எங்கள் மகன் மகள் படிக்கும் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் அபல்லோ மருத்துவமனை out patient அட்டை தந்துள்ளனர், அபல்லோ மருத்துவமனை செவிலியர் எப்போதும் பள்ளி வேலை நேரத்தில் க்ளீனிக்கில் தயாராக உள்ளார்,
இன்று பார்க்கிறேன், பள்ளி வாசலில் எப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்குமாறு நிற்க வைத்துள்ளனர், வேளச்சேரி சன்ஷைன் பள்ளி முழுக்க குளிர்சாதன வசதி செய்யபட்ட பள்ளி, எனவே இந்த குரோம்பேட்டை பள்ளியையும் விரைவில் குளிர்சாதன வசதி செய்வார்கள் என மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்,
ஹவுஸிங் போர்ட் MIG Flats போல இருந்த பள்ளியை international தரத்துக்கு 360° மாற்றி வருகின்றனர், ஒரு பள்ளி தன் மாணாக்கருக்கு quality of campus life தர முன்னெடுக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை,
என் மகளுக்கு இந்த வருடம் +2 என்பதால் இந்த இரண்டு மாதம் மட்டுமே இந்த பள்ளி, என் மகன் ஐந்தாம் வகுப்பு என்பதால் இன்னும் ஏழு வருடங்கள் தரமான பள்ளிக்காலத்தை எதிர்கொள்வான்.