இன்று மாலை மகா சிவராத்திரிக்கு கெருகம்பாக்கம் திருநீலகண்டேஸ்வரர் மற்றும் ஆதி காமாட்சி திருக்கோயில் சென்று தரிசனம் செய்து வந்தோம்.
நேற்று யோக ஆஞ்சனேயர் கோயில் வாசலில் யாரோ ஒரு பக்தர் சிவ சிவ எழுத சொல்லி இரண்டு தாள்கள் தந்தார்,
இது வரை ராம ராம ,ஸ்ரீ ராமஜயம் மட்டும் எழுதியுள்ளேன்,சிவசிவ எழுதுவது இதுவே முதல் முறை, அதில் இரண்டு தாள்கள் back to back சிவ சிவ என் மனைவிக்கும் சேர்த்து இன்று காலை எழுதிவிட்டு மாலை கோயில் சென்றோம்.,
முதலில் யோக ஆஞ்சனேயர் கோயில் சென்று விட்டே சிவன் கோயில் சென்றோம், மாலை கோயிலில் அத்தனை பக்தர் கூட்டம், ஆதிகாமாட்சி சந்நிதி எதிரே நாங்கள் இரண்டு பேர் நிற்க மட்டும் இடம் இருக்க சரியாக திரை விலகியது, அம்முகிற கூட்டத்தில் அத்தனை எளிதான திவ்ய தரிசனம் எங்களால் நம்பவே முடிவில்லை,சுவாமி தரிசனம் செய்து கோயில் வலம் வந்து பிரசாதம் வினியோகிக்க வாங்கி சாப்பிட்டோம், திவ்யமாக இருந்தது, இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள்.