தூக்கம் இன்றி தவிப்பவர்கள், இடைவிடாத எண்ண ஓட்டத்தின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்பவர்கள் வீட்டின் வரவேற்பறையின் சீலிங்கிலும் படுக்கை அறையின் சீலிங்கிலும் காற்றாடி மணிகள் (wind chimes ) வாங்கி மாட்டுங்கள் , இரண்டு அடி உயரம் கொண்டவை ஐநூறு ₹ வரும்,(இந்த range ல் தான் மணியோசை வரும்)
உங்களுக்குள் செய்யப்போகும் மாற்றத்துக்கு இந்த செலவு மிகவும் தகும், எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் இருந்த wind chimes கால ஓட்டத்தில் தொலைந்து விட்டது, நீண்ட நாள் வாங்க நினைத்தும் கைகூடவில்லை, இரண்டு வெவ்வேறு விதமான காற்றாடி மணிகள் ஒரு மாதத்துக்கு ஆன்லைனில் வாங்கி மின்விசிறிக்கு அருகில் இருந்த கொக்கியில் மாட்டி விட்டேன், வரவேற்பறையில் இரண்டு மின்விசிறிக்கு நடுவே இருந்த காற்றாடி மணிகள் அப்படி ஆடி இசை எழுப்பி மனதை இதமாக வைக்கின்றன,படுக்கை அறையில்
a/c blower காற்று அதன் மீது படுகையில் இன்னும் அதிக ஆட்டம், மனதை இந்த இதமான மணியோசை ஒருமுகப்படுத்துகின்றன.படுக்கை அறையில் தூக்கம் வராமல் தவிக்கும் பிரச்சனை எனக்கு எப்போதும் இருந்ததில்லை, இப்போது இன்னும் நல்ல தூக்கம் கிடைக்கிறது,
இந்த காற்றாடி மணிகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், கெட்ட அதிர்ஷ்டத்தை போக்கவும் சீன வாஸ்துவான ஃபெங் ஷுய் பரிந்துரைக்கும் பிரதானமான தீர்வு.
அதிலிருந்து வெளிப்படும் மென்மையான டிங் டிங் சத்தத்தை ஆங்கிலத்தில் tintinnabulation என்கின்றனர் ,
நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டில் நிலைத்திருக்க உதவுகிறது, பணச்செழிப்பை ஈர்க்கிறது. காற்றாடி மணிகள் பயன்பாடு சீனாவில் கிமு 1100 க்கு முந்தையது,
அப்போது குழாய் வடிவ வெங்கல மணிகள் உருவாக்கப்பட்டன. ஆசியா முழுவதிலும் காற்றாடி மணிகள் கோயில்களிலும் புத்த மடாலயங்களிலும் eaves board ன் அடியில் தொங்கவிடப்பட்டு அந்த புனிதம் பாதுகாக்கும் அரணாகவே விளங்கியது.
காற்றாடி மணிகள் எழுப்பும் ஒலி தீய எண்ணங்கள் அதாவது எதிர்மறை ஆற்றலை விரட்டி விடுகிறது , நல்லவர்களை மட்டும் நம் வீட்டில் அழைக்கும் என்று கருதுகின்றனர்.
காற்றாடி மணிகள் நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசு வழங்க ஒரு நல்ல தேர்வு. காற்றின் ஓசையின் ஒலி எவ்வளவு சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக அது வீட்டிற்குள் அதிர்ஷ்டத்தின் நுழைவை ஈர்க்கிறது என்கின்றனர்.
இதன் மூலம் எழும் நேர்மறை ஆற்றல் குடும்ப உறுப்பினர்களை முழுதாக ஆக்கிரமிக்கிறது.வீட்டில் சண்டை சச்சரவு குறையும்,
ஒருவரைப் பீடித்த துரதிர்ஷ்டங்கள் மற்றும் தரித்திரங்களைத் தடுப்பதிலும், வீடு அல்லது அலுவலகத்தில் வசிப்பவர்களிடையே நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதிலும் இந்த காற்றாடி மணிகள் வாஸ்து மற்றும் ஃபெங் சூய் உலகில் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகின்றன, எத்தனை பெரிய காற்றாடி மணிகள் வாங்குகிறோமோ அத்தனை வலுவான இசை எழும்பும், அத்தனை பலன்கள் நமக்கு கிடைக்கும்.
உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகளை வடமேற்குப் பகுதியில் பொருத்த பரிந்துரைக்கின்றனர். மூங்கிலால் செய்யப்பட்ட காற்றாடி மணிகளை கட்டிடத்தின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் தொங்கவிட பரிந்துரைக்கின்றனர்.
ஒருவர் புகழையும் அங்கீகாரத்தையும் அடைய விரும்பினால், இந்த காற்றாடி மணிகளை வீடு அல்லது அலுவலகத்தின் தெற்குப் பகுதியில் மாட்டப் பரிந்துரைக்கின்றனர்.
உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகள் அவற்றின் காலங்கடந்த உழைக்கும் தன்மை மற்றும் அதிக ஒலி, துல்லியம் காரணமாக உலகெங்கிலும் பிரபலமாக உள்ளன.
உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகளை மட்டுமே குறிப்பிட்ட டோன்கள் மற்றும் குறிப்புகளுக்கு டியூன் செய்ய முடியும் என்கின்றனர். உலோகத்தால் செய்யப்பட்ட மெட்டல்காற்றாடி மணிகள் பலவிதமான மெல்லிசைகளில் வருகின்றன,
மேலும் நன்கு பெயரெடுத்த பாடல்கள் மற்றும் இசை விற்பன்னர்களின் இசை தீம்களுக்கு கூட அவற்றை டியூன் செய்யலாமாம்.
உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகள் நீர்ப்புகா தன்மை கொண்டவை, துருவை எதிர்ப்பவை.
tintinnabulation என்ற பெயர்ச்சொல், காற்றில் வரும் மணிஓசை போன்ற அழகிய இசையைக் குறிக்கிறது.
உங்கள் வீட்டில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளுக்கு நிச்சயம் இந்த இசை பிடிக்கும், எடுத்தவுடன் 3000₹ க்கு காற்றாடி மணிகள் வாங்க வேண்டாம், மனைவி திட்டுவார்கள், முதலில் 500₹ யில் தொடங்கி 1000₹ 1500₹ என்று முன்னேறுங்கள்.இது நிச்சயம் நல்ல , நியாயமான செலவு.
ஓசை குறைவாக இருந்தால் சீன ஓட்டை காசு மூன்றை சிகப்பு கயிறில் இணைத்துக் கட்டி பெண்டுலத்தில் கோர்க்கவும், காற்றில் இழுத்து ஆடி நல்ல ஓசை வரும்.
#windchimes ,#காற்றாடி_மணிகள்