ஹேராம் படப்பிடிப்பை நடத்த பிர்லா ஹவுஸ் என்ற காந்தி ஸ்மிரிதி வளாகத்தில் படக்குழுவுக்கு அனுமதி கிடைத்து விட்டது என்றாலும் , அதில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின் அமைக்கப்பட்ட அஸ்தி மண்டபம், காந்தியின் பாதச் சுவடு வார்ப்புகள் ஆகியவை கடந்த கால காட்சிகளை எடுக்க தடையாக இருந்தது,
மேலும் படக்குழுவை அவசர அவசரமாக பணி செய்ய முடியாதபடி ஜீலை மாத 45டிகிரி கொடிய வெயில் வேறு, எப்போதும் படக்குழுவின் நலனைக் கருத்தில் கொள்ளும் இயக்குனர் கமல்ஹாசன் சற்றும் தாமதியாமல் Production Director சாபுசிரிலைக் கொண்டு ஊட்டியில் அதே போன்ற பிர்லா ஹவுஸை நிர்மானித்தும் விட்டார்,
சுமார் 300 பேர் மொத்தம் பிரதான நடிகர்கள், துணை நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள் என்று, அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்த முடியாத படிக்கு 150 பேருக்கு குளிர் ஜுரம் பிடித்து விட்டதாம், அவர்களுக்கு தொடர் சிகிச்சைகள்,சிருஷைகள், மருந்து மாத்திரை ஊசிகள் என சுமார் ஆறுநாட்கள் கால தாமதமாகியதாம்,
பின்னர் படக்குழு ஒருவழியாக படப்பிடிப்பை துவக்கினால் ஊட்டியில் கடும் மழை பீடித்ததாம் , கேமரா நனையாமல் காபந்து செய்து எடுக்கப்பட்ட காட்சிகளைத்தான் நாம் பார்த்தோம்,பிரம்மப் பிரயத்தனப்பட்டு தான் இந்த பிர்லா ஹவுஸ் படப்படிப்பை நடத்தி முடித்தார்.
அதில் ஒரு perfection ஐ கவனித்தேன், பிர்லா ஹவுஸ் இன்று காந்தி ஸ்மிரிதி ஆகிவிட்டது, பழைய முகவரி #5, Albuquerque Road,
புதிய சாலையின் பெயர் தீஸ் ஜனவரி சாலை (Teez January Road ) என்று மாறிவிட்டது அதாவது 30 ஜனவரி (காந்தி கொல்லப்பட்ட நாள் ),
இந்த "ஜனவரி 30" என்று செக்யூரிட்டி கூடாரத்தின் உள் இருக்கும் pears soap 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காலண்டர் காட்டும், அதை focus செய்து fade செய்திருப்பார்.
இப்படத்தில் அழகாக பழைய சாலையின் பெயர் பலகையை நொடியில் கடக்கிற ஒரு காட்சியில் மிகத் துல்லியமாக வைத்திருக்கிறார் பாருங்கள், இன்று எதையும் எளிதாக தேடி எடுத்து விட முடிகிறது, அன்று இத் தகவல்களை தேடி எடுக்க ஒருவர் பிரம்ம பிரயத்தனப் பட வேண்டும்.
வரலாற்றை திரிப்பது மிக எளிது, அதை இப்படி டிகிரி சுத்தமான perfection ல் காட்டுவது மிக மிக கடினம்.
ஹேராம் படம் எடுக்கையில் நீளம் ஆறு மணி நேரம் வந்துள்ளது, அதை எடிட்டிங்கில் பாதியாக குறைத்துள்ளனர், எவ்வளவு உழைப்பு எவ்வளவு தகவல்கள் அந்த வெட்டப்பட்ட மூன்று மணி நேரத்தில் போயிருக்கும்?!
PS: கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது இது
Q: In which locations did you shoot the movie?
A: Delhi, Calcutta, Chennai and Ooty. In Ooty we recreated the Birla House by erecting a set which exactly resembles the Birla House (Art director Sabu Cyril). In July, Delhi is too hot so we opted for erecting a set in Ooty. Likewise we recreated the Calcutta streets in the airconditioned studio floors in Chennai.
#ஹேராம், #கமல்ஹாசன்,#heyram, #kamalhaasan, #birla_house,#gandhi_smriti