இரண்டு மாதம் முன்பு வீட்டில் இருந்த நான்கு பழைய 60 வாட்ஸ் மின்விசிறிகளை கழற்றி விட்டு நான்கு 28 வாட்ஸ் BLDC motor மின்விசிறிகளை பொருத்தி இருந்தேன், மீட்டர் ரீடிங்கிற்காக இரண்டு மாதம் காத்திருந்தேன்.
இன்று மின்கட்டணம் ரீடிங் எடுத்த பின் பார்த்ததில் 4 மின்விசிறிகள் சேர்ந்து கணிசமாக 140 units மிச்சம் செய்து தந்துள்ளன, 140 units என்னும் பொழுது 924₹ மிச்சம் ஆகியுள்ளது.
Atomberg Renesa மின்விசிறி விலை 3000₹ வருகிறது, நல்ல வேகம் சுற்றுகிறது, "Super Fan" நிறுவன
bldc மின் விசிறிகளை விட பார்க்க மிகவும் contemporary look ல் அழகாக உள்ளது, காற்று வேகமும் சிறப்பாக உள்ளது,
ரிமோட்டில் மின் விசிறி தானாக அணைய வேண்டிய நேரம் கூட set செய்யலாம்,led விளக்குகளை night lamp போல உபயோகிக்கலாம், இந்த மின் விசிறி 5 ல் ஓடுகையில் அதிக பட்சம் 35 வாட்ஸ் ஆகிறது, மின் தடையின் போது இன்வெர்டரில் மின்விசிறி சுற்றுகையில் இரண்டு மடங்கு நேரம் ஆண்டு வருகிறது.
இந்த மின் விசிறியை ஆன்லைனில் வாங்குபவர்கள் amazonல் வாங்குங்கள் அதில் விலை குறைவாக உள்ளது , கம்பெனி website ல் வாங்கினால் 500 ₹ விலை அதிகமாக உள்ளது, மின் விசிறி வாங்கிய உடன் online ல் serial number ஐ மூன்று வருட உத்திரவாதத்திற்கு register செய்யவும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#bldc_fan,#power_saving,#electricity