ஹேராம் படத்தில் பியானோ ஒரு அங்கமாகவே வருகிறது,ஏன்? ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது, இயக்குனர் கமல்ஹாசனுக்கு பழமையான பியானோக்கள் மீது தீராத மோகம் இருக்க வேண்டும்,
சாகேத்ராம் கதாபாத்திரம் ஒரு உல்லாசி, இசை விரும்பி, Art /Antique / Gadget Collector, அவரும் நண்பர்களும் இரவில் கூடும் கராச்சி காஸ்மபோலிட்டன் க்ளப்பில் ஜெர்மனி நாட்டின் தயாரிப்பான steck pianola வகை upright பியானோவை வாசிப்பார். (இவ்வகை பியானோவை சுவரை ஒட்டி போடுவார்கள் , இடம் அதிகம் தேவையில்லை )
கல்கத்தா திரும்பியவுடன் தன் வீட்டில் விஸ்தாரமாக வாங்கி வைத்துள்ள Playel Grand பியானோவை வாசிப்பார்,( இவ்வகை பியானோவை பெரிய கூடத்தின் நடுவில் போடுவார்கள்,விலை அதிகம் , இன்றைய ஏலம் போகும் விலை இரண்டு லட்சம் ரூபாய் வரும் )
Playel பியானோ கம்பெனி 200 ஆண்டுகள் பழமையானது, இவர்கள் 2013 ஆம் ஆண்டுடன் பியானோ தயாரிப்பை நிறுத்திக் கொண்டனர், சாகேத்ராம் வாசிப்பது 1926 ஆம் வருட மாடலாக இருக்க வேண்டும்,
புகழ்பெற்ற போலந்து நாட்டு இசையமைப்பாளர் Frédéric Chopin ( 1810-1849) இந்த pleyel பியானோவில் மட்டுமே வாசிப்பாராம், இசையமைப்பாராம்,
அவர் இப்படி புகழாரம் வாசிக்கிறார்.
"Pleyel pianos are the last word (இறுதி முடிவு ) in perfection."
ஹேராம் படத்தில் இந்த Playel பியானோவின் சாகேத்ராமும் அபர்ணாவும் சேர்ந்து வாசிக்கையில் இனிய காதல் ஸ்வரம் இதமாய் ஒலிக்கும்,
அல்டாஃப் மற்றும் கும்பல் சாகேத்ராமை தலைதிருப்பி இதில் கட்டிப் போட்டிருக்க இவர் முரண்டு பிடித்து உடம்பைத் திருப்ப,அவர் மூக்கும் காது மடலும் கட்டையில் நன்கு அழுந்துகையில் அபஸ்வரம் படு நாராசமாக எழும்பும்.
மிகுந்த எடையும் , நீள அகலமுமுள்ள இதே பியானோவை அந்த நீல் கமல் மேன்சனின் முதல் தள பால்கனியின் குழாயில் அமைந்த ராட்டினத்தில் கயிறு கட்டி அதை முரட்டுத்தனமாக இறக்குவார்கள் சுமைதூக்கிகள்,
அது கட்டிட சுவற்றில் மோதும் ஒலியில் கீழே நின்று பார்க்கும் சாகேத் ராமின் நெஞ்சு படபடக்கும், அங்கிருந்து விலகி காரில் ஏறிவிடுவார், அந்த பியானோ தான் சவமாகிவிட்ட அபர்ணா,அதை நலம் கெட புழுதியில் எறிவது போல மேலே இருந்து ராட்டினத்தை விட்டுவிடுவர் , அது தடாலென கீழே விழுந்து மூன்று கால்களும் உடைபடும்.
காரினுள் அமர்ந்த சாகேத் ராம் ட்ரைவர் சலோ என்பார்,
டிரைவர் பெங்காலியில் பால் பதகுலோ? (உங்கள் பொருட்கள் ) என்பார்.
இவர் கற்கும் புது மொழி அவசரத்தில் பதிலளிக்க கை தராததால் தமிழில்,
ஐயா,அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்யா,என்னை இங்கிருந்து கொண்டு போய்டு என்பார்,
அவர் தமிழ் புரியாமல் ஜீ என்பார்,
"Please take me out of here "என்று கையை பிசைந்து குரல் தழுதழுக்க இதைச் சொல்வார்,
இந்த ஓட்டம் அபர்ணாவிற்கு கொள்ளி வைத்து விட்டு,நடந்த அவலத்தை நம்பமுடியாமல், தாங்கமுடியாமல் திரும்பிப் பார்க்காமல் இவர் விரைவது போலவே இருக்கும்.
#ஹேராம்,#Heyram, #கமல்ஹாசன்,#kamalhaasan, #playel_piano,#grand_piano,#upward_piano