டைல்ஸ், சாதாரண RCC slab மேற்கூரை தான், டிஸ்டெம்பர் சுவர்கள் தான் , வீட்டின் அறையின் உயரம் அதிகமாக இருந்தால் அறைக்குள் நல்ல air circulation, cross ventilation இருக்கும்,
ஐம்பது வருடங்களுக்கு முன்பு சென்னையில் CRN ஆர்கிடெக்ட் வடிவமைத்த பங்களா வீடுகளில் புழுக்க காற்றை வெளியேற்றுவதற்கு கூரைக்கு அடியில் ஒரு சிறிய செவ்வக திறப்பு வைத்திருப்பார்கள், ஆனால் சமகாலத்தில் பெரும்பாலான வடிவமைப்பாளர்களும் கட்டுமானர்களும் அந்த நடைமுறையை நிறுத்திவிட்டனர். மேலும், மேற்கூரைக்குக் கீழே மூன்றடியில் நிலவும் காற்று எந்தத் தட்பமும் இல்லாமல் வெப்பமடைந்து, தேங்கி நின்று வெப்பக் காற்று மண்டலத்தை அங்கே அந்தரத்தில் உருவாக்குகிறது, இதை முறியடிக்கவே அந்த சிறிய செவ்வக திறப்பை பழைய கட்டிடங்களில் அமைத்திருந்தனர்.
அறை உயரம் சற்று அதிகமாக 14'0" வைத்தால் 7'0"மட்டத்தில் loft bed mezzanine அமைக்க முடியும்,இதன் மூலம் குறைந்த plinth area வில் நிறைய floor space கிடைக்கும், ஒரு வீட்டில் இரண்டு தளம் அமைப்பதைக் காட்டிலும் கட்டுமான செலவு குறையும்,ஒரு வீட்டில் புறாகூண்டு போல இரண்டு படுக்கை அறைகள் அமைப்பதற்கு பதிலாக இப்படி ஒரு விசாலமான படுக்கை அறையை கட்டுவது நல்லது.
மிகக் குறுகலான மனையில் வீடு கட்டுபவர்கள் இது போல உயரமான அறை அமைத்தால் நிறைய internal space கிடைக்கும்,7' உயரம் என்பது சராசரி உயரமுள்ள மனிதர்கள் புழங்க ஏற்றது,
இப்படி இணைப்பு படங்களில் உள்ளது போல உறுதியான கருப்பு நிற Hummock போல அந்த உயரமான பாகத்தில் அமைத்துக் கொண்டால் அந்த அறையை முழுக்கவும் பயன்படுத்தியது போலவும் ஆயிற்று, அதில் தொட்டில் போல ஆடலாம், களைப்பாறலாம், கால் நீட்டி படுக்கலாம், இது நைலான் வலை என்பதால் மிகவும் உறுதியானது, காற்றோட்டம், வெளிச்சத்துக்கு குறைவிராது.
தேவை தான் மாற்று சிந்தனையின் சாவி, ஆயாதி மனையடி பார்த்து தயங்கி நின்றால் இப்படி functional ஆக கட்ட முடியாது, படிப்பு,அறிவு , ரசனை எல்லாம் சம்பந்தப்பட்டது இது.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#அறை_உயரம்