போன வாரம் எங்கள் பகுதி transformer ல் மின் அழுத்தம் அதிகம் வந்ததால் எங்கள் வீட்டு ஏசியின் ட்ரிபிள் பூஸ்டர் டைப்ரைட்டர் அடிப்பது போல அதீத சத்தமிடத் துவங்கியது ,
8 வருடங்களுக்கு முன் 7500₹ க்கு வாங்கிய ட்ரிபிள் பூஸ்டர்,Everest brand, நான் ட்ரிபிள் பூஸ்டர் வாங்கக் காரணம் பம்மலின் மின்சார வாரிய ட்ரான்ஸ்ஃபார்மர்களில் இருந்து வரும் அதி உயர் (300 v)அல்லது அதி குறைந்த மின் அழுத்தம்(90v)
90v குறைந்த மின்அழுத்தம் வந்தாலும் ஏசி வேலை செய்யும், compressor இயங்கி அறையை குளிரூட்டும் ,இது வரையில் எங்கள் ட்ரிபிள் பூஸ்டர் ஏசியை சிறு சேதாரமுமின்றி காப்பாற்றியது என்றால் மிகையில்லை.
பழுதான ட்ரிபிள் பூஸ்டரை கழற்றிக் கொண்டு போய் குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் பக்கத்து தெருவில் உள்ள அதன் சர்வீஸ் சென்டரில் தந்தேன், இருங்கள் உடனே பார்க்கிறேன் என்று அரைமணி நேரத்தில் அதன் பழுதாகியிருந்த relay வை மாற்றி கையோடு தந்துவிட்டார் அங்கு பணிபுரியும் ஒரே தொழில்நுட்பவல்லுனர்,
இதற்கு 410₹ ஆனது.
உண்மையிலேயே சரியான வேகம், சரியான கணிப்பு, அங்கேயே தாமதமின்றி பழுது நீக்கி உடனே தந்துவிடுகிறார், அவர் ஒரு மாற்று திறனாளி, தொடர்ந்து வாடிக்கையாளர் கொண்டு வரும் ஸ்டெப்ளைசர்களை பார்த்து உடனுக்குடன் பழுது நீக்கியபடியே இருக்கிறார்,ஒரே ஒரு ரிசப்ஷனிஸ்ட் ,அவர் இன்வாய்ஸ் இட்டு தருகிறார், சரியான after sales பிஸினஸ் மாடல்,இரவு 8-00 மணி வரை பணி செய்கிறார்களாம்.
என் வீட்டில் இரண்டு everest triple booster உள்ளது, இனி வாங்கினாலும் இதே ப்ராண்ட் தான் வாங்கலாம் என நினைக்கிறேன்.
என் வீட்டில் LED டிவிக்கு கூட ஸ்டெப்ளைசர் வைத்து
இணைத்துள்ளேன்,காரணம் இங்கு பம்மல் பகுதியில் அனுமானிக்க முடியாத அதிஉயர் மின் அழுத்தம் அல்லது அதி குறைந்த மின் அழுத்தம் வருவதால் தான்.
இப்போது நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குகையில் இதற்கு ஸ்டெப்ளைசர் வாங்க வேண்டாம் என்பார்கள், ஆனால் நாம் கண்டிப்பாக ஸ்டெப்ளைசர் பொருத்தவே வேண்டும், காரணம் இப்போது நிலவும் use and throw யுகத்தில் தரமான பொருட்கள் தயாராகி வருவதில்லை,first copy ,replica அச்சுருத்தல் , ஆன்லைனில் விற்கும் பெயரெடுத்த பிராண்டின் கழிசடை சாதனங்கள் என ஏகம் பிரச்சனைகள், எத்தனையோ நண்பர்கள் உறவினர்கள் கடைக்காரர் சொன்னதை நம்பி ஸ்டெப்ளைசர் வைக்காமல் நேற்று மழையில் டிவி போய்விட்டது, ஃப்ரிட்ஜ் போய்விட்டது, ஏசி போய்விட்டது என வருந்தக் கேட்டுள்ளேன்.