ஹேராம் படத்தில் நடிகர் டெல்லி கணேஷ் , சாரி என்ற இந்துத்வா தலைவன் கதாபாத்திரத்தில் வருவார், எதிராளியிடம் நைச்சியமாகப் பேசி நொடியில் கழுத்தறுக்க வரும் கதாபாத்திரம், வார்த்தைகளில் கனிவும் சாந்தமும் கூடவே அதிகார தொனியும் வெளிப்படுத்தும் முரட்டு ஆசாமி.
இவர் கூட்டி வரும் குழுவில் இருக்கும் ஒற்றைக் கண் சோட்டுவுக்கு ஒற்றைக் கண்பார்வை , ஆதலால் ஒரு அவசரகுடுக்கையும் கூட , எதிரே நிழலாடினால் கூட எதிராளி தன்னைக் கொல்ல ஆயுதம் தான்
எடுக்கிறான் என்று சம்மட்டியைத் தூக்கி ஒரே போடு தான்,
இப்படித்தான் அம்ஜத்தை சாகேத்ராம் , இவன் பரத் என் தம்பி,முஸ்லிம் பெண்ணை விரும்பி இங்கே ஓடி வந்துவிட்டான்,புத்தி சுவாதீனமில்லை, மதம் மாறிடப் போறானேன்னு தான் வீட்டுக்கு கூட்டிப் போக வந்தேன் , அதனால் தான் இந்த வேஷம்,வாடா வீட்டுக்குப் போகலாம், என்று விளக்கம் தர,
சாரி, அதை நம்பாமல் அம்ஜத்தா? பரத்தான்னு? அவுத்துப் பார்த்தா தெரியப்போகுது என்றவர் லக்ஷ்மண் என்பார், (ஆனால் சோட்டு தான் அம்ஜத்தின் அருகில் சென்று தயாராக நிற்பான் )
அம்ஜத் ,அவமானப்படுத்த எல்லாம் வேண்டாம் நான் ராமின் தம்பி , ஆனால் பரத் இல்லை அம்ஜத், அம்ஜத் அலிகான், and if you want add bahadhoor (வீரம் பொருந்தியவன், சிறந்தவன் ) என்று முடிப்பதற்குள் பின்னால் சம்மட்டியுடன் இருந்த சோட்டு அம்ஜத் பின்னந்தலையில் ஓங்கி சம்மட்டியால் அடித்துவிடுவான், அம்ஜத் தலையைப் பிடித்தபடி சரிவார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ராம் சோட்டுவை சுட்டு விடுவார், அது சாகேத்ராமின் பட்டறையில் weapon modification செய்து பிரத்யேகமாக சிலிண்டர் பேரலில் வால்வ் pressure கூட்டப்பட்ட துப்பாக்கி , சோட்டு சம்மட்டியுடன் எகிறிப் போய் விழுவான், சோட்டு தான் சாகேத்ராம் கையில் ஏந்திய Mauser Broom handle வாங்கிய முதல் பலி,
சாரி, மெல்ல பைரவ்?! என்பார்.
சாகேத்ராம் போய்டுங்கோ, எல்லோரும் போய்டுங்கோ என்பார்,சாரி, எங்களை, எங்களை எங்கே போகச்சொல்றிங்க?, அவங்க அல்லவா போகணும்? என வியாக்யானம் பேசிக் கொண்டே விருட்டென்று பெரிய கத்தியால் சாகேத் கழுத்தை அறுக்க வருவார்,
சாகேத் ராம் மீண்டும் சுடுவார், சாரியின் வயிற்றில் பாய்ந்த குண்டு pressure மிகுதியால் பின்னால் நின்ற பெண்தரகன் கோவர்த்தனின் வயிற்றிலும் பாயும், சாரி உடனே சாவார், கோவர்த்தன் மருத்துவமனையில் பைரவ்வை பற்றி (சாகேத்ராமை ) மரண வாக்குமூலம் தந்து விட்டு சாவார்.
PS: படத்தில் Live Recording ஆதலால் வசனங்கள் surround system வைத்துப் பார்க்காவிட்டால் சரியாகப் புரியாது, திரும்பத் திரும்ப கேட்க வேண்டும், பலவற்றை தேடிப் படிக்கவும் வேண்டும்.
சாரி , தில்லி சாந்தினி சௌக்கின் ஆசாத் சோடா ஃபேக்டரிக்குள் வசமாக சிக்கிக் கொண்ட பெண் தரகன் கோவர்தனின் டெலிபோன் புகாரால் அங்கு தன் பரிவாரங்களுடன் வருவார்.
சாகேத்ராமைப் பார்த்தவுடன் Are you from Gwalior unit ? என்று கேட்பார்.
( மகாத்மா காந்தியைக் கொல்ல குவாலியரில் இருந்து வந்த நாதுராம் கோட்சேவோ என்று இவரை எண்ணியவர் அந்த ஆர்வத்துடன் கேட்பார் )
Gwalior unit என்பது நாதுராம் கோட்சேவுக்கு இத்தாலிய
துப்பாக்கியான (Beretta M1934 semi-automatic pistol ) (.380 ACP caliber ) தோட்டாக்கள் மற்றும் நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட Surya Deo Sharma வின் இந்து தேசியப் படையைக் குறிக்கும் குறிச்சொல்,
Surya Deo Sharma குவாலியர் மகாராஜா Jiwaji Rao Scindhia வின் அரசவையில் முக்கிய தளகர்த்தர், மகாத்மா காந்தி கொலையில் குற்றப்பத்திரிக்கை வலுவாக இல்லாததாலும் நாதுராம் கோட்சே, தான் ஒருவனே இந்த படுகொலையைச் செய்தேன் என்று நீதிமன்றத்தில் திரும்பத் திரும்பச் சொன்னதாலும் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
#ஹேராம், #கமல்ஹாசன், #குவாலியர்_யூனிட்,#heyram,#kamalhaasan,#Gwalior_unit