இந்தியப் பிரிவினையை அதன் ரணத்தை ரத்தமும் சதையுமாக காண்பித்த தரமான படங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம்,
1998 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் தீபா மேத்தாவின்
1947: Earth , மற்றும் 2000 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கமல்ஹாசனின் ஹேராம்,
இது 1947: Earth படத்திற்கு எல்லா விதத்திலும்,துறையிலும் ஒற்றைக்கு ஒற்றை நின்று பதில் சொன்ன படம், உலக அரங்கில் பெரிய படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் தான் தங்களுக்குள் விவாதிப்பார்கள்,அப்படி நிறைவான படங்கள் .
இந்த 1947: Earth முழுக்க லாஹூர் கதைக்களம், பணக்கார சிந்தி குடும்பம் காரில் கடைவீதிக்குள் மெல்ல ஊர்ந்து செல்கையில் லாஹூரில் வெடித்த பிரிவினை கோஷத்துடன் எதிர்ப்பட்ட பிரிவினையாளர்களால் அக்குடும்பம் பயந்து நடுங்கும் காட்சி.
அது நாள் வரை அமைதியாக இருந்த நகரம், அந்த நம்பிக்கையில் நகருக்குள் கார் பழக எத்தனிப்பார் குடும்பத்தலைவி bunty ( kitu gidwani ) குடும்பத் தலைவர் ரஸ்தோம் கார் பயிற்றுவிப்பார்,
தவறைத் திருத்துவார் , போலியோ பாதித்த மகள் லென்னி பின்னிருக்கையில் இருப்பார்.
கார் மெல்ல கடைவீதிக்குள் நுழையும் அப்படி ஒரு கூட்டம் கொடிகளுடன் திரு திமுவென வரும்,
இவர்களின் கார் மேல் ஏறும், ஒருவன் கார் கண்ணாடியை எட்டி உதைத்து உடைப்பான், இவர்கள் அப்படியே அதிர்ந்தவர்கள் பின்னிருக்கைக்கு நகர்ந்து மகளை கட்டி அரவணைப்பார்கள், எல்லா கூட்டமும் மெல்ல வடிந்து விடும்,
இப்படத்தின் ஒளிப்பதிவு
Giles Nuttgens , ஹாலிவுட்டில் பெயரெடுத்த ஒளிப்பதிவாளர், இவர் தான் தீபா மேத்தாவின் elements trilogy (fire , earth, water ) மற்றும் midnights children படங்கள் ஒளிப்பதிவு செய்தவர், இவருக்கு ஹேராம் படத்தில் தன் ஒளிப்பதிவு மூலம் பதில் சொல்லியிருந்தார் திரு, அது பகீரதப் பிரயத்தனம் என்பார்களே அப்படிப்பட்டது,
சாகேத்ராம் மொகஞ்சதாரோவில் இருந்து கல்கத்தா நீல்கமல் மேன்சன் செல்லும் வழியில் direct action day போராட்டங்கள் வெடிக்கும், அருகில் ட்ராம் ஓடும் , சாலை முழுக்க போராட்டக்காரர்கள் காரின் எல்லா கண்ணாடியையும் மாறி மாறி தட்டுவார்கள்,
கார் கூரையை ஓங்கித் தட்டுவார்கள், தக்காளி அடிப்பார்கள், அதில் ஒருவன் டெய்லர் அல்டாஃப், சாகேத்ராமுற்கு புரியாத மொழியில் அவரின் மனைவி அழகை வர்ணிப்பான்,இவர் விழிப்பார்,
கார் முன்னால் சல்யூட் அடிப்பான், மற்றவர்களை தடுப்பது போல தடுத்துவிட்டு தானே காரை பின்னால் பலமாக அடிப்பான், அவன் பாம்பா பழுதா என புரியாது தவிப்பார் சாகேத் ராம், பின்னால் ஒருவன் சன்னலை தாக்க ,இவர் அவனை கையெடு என மிரட்டுவார், அவன் இன்னும் ஆக்ரோஷம் கொள்ள சமாதான சைகை செய்வார்,நமக்கு வயிற்றைப் பிசையும் காட்சி அது.
kitu gidwani ஐ நமக்கு 90களில் ஜுனூன் ( பிடிவாதம் ) தொடரில் மினி பாட்டியாவாக தெரியும், அவரை ஆளவந்தான் படத்தில் தனக்கு சித்தி ஷர்மிளியாக cast செய்திருப்பார் கமல்ஹாசன்.
#ஹேராம்,#கமல்ஹாசன், #kamalhaasan,#heyram,#partition,#kitu_gidwani,#1947_earth